No video

தரம் 3 / தமிழ் பாடம் / தமிழ்/ கிளி/புறா/பென்குயின்/மரங்கொத்தி/டொல்பின்/ யானை/ சிங்கம்/வரிக்குதிரை

  Рет қаралды 760

Nasar Primary

Nasar Primary

Күн бұрын

தெரிந்து கொள்வோம்.
கிளி.
கிளிகள் மரப்பொந்துகளிலேயே வசிக் கின்றன. இவை பழங்கள், விதைகள், பூக்களின் மொட்டுக்கள் போன்றவற்றை உண்கின்றன. கிளியின் அலகு பலம் வாய்ந்தது. பறவைகளிலே கிளி பேசும் தன்மை வாய்ந்தது.
புறா.
முற்காலத்தில், புறாக்கள் மூலமே செய்திகள், ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. புறாக்கள், சிறிய மரக்குச்சிகளைக் கொண்டு, கூடு கட்டுகின்றன. புறாக்களின் பார்வை, மிகவும் சக்தி வாய்ந்தது. இவற்றால் வண்ணங்களைப் பார்க்க முடியும். அத்துடன், மெல்லிய ஒலியையும் கேட்க முடியும்.
பென்குயின்.
பென்குயின்கள், பறவை இனத்தைச் சேர்ந்தவை. ஆனால், அவற்றிற்கு, பறக்க இயலாது. வாத்தினைப் போன்று அசைந்து, அசைந்து நடக்கும். பென்குயின்கள் நீரின் உள்ளேயே இரை தேடுகின்றன. இவை பார்ப்பதற்கு மீன்களைப் போலக் காணப்படுகின்றன. இவை மணிக்கு இருபது கிலோ மீற்றர் வேகத்தில் நீந்துகின்றன.
மரங்கொத்தி.
மரங்கொத்தி, மரத்தை எப்போதும் கொத்திக் கொண்டே இருக்கும். மரத்தின் உட்பகுதியில் வசிக்கும், சிறு, சிறு பூச்சிகளை உண்பதற்காகவே மரத்தைக் கொத்துகின்றது. மரங்கொத்தி பூச்சிகள், பழங்கள், விதைகள் என்பவற்றை உண்ணுகின்றது.
டொல்பின்.
டொல்பின்கள், சூடான கடல் நீரிலும் குளிர்ந்த கடல் நீரிலும் வாழும் இயல்புடையவை. இவற்றின் உடல் மிருதுவாகவும் எண்ணெய்த் தன்மை வாய்ந்ததாகவும் இருக்கும். இவை விரைவாக வளர்ச்சி அடையும். மிக வேகமாக நீந்திச் செல்லும். இவை மனிதர்களுடன் நட்பாக இருக்க விரும்புகின்றன. மனிதர் இடும் கட்டளைக்கேற்ப செயற்படும் திறனுடையவை.
யானை.
யானைகள் கூட்டங், கூட்டமாகவே வாழ்கின்றன. யானைகளில் ஆசிய யானைகள், ஆபிரிக்க யானைகள், என இரு வகை உண்டு. ஆசிய யானையின் காதுகளும், தந்தங்களும் சிறியவையாக இருக்கும். ஆனால் ஆபிரிக்க யானையின் காதுகளும் தந்தங்களும் பெரியவையாக இருக்கும்.
சிங்கம்.
சிங்கங்கள் கூட்டமாகவே வாழ்கின்றன. அவை மிகவும் பலம் வாய்ந்தவை. அவற்றிற்கு மோப்பசக்தி அதிகம். அத்துடன் கேட்கும் சக்தியும், பார்க்கும் சக்தியும் துல்லியமானவை. சிங்கங்கள் கர்ச்சித் தால் சுமார் எட்டுக் கிலோ மீற்றர் வரை எதிரொலிக்கும்.
வரிக்குதிரை.
வரிக்குதிரைகள், குதிரை இனத்தைச் சேர்ந்தவை. இவை மிக வேகமாக ஓடும் ஆற்றல் பெற்றவை. இவற்றின் பார்வை மிகவும் சக்தி வாய்ந்தது. இவை மற்ற வரிக் குதிரைகளுடன் கூட்டமாக மேயும்.

Пікірлер
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 4,6 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 77 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 15 МЛН
நான்கு நண்பர்கள்
1:40
ND TV _ KIDS tamil
Рет қаралды 63