No video

369. இது ஆச்சரியமா இருக்கே ! நாலு வார்த்தையை திருப்பித் திருப்பி சொல்றதால எல்லா நன்மையும் தருமா ???

  Рет қаралды 10,757

Yogi Ramsuratkumar Glimpses

Yogi Ramsuratkumar Glimpses

3 жыл бұрын

Dated - 7th June 2021
Papa Ramdas Tamil Text:
ஆழம் காண முடியா வாழ்கைக் கடலில் மூழ்கி எழுந்தேன்...
காணற்கரிய ரத்தினம் கண்டேன்...
அதுவே நின் நாமம்...
அமிர்ததை எல்லா ஊற்றுகளிலும் அள்ளிக் குடித்தேன்...
ஆயின் எது வரை நின் நாமஇனிமையை சுவைக்கும் வரையில் தான்...
வானில் உற்று நோக்கினேன்
சூரிய சந்திர நட்சத்திர ஒளிகளை...
ஆயினும் எதுவரை...
எதிலும் கண்டேன் இல்லை நின் நாமத்தின் பேரொளி...
வகை வகை இசை வண்ணங்கள் அள்ளிக் குடித்தேன்...
அள்ளிக் குடித்தன என் காதுகள்...
வகை வகை இசை திரிபுகள் அள்ளிக் குடித்தன என் காதுகள்...
ஆயின் எதுவரை
நின் நாமத்தின் மயக்கும் தந்த இசையில் எதிலுமே இல்லை...
அதிலும் இதிலும் எதிலும் அடைக்கலம் பெறவே தேடி தேடி சென்றேன் ஆயின் பூரண அடைக்கலம் நின் நாமத்தில் மட்டுமே கண்டேன்..
சிறிதிலும் பெரிதிலும் ஆனந்தம் தேடி
பெருமுயற்சி செய்தேன் இப்போது நிரந்தர பேராசியை நின் நாமத்திலே பெற்றேன்..
Seshadri Swamigal Conversation:
ஜபம் செய்தால் என்ன கிடைக்கும் ???
திருவண்ணாமலை சேஷாத்ரி ஸ்வாமிகள் வாழ்க்கையில் ஒரு நாள், ஒருவர் இடை விடாது மந்த்ரம் சொல்லிக் கொண்டுள்ள சேஷாத்திரி ஸ்வாமியிடம் அணுகி, "என்ன செய்கிறாய் ? சேஷாத்ரி " எனக் கேட்டார்.
"கர்மா ஒழிய வேண்டும் ", அதற்காக மந்த்ர ஜபம் செய்வதாக சேஷாத்ரி ஸ்வாமி கூறினார்.
ஒரு லட்சம் ஆவிருத்தி ஆயிருக்கு. இன்னும் ஒரு அரை லட்சம் பண்ண வேண்டி இருக்கு. மந்திரம் சொல்லிச் சொல்லி கர்மாவை அழிக்கலாம்.
வாழ்க்கைப் போக்கையே மாற்றிவிடலாம். மந்த்ர ஜபம் மனசை சுத்தம் பண்ணும். மனசு சுத்தமாயிடுச்சுன்னா போதும்.....நீங்க என்ன கேட்டாலும் கிடைக்கும். "
இது ஆச்சரியமா இருக்கே ! நாலு வார்த்தையை திருப்பித் திருப்பி சொல்றதால எல்லா நன்மையும் கொண்டு வந்து தருமா ???
அது வெறும் வார்த்தையல்ல.
கந்தகம் என்பது ஒருவகை மண்ணு.
அது வெடிமருந்தா மாறலயா?
அந்த மாதிரி சில குறிப்பிட்ட வார்த்தைகள் உள்ளுக்குள்ள மாறுதல் நிகழ்த்தும்.
மந்த்ரம் சொல்லச்சொல்ல மனசு ஒருமுகப் படும். ஒருமுகப்பட்ட மனசுக்கு நிறைய சக்தி உண்டு. "
வெறுமனே சந்தேகப்படாம உடனே மந்திரம் சொல்ல ஆரம்பிக்கணும்.
உனக்கு என்ன ஆயுசு விதிச்சிருக்கோ தெரியாது.
அதனால இந்த ஆயுசிலேயே நல்லது கிடைக்க மனதில் தெளிவு கிடைக்க இப்பவே மந்திரம் சொல்ல ஆரம்பி. "
ஒருமணி நேரத்துக்குமேல ஜபம் பண்ண முடியலையே சேஷாத்ரி. அந்த ஒருமணி நேரமும் மனசு எங்கெங்கோ சுத்துறதே " ஆர்வமுள்ளவர்கள் ஆவலுடன் கேட்டார்கள்.
பண்ணிதான் ஆவேன்னு உட்கார்ந்துடணும். அதுக்குப்பேர் தான் வைராக்கியம். என்ன தடுத்தாலும் , எது குறுக்கிட்டாலும் தினம் ஒருமணி நேரம் ஜபம்கறதை ஆரம்பிச்சுடணும் சிரத்தையா பண்ண ஆரம்பிச்சுட்டா ஒருமணி நேரம் போறாது.
மனசுக்கு பசிக்க ஆரம்பிச்சுடும். இன்னொரு மணிநேரம் பண்ணு. இன்னொரு மணி நேரம் பண்ணுன்னு அதுவா கேட்கும் ஆரம்பத்தில் ஆர்வம் இருக்காது,
ஆனால் கஷ்டப்பட்டு ஆரம்பிச்சுட்டா ஆர்வம் அதிகமானாலும்.
