No video

தயவு

  Рет қаралды 184

Suddha Sanmarga Padasalai

Suddha Sanmarga Padasalai

Күн бұрын

#Suddha_Sanmarga_Padasalai​​​
#Vallalar_student_charity​​​
#வள்ளலார்_மாணவர்_நற்பணி_மன்றம்​​​
#Arutperunjothi_Dhayavu_Nilaiyam​​​
#arutperunjothi_vallalar​​
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
வணக்கம் அருட்பெருஞ்ஜோதி…
இம்மண்ணுலகத்திலே உயர்ந்த பிறப்பான மனித பிறப்பை பெற்றுக் கொண்ட அனைவரும் உண்மை அறிவோடும் உண்மை அன்போடும் உண்மை இரக்கத்தோடும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையில் வாழும் பொருட்டு
நம் “அருட்பெருஞ்ஜோதி தயவு நிலையம், சுத்த சன்மார்க்க பாடசாலை “ யின் மூலமாக மேற்கொள்ளும்,
ஜீவகாருணிய செயல்பாடுகள் :-
தினந்தோறும் மதியம் திருவருட்பா ஞான கருத்துக்களை உணர்த்தி உலக உயிர்களின் நன்மைக்காக கூட்டுப் பிரார்த்தனை செய்து , ஏறத்தாழ 80 ஏழை ஜீவர்களுக்கு உணவு வழங்கி பசி நீக்குகின்றோம்.
தினந்தோறும் எந்த ஆதாரமும் இல்லாத பசித்த ஏழைகளுக்கு அவர்கள் இருக்கும் இடம் தேடி உணவு வழங்கிக் கொண்டு உள்ளோம்.
தினந்தோறும் மாலை 5:30​​​ மணியில் இருந்து 8 மணி வரை மாணவர்களுக்கு திருக்குறள் திருவருட்பா ஞான வகுப்பும் மற்றும் பள்ளிப் பாடங்களையும் இரண்டு ஆசிரியர்களை நியமித்து நடத்தி வருகிறோம்.
ஆத்தூர் சுற்றுப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு தனிமனித ஒழுக்கத்தை உணர்த்தும் வகையில் திருக்குறள், திருவருட்பா, ஜீவகாருணிய ஒழுக்கம் முதலிய அறநெறிகளை தொடர்ந்து உணர்த்திக் கொண்டு வருகிறோம்.
வள்ளலார் மாணவர் நற்பணி மன்றம் உருவாக்கி அதில் மாணவர்களை உறுப்பினராக சேர்த்து சுத்த சன்மார்க்க மெய் நெறிகளையும் ஜீவகாருணிய ஒழுக்கத்தையும் உணர்த்தும் வகையில் கருத்தரங்குகளை தொடர்ந்து நடத்தி வருகின்றோம்.
வள்ளலார் மாணவர் நற்பணி மலேசியாவில் :
வருடந்தோறும் மலேசியாவிற்கு இரண்டு மூன்று முறை சென்று மலேசியா தமிழ் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு திருவருட்பா நன்னெறிகளை போதித்து வருகிறோம்.
ஒவ்வொரு மாதமும் மாத பூசம் தினத்தன்று நம் பாடச்சாலையின் முன்பு பந்தலிட்டு, வரக்கூடிய மக்களுக்கு ஜீவகாருணிய ஒழுக்க நெறிகளை உணர்த்தி, மக்கள் அனைவருக்கும் சிறப்பு அன்னம் பாலிப்பு நடைபெறுகிறது.
ஒவ்வொரு வருடமும் தர்மச்சாலை துவக்க நாள், அக்டோபர் மாதம் 5ஆம் தேதி வள்ளலார் பிறந்த நாள் மற்றும் தைப்பூசம் ஆகிய நாட்களில் பெரும் திருவிழாவாக ஆயிரக்கணக்கான மக்களுக்கு கடவுளின் திருவருளை பெறுவதற்கான வழியை உணர்த்தியும் உணவு வழங்கி பசி நீக்குகின்றோம். மேலும் மாணவர்களுக்கு சுத்த சன்மார்க்க மெய் நெறிகளை உணர்த்தும் வகையில் பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசளிப்பு விழாவும் நடத்தி வருகின்றோம்.
மேற்குறித்த வண்ணம் உலக மக்கள் அனைவரும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையில் வாழ வேண்டும் என்ற உண்மை நோக்கத்தில் தொடர்ந்து திருப்பணிகளை செய்து வருகிறோம் .
இத்திரு பணிகளில் பெரும் தயவுடைய தங்கள், தங்களால் கூடிய வரையில் பங்கு கொண்டு ( உதவி செய்து) அதனால் வரும் ஆன்மலாபத்தை பாகம் செய்து கொள்ள அன்போடு விண்ணப்பிக்கின்றோம்.
“ நாம் அனைவரும் ஆதாரமில்லாத ஏழைகளுக்கு பசி நேரிட்டபோது மிகவும் கருணை உள்ளவர்களாகி நம்மாற் கூடியமட்டில் அந்தப் பசி என்கின்ற ஆபத்தைப் பொதுவாக நிவர்த்திப்பதற்கு முயற்சி செய்வதே ஆன்ம லாபம் என்று அவசியம் அறிய வேண்டும். “
-திருவருட்பிரகாச வள்ளலார்,.
நன்றி! அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே !
இங்ஙனம்;
அருட்பெருஞ்ஜோதி தயவு நிலையம் ,
சுத்த சன்மார்க்க பாடசாலை சார்ந்த அன்பர்கள்
9487258121, 9842058121.
arutperunjothidhayavu28@gmail.com
www.facebook.c...
‘ எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ‘

Пікірлер: 2
@dhayavu360
@dhayavu360 Ай бұрын
தங்களின் முயற்சி பாராட்டுக்குரியது இன்னும் பல பள்ளிகளுக்கு தாங்கள் செல்ல வேண்டும் திருவருள் அதற்கு துணை புரிய வேண்டும் அருள் புரிக ஆண்டவா
@arutperunjothidhayavunilayam
@arutperunjothidhayavunilayam Ай бұрын
நன்றி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 56 МЛН
А ВЫ УМЕЕТЕ ПЛАВАТЬ?? #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 2 МЛН
வார்த்தை வைரங்கள் - சுகிசிவம்
8:30
இந்தப் பாடலை உணர்ந்து கேட்டாலே உண்மை ஞானம் உடனே விளங்கும்.
12:03
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 56 МЛН