கோவா சுற்றுலா வழிகாட்டி(GOA GUIDE FOR TOURIST)

  Рет қаралды 2,001

WORLD IN YOUR HAND

WORLD IN YOUR HAND

5 жыл бұрын

கோவா நகரம் போர்துகீசியர்களின் ஆளுகையின் கீழ் இருந்ததால் அதன் வாழ்வு முறையில் போர்த்துகீசிய பாதிப்பு பளிச்சென தெரிவதை இங்கு முதல் முதலாக வரும் பயணிகள் கட்டாயம் உணர்வார்கள். இந்த நகரத்தில் வாழும் மக்கள் தங்களின் பாரம்பரியத்தின் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர்கள். அதன் காரணமாகவே இந்நகரத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றிக் கொண்டிருக்கும் கட்டிடங்களையும், அடையாளச் சின்னங்களையும் கவனத்துடன் சிறந்த முறையில் பராமரித்து வருகிறார்கள். மேலும், பாங்காக், இபிஸா போன்ற உலகப் புகழ்பெற்ற கடற்கரை பிரதேசங்களுக்கு செல்வது போலவே கோவாவுக்கும் உலகம் முழுவதிலுமிருந்தும் பயணிகள் சுற்றுலா வருவதற்கு விரும்புகிறார்கள். கோவாவில் ஒரு முழுநாள் எப்படி நகர்ந்து செல்லும்? கோவாவின் வடக்கு திசையில் உள்ள கேண்டலிம் கடற்கரைக்கோ, தலைநகர் பனாஜிக்கோ காலை வேளையில் சென்று பாரம்பரிய கடற்கரை உணவை ருசிப்பதிலிருந்து தொடங்கும் அன்றைய நாள் மிகச் சிறந்த ஆரம்பமாக இருக்கும். அதுவும் கோவாவை போன்ற நாட்டின் ஒரு சில இடங்களில் தான் நீங்கள் பீருடன் காலைச் சிற்றுண்டியை எடுத்துக் கொள்ள முடியும். மேலும், கேண்டலிம் நகர வீதிகளில் நீங்கள் காலாற நடந்தும் செல்லலாம், இல்லையேல் மோட்டார் சைக்கிள் வேண்டுமானாலும் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். இதற்கு 250 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படும். எனவே நீங்கள் காலைச் சிற்றுண்டிக்கு செல்லும் வழியில் உள்ள தெருவோரக் கடைகளில் மலிவு விலைகளில் தரமான பொருட்களை வாங்கிச் செல்லலாம். இங்கு டீ-ஷர்ட்டிலிருந்து, சன் கிளாஸ்கள் வரை எதுவேண்டுமானாலும் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் கேண்டலிம் மற்றும் அஞ்சுனா கடற்கரைகளில் சனிக்கிழமைகளில் மட்டுமே காணக்கூடிய செகண்ட் ஹெண்ட் மார்க்கெட் மிகவும் பிரபலம். கேண்டலிம் பகுதியில் மட்டும் கலங்கூட், பாகா, கேண்டலிம் என்று மொத்தம் 3 கடற்கரைகள் இருக்கின்றன. இந்தக் கடற்கரைகளில் தரகர்கள் மற்றும் முகவர்களை தொடர்பு கொண்டு ஜெட்ஸ்கை, பனானா ரைட் என்று நீங்கள் உங்களுக்கு விருப்பமான நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டு பொழுதை கழிக்கலாம். அதோடு ஏதேனும் ஒரு கடற்கரை குடில்களில் பீரை அருந்திக் கொண்டே கோவான் கடற்கரை உணவை ருசிக்கும் அனுபவம் மிகவும் அலாதியானது. இதில் பிரிட்டோஸ் என்ற குடில் பாகா கடற்கரையில் உள்ள குடில்களில் மிகவும் புகழ்பெற்றது. இந்த மூன்று கடற்கரைகளிலிருந்தும் முற்றிலும் வேறு ஒரு உலகத்துக்கே உங்களை அழைத்துச் செல்வது அஞ்சுனா கடற்கரையாகத்தான் இருக்க முடியும். இங்கு நீங்கள் உலகப் புகழ்பெற்ற ஜாயின்ட் கர்லிஸ் உணவகங்களுக்கு சென்று வித்யாசமான