24 மணிநேரத்தில் 3 பேர் துடித்து பலி.. இந்த அறிகுறி தெரிந்தால் வெள்ளியங்கிரி செல்லாதீர்

  Рет қаралды 454,957

Thanthi TV

Thanthi TV

4 ай бұрын

#VelliangiriHills | #Velliangiri | #coimbatore
24 மணிநேரத்தில் 3 பேர் துடித்து பலி... 1,2,4வது மலையில் பக்தர்கள் கண்ட அதிர்ச்சி - இந்த அறிகுறி தெரிந்தால் வெள்ளியங்கிரி செல்லாதீர்
வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர்கள் 3 பேர், கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளியங்கிரி மலையும், அதன் சவால்களும் என்ன என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு...
கோவை மாவட்டத்தில் இருந்து 36 கிலோமீட்டர் தொலைவில், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது இந்த வெள்ளியங்கிரி மலை... தென்கைலாயம் என அழைக்கப்படும் இந்த மலை உச்சியில்தான் அமைந்துள்ளது சிவன் கோவில்...
ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்ககூடிய சிவலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், இந்த மலையை நோக்கி படையெடுக்கின்றனர்.
3 ஆயிரத்து 500 அடி உயரமும், 6 கிலோ மீட்டர் தூரமும் கொண்ட 7 மலைகளை அடுத்தடுத்து உள்ளடக்கிய இந்த வெள்ளியங்கிரி மலையை கடந்து... இறைவனை தரிசிப்பது என்பது மிகப்பெரும் சவால் என்றே சொல்லலாம்...
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் தொடங்கி மே மாதம் வரை பக்தர்கள் வெள்ளியங்கிரி மலை ஏற, வனத்துறையினர் அனுமதி வழங்கி வருகின்றனர்.
10 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 60 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் மட்டுமே இங்கு மலையேற அனுமதிகப்பட்டு வருகிறார்கள். பெண்கள், குழந்தைகள் மலை ஏற அனுமதிக்கப்படுவதில்லை.
ஆபத்து என்ன என்பதையும் உணர்ந்து, கரடு முரடான பாதையையும் கடந்து, 7 மலைகளையையும் தாண்டி சென்றால், இறைவன் ஆசி பெற்று தங்களுக்கான மோட்சம் கிடைத்துவிட்டதாகவே எண்ணுகிறார்கள் பக்தர்கள்...
ஆனால், கடவுளை தரிசிக்க வரும் அதே வேளையில், துரதிர்ஷ்டவசமாக நிகழும் சில சம்பவங்களும் பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மலையேறிய பக்தர்களில் 3 பேர், மூச்சுத்திணறி அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம், சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஹதாரபாத்தை சேர்ந்த சுப்பாராவ் என்பவர், நான்காவது மலையில் ஏறிக் கொண்டிருந்த நிலையில், திடீரென உடல்நலம் பாதிக்கபட்டு உயிரிழந்தார். அதேபோல் சேலத்தை சேர்ந்த தியாகராஜன் என்பவர் முதலாவது மலைப்பாதையிலும், தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் என்பவர் இரண்டாவது மலை அருகே வழுக்குப்பாறை பகுதியிலும், மூச்சுத்திணறல் ஏற்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
சக பக்தர்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், 3 பேரின் உடல்களையும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் மீட்டு, மலை அடிவாரத்திற்கு எடுத்து வந்தனர். பின்னர் 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் வனத்துறை அதிகாரிகள்...
ஆண்டுதோறும் வெள்ளியங்கிரி மலை ஏறி, மூச்சு திணறல், இருதய பாதிப்பு, உடல் நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், மலைகளின் நடுவே மருத்துவ முகாம் வைத்து, பக்தர்களின் உடல்நலனையும் கண்காணித்து வருகின்றனர் வனத்துறையினர்...
இந்த சூழலில், வெள்ளியங்கிரி மலை ஏற விரும்பும் பக்தர்களுக்கு, வனத்துறையினர் அறிவுரைகளை வழங்கி அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதாவது, உயர் அல்லது குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், ஆஸ்துமா, மூச்சுத்திணறல், நரம்பு தளர்ச்சி, வலிப்பு நோய் உள்ளிட்ட உடல் நலக்குறைவு உள்ளவர்கள், வெள்ளியங்கிரி மலை ஏறுவதை தவிர்க்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
மலை ஏறிய பக்தர்களில் கடந்த மாதம் 2 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது 3 பேர் என ஆகமொத்தம் நடப்பாண்டில் மட்டும் 5 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர்களில் 18 பேர் உடல் உபாதைகள் காரணமாக உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Uploaded On 26.03.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news

