No video

'புரட்சிநாயகன்'முரளியின் முதல் வாய்ப்பு | Actor Murali's first chance | Actor Murali Biography

  Рет қаралды 15,419

TAMIL VALAIKKATCHI

TAMIL VALAIKKATCHI

Күн бұрын

திரைப்பட இயக்குநருக்கு ஆசைப்பட்ட முரளி?
===================================
நடிகர் முரளியின் அப்பா பெயர் சித்தலிங்கையா. நவஜோதி ஸ்டுடியோவின் அலுவலக உதவியாளராக இருந்து திரைத்துறைக்குள் நுழைந்தவர், இயக்குநர் சங்கர் சிங்கிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து, திரைப்படங்களில் சிறிய கதாபத்திரங்களில் நடித்து, 1969 ஆம் ஆண்டில் ‘கன்னட சூப்பர் ஸ்டார்’ ராஜ்குமார் நடித்த ‘மேயர் முத்தண்ணா’ கன்னடப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து இருபத்தி மூன்று படங்களை இயக்கியவர். பல படங்களை தயாரித்தவர்.
கன்னட மொழிப் பேசும் சித்தலிங்கையா தமிழ்நாட்டில் திரைப்படங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது முதலியார் வகுப்பை சேர்ந்த தனலட்சுமி என்கிற தமிழ் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு முரளி, சுரேஷ் என இரு மகன்களும், சாந்தி என்கிற மகளும் பிறந்தனர்.
1964 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி பிறந்த முரளி ஐந்தாம் வகுப்பு வரை சென்னையில் படித்து வளர்ந்தார். ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பெங்களூரில் படித்தவர், அதன் பிறகு தந்தை இயக்கிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிய தொடங்கினார்.
தனது தந்தையைப் போல பிரபல நடிகர் நடிக்கும் படங்களை இயக்க வேண்டும் என்பதுதான் முரளியின் கனவாக இருந்தது. ஆனால், அவரது கருப்பும் அழகும் கவர்ந்த இயக்குநர் ஏரங்கி சர்மா, ‘’நீ கதாநாயகனாக நடிக்கலாம் வா’’ என்று அவரை அழைத்தார். ‘கெலுவினா ஹெஜ்ஜே’ என்கிற அந்தப் படத்தை கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாள் தயாரித்தார். 1982 ஆம் ஆண்டு வெளியான ‘கெலுவினா ஹெஜ்ஜே’ எதிரப்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றியை தரவில்லை.
இதனால், முரளியின் தந்தை சித்தலிங்கையா பிரபல நாவலாசிரியர் பி.எல்.வேணு கதை வசனத்தில் ‘பிரேமா பர்வா’ என்கிற படத்தை முரளியின் நடிப்பில் தொடங்கினார். அந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அந்தப் படத்தைப் பார்த்த இயக்குநர் கே.பாலசந்தர், தமிழில் அந்தப் படத்தின் உரிமையை வாங்கி தனது கவிதாலயா நிறுவனத்தின் பெயரில் ‘பூவிலங்கு’ என்கிற பெயரில் தயாரித்து தனது உதவியாளர் அமீர்ஜான் இயக்கத்தில் கதாநாயகனாக முரளி, கதாநாயகியாக குயிலி ஆகியோரை அறிமுகப்படுத்தினார்….
மேலும் தெரிந்துகொள்ள மேலே உள்ள காணொலியை பாருங்கள்....
நடிகர் முரளி சினிமாவுக்கு வந்த கதை | நடிகர் முரளியின் வாழ்க்கை வரலாறு | 'புரட்சி நாயகன்' முரளியின் வரலாறு | நடிகர் முரளியின் திரைப்பயணம் | நடிகர் முரளி வாழ்க்கை வரலாறு | தமிழ் வலைக்காட்சி | Actor Murali Cinema Life history | Actor Murali Biography | Actor Murali filmography |Actor Murali Latest News | Actor Murali | Tamil Valaikatchi
PREVIOUS VIDEO : • 'ஆக்சன் கிங்' அர்ஜுனின...
For more Latest news & Trending videos clips in and around the world.
SUBSCRIBE to TAMIL VALAIKKATCHI | தமிழ் வலைக்காட்சி here 👉bit.ly/3gwGN5J
--------------------------------------------------------------------------------------
For instant updates, Follow us on:
► Twitter → / tamil_valai
► Facebook Page → bit.ly/3ex2CA1
► Facebook ID → / tamil.valaikkatchi
► Instagram → / tamil_valaikkatchi
---------------------------------------------------------------------------------------

Пікірлер: 7
@ragumarimuthu4699
@ragumarimuthu4699 Жыл бұрын
Super lovely sir
@dashingamar1912
@dashingamar1912 Жыл бұрын
100 actors ippo irundhalum yen mudhal hero muralidhan❤️ Kadhal Nayagan❤️
@nadippinnayagansurya5153
@nadippinnayagansurya5153 3 жыл бұрын
My favorite hero murali sir
@kalaiarasir7938
@kalaiarasir7938 Жыл бұрын
Karuppa irundalum murali madiri azhaga irukkannu solluvanga appo ellam periyavanga. Enna oru azhagu karuppu manmadan mamanidan
@monicamonica7471
@monicamonica7471 11 ай бұрын
😢😢😢😢💔💔
@kalaiarasir7938
@kalaiarasir7938 Жыл бұрын
Ivaroda sondha ooroda per sollavillaya sir
@maheshmahe131
@maheshmahe131 3 ай бұрын
Karnataka
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 39 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 26 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 39 МЛН