கை, கால் செயலிழந்து உதவி கேட்டு கெஞ்சும் பிரபல காமெடி நடிகர் -வறுமையின் கோரம்..கண் கலங்கவைத்த வீடியோ

  Рет қаралды 39,727

Thanthi TV

Thanthi TV

4 күн бұрын

கை, கால் செயலிழந்து உதவி கேட்டு கெஞ்சும் பிரபல காமெடி நடிகர் -வறுமையின் கோரம்..கண் கலங்கவைத்த வீடியோ
நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் இணைந்து நடித்த துணை நடிகர் வெங்கல்ராவ், கை, கால்கள் செயலிழந்து வீட்டில் முடங்கி கிடக்கும் சோகத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
தமிழ்த் திரைத்துறையில் நகைச்சுவை ஜாம்பவனாக வலம் வரும் வடிவேலுவால் பல சிறிய நடிகர்களுக்கு திரைத்துறையில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதேநேரம் வடிவேலுவின் சினிமா பயணத்தில் சின்ன பிரேக் விழுந்த போது அவரை சார்ந்த பலருக்கும் வாய்ப்புகள் கைநழுவிப்போயின..
அதில் ஒருவர் தான் ஆந்திராவை சேர்ந்த வெங்கல் ராவ்...
வடிவேலுவுடன் பல நகைச்சுவை காட்சிகளில் நடித்த வெங்கல்ராவ், முதன் முதலில் திரையுலகில் ஃபைட் மாஸ்டராக என்ட்ரி கொடுத்தவர்.
சுமார் 25 வருடமாக ஃபைட் மாஸ்டராக இருந்த வெங்கல்ராவ், நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், தர்மேந்திரா உள்ளிட்டோருடன் சண்டை காட்சிகளில் நடித்தவர்.
பின்னர் சண்டை காட்சி ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் இருந்து மீண்ட பின்பு, ஃபைட் மாஸ்டராக பணிபுரிய உடல் ஒத்துழைக்காததால், நடிப்பு பக்கம் திரும்பினார்...
தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்ச, ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்தார்..
தமிழ் சினிமாவில் சாதிக்க முடியுமா தயக்கம் காட்டிய அவருக்கு, வடிவேலுவே வாய்ப்பை தந்திருக்கிறார்..
சுந்தர் சி யின் தலைநகரம் படத்தில் நாய் சேகராக நடித்த வடிவேலுவுடன், காமெடி காட்சிகளில் நடித்து கலக்கியிருப்பார் வெங்கல்ராவ்..
தலையிலிருந்து கையை எடுத்த உடன் கழுத்தை கடித்து வைக்கும் காமெடி சீன் இன்றளவும் டிரெண்டிங்கில் உள்ளது..
இதுமட்டுமா, கந்தசாமி படத்தில் தேங்காய் விலைக்கு பேரம் பேசும் வடிவேலு, வெங்கல் ராவின் காமெடி காட்சி...பக்கா மீம் கண்டென்ட்....
இப்படி வடிவேலு வெங்கல்ராவ் காம்போவில் பல காமெடிகள் ஹிட் அடித்துள்ளது...
இதற்கிடையில், வடிவேலு நடிக்காமல் போன போது, வெங்கல் ராவ்-ன் கெரியரும் அதல பாதாளத்திற்கு சென்றது...
இந்நிலையில் வடிவேலு கம்பேக் கொடுத்த நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் வெங்கல்ராவ் நடித்திருப்பார்...
இதன் பின், நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்த அவருக்கு, குடும்பச் சுமையும் கூடிக்கொண்டே போனது...
ஏற்கனவே வறுமையில் குடும்பம் இருந்த நிலையில், சிறு வயதிலேயே அவரது மகனும் இறந்து விட்டார்.. பின்னர் தன் மகளை வளர்த்து ஆளாக்கியவர், பேரன், பேத்திகளையும் பார்த்து கொள்ளும் நிலை வந்தது...
மற்றொரு புறம், சோற்றுக்கே கஷ்டப்படும் நிலையும் ஏற்பட்டதாக பல நேர்காணல்களில் கூறி கண்ணீர் விட்டிருக்கிறார் வெங்கல்ராவ்..
இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு சிறுநீரக கோளாறு காரணமாக விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்..
இதன் பின் அவரின் நிலை குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகாத நிலையில், தன் உடல்நிலை குறித்து உருக்கத்துடன் வீடியோ வெளியிட்டுள்ளார் வெங்கல்ராவ்.
அதில், தனக்கு கை, கால் செயலிழந்து விட்டதாகவும், சிகிச்சை எடுக்கக்கூட பணமில்லை எனவும் வேதனையுடன் தெரிவிக்கும் அவர் திரைத்துறையினரின் உதவியை நாடியுள்ளார்.
ஏற்கனவே இதே போல் போண்டாமணியின் நிலைமை கவலைக்கிடமாகி உதவி கிடைத்திருந்தது..
இதே போல், திரையில் பல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்த வெங்கல்ராவுக்கு, உதவி கிடைக்குமா ? என ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்... ரசிகர்களை சிரிக்க வைத்த ஒரு கலைஞன் இப்போது கண்ணீரோடு கையேந்தி நிற்கிறார்.. நிச்சயம் இவருக்கு உதவிக்கரங்கள் நீள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்...