உணவு வகைகளை ருசி பார்க்கலாம். அதுமட்டுமில்லாமல் அமைதியின் இருப்பிடமான அஞ்சுனா பீச்சில் நீங்கள் புத்தகம் படிப்பது, வாக்மேனில் பாடல்கள் கேட்பது, மடிக்கணினியில் ஃபேஸ்புக் பார்ப்பது போன்று உங்களுக்கு பிடித்தமான வேலைகளில் ஈடுபடலாம். மேலும், மற்ற கோவா கடற்கரைகளை போலவே, அஞ்சுனா பீச்சிலும் ஏராளமான குடில்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக கர்லிஸ் உணவகங்களில் ஹக்கா விரும்பிகளின் கூட்டம் அலை மோதும். மந்தமான தெற்கு கோவா கோவாவின் மற்ற பகுதிகளோடு ஒப்பிடுகையில் தெற்கு கோவா பரபரப்பில்லாத வாழ்க்கை முறையையே கொண்டுள்ளது. இந்த பகுதிகளில் புகழ்பெற்ற தேவாலயங்கள் சிலவற்றையும், அமைதியான கடற்கரைகளையும் நீங்கள் பார்த்து ரசிக்கலாம். மேலும், கோவாவின் பிரசித்தி பெற்ற கடற்கரைகளில் ஒன்றான கோல்வா பீச்சும் இந்தப் பகுதிகளில்தான் இருக்கிறது. கோவாவின் பரபரப்பான வாழ்க்கை முறையை விரும்பாத குடும்பங்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் தங்களுடைய விடுமுறையை கழிக்க தெற்கு கோவா மிகச் சிறந்த தேர்வாக இருக்கும். கேளிக்கை விரும்பிகளின் சுவர்க்கம் கோவாவின் மாலை நேரம் முழுவதுமாக கேளிக்கை விரும்பிகளின் சுவர்கமாக மாறிப்போயிருக்கும். இந்த நகரத்தின் இரவு விடுதிகளிலும், பப்களிலும் அதிகாலை மூன்று மணி வரை பாடல்களின் ஒலி காதை துளைக்கும். அதிலும் குறிப்பாக வடக்கு கோவாவில், கலங்கூட் பீச்சுக்கு அருகே உள்ள கஃபே டிட்டோஸ் மற்றும் மாம்போஸ் இரவு விடுதிகளில் கேளிக்கை பிரியர்களின் கூட்டம் நிரம்பி வழியும். அதுமட்டுமல்லாமல் இந்த வீதிகளில் நீங்கள் காலாற நடந்து சென்றால் ஏராளமான தெருவோர பப்களும், மதுக் கடைகளும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பதை பார்க்கலாம். இதில் உங்களுக்கு பிடித்த ஏதாவதொரு பப்புக்கு சென்று பாடல்களில் லயித்தபடியே மதுவை அருந்தலாம். இதுதவிர சில கடற்கரை குடில்களிலும் இரவு விருந்துகள் கோலாகலமாக நடந்தேறிக் கொண்டிருக்கும். ஆனால் நகரத்தை வீட்டு நெடுந்தூரம் கடற்கரைகளில் செல்வதால் திரும்பி வர கேப் வசதிகள் ஏதுமின்றி நீங்கள் தடுமாறும் நிலை ஏற்படலாம். கோவாவுக்கு ஓர் பயணம் கோவா ஒரு சுற்றுலாத் தலமாக அற்புதமான விடுமுறை கால கொண்டாட்டமாகவும், அடைவதற்கு சுலபமான இடமாகவும் இருக்கிறது.
goa beach calangute,
goa beach goa beach,
goa beach scene,
goa beach all,
goa beach airport,
goa beach and hotels,
goa beach baga,
goa beach beauty,
goa beach best,
goa beach banjara,
goa beach candolim,
goa beach club,
goa beach city,
goa beach couple,
goa beach details,

Пікірлер
கோவா வெறும் 8000 ரூபாயில்
15:23
Benny planet
Рет қаралды 12 М.
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 15 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 50 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27