No video

தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினர்கள் பதிவு செய்யும் முறை

  Рет қаралды 2,584

Cable Splicer Tech

Cable Splicer Tech

5 ай бұрын

தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள், தொழிலாளர்கள் நலத்திட்டங்களுக்கு விண்ணப்பம் செய்ய இணையதளம் தொடக்கம்!!
சென்னை : தமிழக தகவல் தொழில்நுட்பவியல் (ம) டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள், தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள், நல வாரிய உறுப்பினர்கள் மற்றும் நலத்திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் இணையதளத்தை தொடங்கி வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “கம்பிவடத் தொலைக்காட்சித் தொழிலாளர்கள் நலவாரியம்” என்பதனை “தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலவாரியம்” என பெயர் மாற்றம் செய்து 13.1.2024 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கேபிள் டிவி தொழிலில் ஈடுபட்டுள்ள தமிழகத்தில் உள்ள அனைத்து கேபிள் ஆபரேட்டர்கள் மட்டுமல்லாமல் அவர்களுடைய தொழிலாளர்களும் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு, கேபிள் டிவி தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் அவர்தம் குடும்பத்தினரும் பயன்பெறும் வகையில் நல திட்டங்கள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாரியத்தின் மூலம் சுமார் 60,000 உறுப்பினர்களும் அவருடைய குடும்பத்தினர்களையும் சேர்த்து சுமார் 2,50,000 நபர்களுக்கு மேல் பயனடைவர். இதன் மூலம் உறுப்பினர்களின் வாழ்வாதாரம் மேம்படும்.
இவ்வாரியத்தின் கீழ்கண்ட நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
1. திருமண உதவித் தொகை
2. மகப்பேறு உதவித் தொகை
3. குடும்ப உறுப்பினர்கள் மகன் மற்றும் மகளுடைய கல்வி உதவித் தொகை
4. தனி நபர் விபத்து உதவி
5. இயற்கை மரண உதவித்தொகை
6. ஈமச்சடங்கு உதவித்தொகை
இந்நலத்திட்டங்களை பெற உறுப்பினர்கள் தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல வாரிய இணையதளத்தில் பதிவு செய்து பயனடையலாம்.
இவ்வாரியத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்யவும் நலத்திட்டங்களுக்கு விண்ணப்பம் செய்யவும் www.tnctvwb.in என்கிற இணையதளத்தில் பதிவு மேற்கொள்ளலாம், நலத்திட்ட உதவி தொகை நேரடியாக உறுப்பினர்களின் வங்கி கணக்குகளில் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர். பழனிவேல் தியாக ராஜன் அவர்கள் இணைய தளத்தை தொடங்கி வைத்தார்கள். இவ்விழாவில் தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலவாரியம் தலைவர் திரு. ஜோ. ஜீவா, அரசு கூடுதல் தலைமை செயலாளர், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை திரு. தீரஜ்குமார், இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் திரு. அ. ஜான் லூயிஸ், இ.ஆ.ப., உறுப்பினர் செயலர் மரு.ப.மு.செந்தில்குமார், தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலவாரிய அலுவல் சாரா உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். ” இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. - Tamilnadu Cable Operators and Workers Welfare Board - TNCTVWB

Пікірлер: 4
@rajatamiz398
@rajatamiz398 5 ай бұрын
💐💐🕉️
@kanthavel5517
@kanthavel5517 5 ай бұрын
5 Star cable kallakurichi
@naguraj2394
@naguraj2394 5 ай бұрын
Online application sir
@CableSplicerTech
@CableSplicerTech 5 ай бұрын
Check TNCTVWB Website
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 26 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 148 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 26 МЛН