நான் ஏழு வயசிலேயே கார்த்தாலே 1 மணிநேரம், சாயந்தரம் 1 மணிநேரம் ஜபம் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.
அதனாலே கணக்கோ பாட்டோ பூகோளமோ, இங்கிலீசோ பள்ளிக்கூடமோ முக்கியமில்லைனு ஆயிடுத்து .
காசை விட ஜபம் தான் முக்கியம்னு போயிடுத்து.
எல்லா அபிலாஷைகளும் ஜபத்தால் நடக்கும்கறபோது வேற இங்கு செய்ய
என்ன இருக்கு. மனசு கேட்க, கேட்க ஜபம் பண்ணிண்டே இருக்கேன்.
என் மனசுக்கு பசி அதிகம் எத்தனை சாப்பிட்டாலும் நிரம்பாத வயிறு மாதிரி எத்தனை ஜபம் பண்ணினாலும் மனசுக்கு பத்தல . பன்னெண்டு மணிநேரம் பண்றேன்.
ஜபம் பண்ணி என்ன கிடைச்சுது ???
சேஷாத்ரி ஸ்வாமிகள் சொல்கிறார் --
எனக்கு என்ன கிடைச்சுதுங்கறது முக்கியமில்லடா. நான் ஒரு பொருட்டில்லை. என்ன கிடைக்கும்னு கேள்!
படிப்படியா விளக்கிச் சொல்றேன். தினம் ஒருமணிநேரம் ஜபம் பண்ணினா, மனசு அமைதியாகும். கோபம் குறையும். இதைவிட அதிகமா பண்ணினா கோபம் அறவே போறதுக்கு வாய்ப்பிருக்கு.
காலைல ரெண்டு மணிநேரம், சாயந்தரம் ரெண்டு மணிநேரம் பண்ணினா காதில் இனிமையான சங்கீதம் கேட்கும்.
உடம்பு இறகுபோல லேசா இருக்கும்.
நோய் உபத்திரவாதங்கள் இருக்காது. உணவு கவனமா சாப்பிடத் தோணிடும். ருசிக்கு நாக்கு அலையாது. உணவு குறைஞ்சு உள்ளம் பலமாயிடும் !
கார்த்தாலே மூன்று மணிநேரம், சாயந்தரம் மூன்று மணிநேரம் ஜபம் பண்ணினா, முகத்துல மாறுதல் உண்டாகும். கண் கூர்மையாகும்.
உடம்பிலே இருந்து தேஜஸ் விசிறி விசிறி அடிக்கும். நாம் சொல்லும் வாக்கு பலிக்கும்.
எட்டு மணிநேரம் ஜபம் பண்ணினா, நீ வேற மந்த்ரம் வேற இல்ல. நீயே மந்திரமா மாறிடலாம். அதற்கப்புறம் நடக்கறதெல்லாம் ஆனந்தக் குதியல் தான்.
எதை பார்த்தாலும் சந்தோஷம் தான். பசிக்காது. தூக்கம் வராது. யாரையும் அடையாளம் தெரியாது.
மனசு கட்டுலேயிருந்து விடுபட்டு ஸ்வாமி கிட்ட நெருக்கமா போய்டலாம். அப்புறம் அதுவே உன்னை இழுத்துண்டு போய்டும். இன்னும் உக்கிரமா ஜபம் செய்ய,
அந்த சக்தியே கூட்டிண்டு போய்டும்.
நீ உன்னோட கட்டுப்பாட்டில் இருக்கமாட்டே. முழுக்க முழுக்க ஸ்வாமிகிட்ட சரணாகதி ஆயிடுவே
அப்ப நீ என்ன கேட்டாலும் கிடைக்கும். இதுல பெரிய சந்தோஷம் என்ன தெரியுமோ ??? உனக்கு வேணும்கறது ஒவ்வொன்றும் பகவானா பார்த்து, பார்த்துக் கொடுப்பார்.
உன் வார்த்தையெல்லாம் கடவுளுடைய வார்த்தை. உன் செய்கையெல்லாம் கடவுளுடைய செய்கை. "
" எட்டு மணிநேர ஜபத்துக்கப்புறம் என்ன ?
எல்லா நேரமும் ஜபம் பண்ண னும்னு தோணிடும். எட்டு -இருபத்தி நாலா மாறிடும். அதுல இன்னும் உக்கிரம் வந்துடும்..
மந்த்ர ஜபம் என்பது கற்றுக் கொள்வதில் இல்லை!
பூஜை என்பது சொல்லித்தந்து செய்வது அல்ல. உள்ளிருந்து பீறிட வேண்டும். தன்முனைப்பாக கிளர்ந்து எழுந்து அதற்குள் தானே மயங்கிச் சரிதல் வேண்டும். சடங்காக செய்கிறபோதும், எதிர்பார்த்து உட்காரும் போதும் செய்கிற விஷயத்தின் வீர்யம் குறைகிறது.
சுவாசம் போல இயல்பாக மாறிய செயல் தான் உன்னத நிலைக்கு அழைத்துச் செல்கிறது....
ஸ்ரீ சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் திருவடிக்கே!!!
Tags:
#yogiramsuratkumarglimpses
#yogiramsuratkumar
#madevaki

Пікірлер: 84
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,5 МЛН
小丑和奶奶被吓到了#小丑#家庭#搞笑
00:15
家庭搞笑日记
Рет қаралды 8 МЛН