Uploaded On 25.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 25
@shanmugasundarams7285
@shanmugasundarams7285 2 күн бұрын
என்னடா இது கொடுமை.கோடி கோடியா சம்பாரித்து வைத்திருக்கும் பல நடிகர்கள் இருக்காங்க.மனம் இல்லை கொடுப்பதற்க்கு.
@jagannathan7816
@jagannathan7816 2 күн бұрын
தமிழக திரைத்துறை சார்பாக ஒரு மிகப்பெரிய மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை துவங்கலாமே
@Tamilnanban4
@Tamilnanban4 2 күн бұрын
கோடிகளில் சமபலம் வாங்கும் நடிகர்கள் உதவுங்கள்
@user-pn7bd9rq2d
@user-pn7bd9rq2d 2 күн бұрын
😢😢😢 please help sir❤❤bala sir nice 🎉
@johnsonjo8454
@johnsonjo8454 19 сағат бұрын
வடிவேலு உடன் இணைந்து நடித்த பல நடிகர்கள் இப்போது வறுமையில் வாடுகிறார்கள் 200 கோடியில் சொத்தில் ஒரு லட்சம் கொடுத்தால் ஒன்றும் குறைந்து போகாது வடிவேலு சார் அது போல் பெரிய நடிகர்கள் உதவி செய்ய வேண்டும் நடிகர் சங்கம் தலைமை தர் குறிகள் எதுவும் கண்டு கொள்ள மாட்டானுக
@Nonstickplaylist
@Nonstickplaylist 2 күн бұрын
Etha namburadu teriala ipo vara news la pakum bodhu first oru news social media Vanda atha check panni podunga , one month before Trichy la en relative marriage vandaru vandu ellar kudayum photo edhutaru , ithu ilama Ivar kuda neraya comedy actors vandaga , nalla irundaru , ivaruku payment kudutu than function vandaru , ana ipo pakura news namba mudiala
@marun6539
@marun6539 2 күн бұрын
தயவு செய்து அவருக்கு பணம் உள்ளவர்கள் உதவி செய்யுங்கள் உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் 😢
@kalidosskannan8489
@kalidosskannan8489 2 күн бұрын
nice intellectual actor
@hameedfarzana6634
@hameedfarzana6634 2 күн бұрын
😭😭😭 pavam Avaru
@malaramenprisethellordbles6595
@malaramenprisethellordbles6595 2 күн бұрын
Uthavi saiunga 😢😢😢😢
@Padmagandhi
@Padmagandhi Күн бұрын
YAR YARUKKO YUTHAVY SEIYUM NAMMAGOVERNMENT IN THE KALAIGANARUKKU YUTHAVY SEIYALAMA
@MODkitchen-ie2ip
@MODkitchen-ie2ip Күн бұрын
முழுக்க முழுக்க சினிமாக்காரி சினிமாக்காரங்க தான் உதவி செய்யணும் அவருக்கு வடிவேலு உதவி செய்வார்
@user-oi2sb1is8x
@user-oi2sb1is8x Күн бұрын
Vuthavi endru sollungal . Avarum oru nadigar .
@ahilandeswarypalaniyandy7193
@ahilandeswarypalaniyandy7193 Күн бұрын
Udhavungal punniuam serum
@user-zv1lm9no3o
@user-zv1lm9no3o Күн бұрын
Nadigar sangam vudavi panalam yelorum konjam help panalam
@ruthran481
@ruthran481 2 күн бұрын
😢😢😢❤
@mgjuyu5555
@mgjuyu5555 2 күн бұрын
பிரஷ்சர் இரத்த அழுத்தம் அதிகமானால் கை கால் இழுத்துக்கும்
@SathyaPriya-hw5jn
@SathyaPriya-hw5jn 2 күн бұрын
😢😢😢
@user-uk7vo8xh5b
@user-uk7vo8xh5b 2 күн бұрын
Pavam avanga g pay nampar eruntha kudunka na 500rupa tharen ennala mudinjathu na kattada velai pakkuren
@noorulusain8800
@noorulusain8800 2 күн бұрын
சார் இவருக்கு ஆந்திரப் பிரதேசம் பலமநேர் பகுதியில் ,இந்த உடல் உபாதைகளுக்கு மருந்து தருகின்றார்கள் , தயவுசெய்து இவருக்கு சொல்லவும்
@babubandari2581
@babubandari2581 2 күн бұрын
மனித கடவுள் அண்ணா இந்தநீயூஸ்சபாத்திங்கிலா.பாவம்உதவுங்கள்.லாரன்ஸ்.அண்ணா
@sureshsk6087
@sureshsk6087 2 күн бұрын
Vadivel should help immediately but he is selfish fellow
@LiveHealthy-bm4wg
@LiveHealthy-bm4wg 2 күн бұрын
Vadivel is most selfish person. He will never ever help anyone.
@Raj-ug3ul
@Raj-ug3ul 2 күн бұрын
😢😢😢
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:19
CRAZY GREAPA
Рет қаралды 23 МЛН
I’m just a kid 🥹🥰 LeoNata family #shorts
00:12
LeoNata Family
Рет қаралды 17 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 22 МЛН
1❤️#thankyou #shorts
00:21
あみか部
Рет қаралды 88 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:19
CRAZY GREAPA
Рет қаралды 23 МЛН