Пікірлер: 287
@user-my5fs9cu4g
@user-my5fs9cu4g 4 ай бұрын
15 முதல் 40 வயசுக்குள் இந்த மலைக்கு செல்வது நலம். உடல் நல்ல ஆரோக்கியமாக இல்லாத போது மலை ஏறி மரணம் அடைந்தால் இறைவனை குறை சொல்லக்கூடாது. பிறந்த போதே இறப்பு உறுதியாகிவிட்டது. எனவே உடலை பரிசோதனை செய்து விட்டு பின்னர் மலை ஏறவும். இது ஒரு கடினமான மலை ஏற்றம்.
@parthibanrs5995
@parthibanrs5995 4 ай бұрын
Age factor lam illa bro 80 yrs aanavanga lam youngsters ah vida super ah poratha en kannala paathirukken it's depends on their mind & physical health
@dhanapalm2606
@dhanapalm2606 4 ай бұрын
உடல் நலக் குறைவோடும் தன்னை வேகாத வெயிலில் காண வருகிறானே இவன் தான் சிறந்த பக்தன் இவனுக்கு நாம் இனிமேலாவது நல்ல ஆரோக்கியத்தைக் கொடுத்து நல்ல சந்தோஷத்தை வாழ்வில் கொடுக்கலாம் என்று ஏன் அந்த அதிபயங்கர சக்தி வாய்ந்த சிவன் நினைக்கவில்லை எல்லாம் பொய் பித்தலாட்டம் இதை உணர்ந்து தான் நம் அறிவார்ந்த முன்னோர்கள் தாயைச் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை இதை கடைப்பிடித்தாலே நம் குழந்தைகள் ஒழுக்கத்துடன் வளரும் வாழும் அந்த காலக் கற்பனை பொய் கதைகள் இன்று வரை நம்ம ஆளுகிறது. இன்று எப்படி சினிமா கதையில் வரும் கதாநாயகன்கள் சினிமா பைத்தியங்களின் உள்ளத்தில் நீங்கா இடம் பிடித்திருக்கிறதோ அது போல் பழைய பொய்யான கற்பனை கதைகளை நம்மை மூடர்களாக்கி வருகிறது. யாரும் திருந்த மாட்டார்கள்.
@user-hb1xu4fc5z
@user-hb1xu4fc5z 4 ай бұрын
Am 51 I visited on 16 march
@antonyjosephkennedy7655
@antonyjosephkennedy7655 4 ай бұрын
Ask for fitness certificate
@muthusamy8555
@muthusamy8555 4 ай бұрын
அவர்கள் கூறியுள்ளபடி வயது உட்பட அத்தனை பிரச்சினைகளோடும் மலை ஏறியுள்ளேன் தேவை 1 ஈசன் மீதான அன்பு 2.மன வைராக்கியம்
@vasanthgaminghero3216
@vasanthgaminghero3216 4 ай бұрын
வெள்ளியங்கிரி மலையில் முதல் இரண்டு மலைகளில் கல்லால் ஆன படிகள் மழையால் சிதிலமடைந்து உள்ளது. கார் ரேஸ் நடத்த 42 கோடிகள் செலவிடும் நாத்திக தமிழக அரசு வெள்ளியங்கிரி மலை பாதையை சீரமைத்தால் இதுபோன்ற உயிரிழப்பு வராது
@dhanapalm2606
@dhanapalm2606 4 ай бұрын
தமிழக அரசு காப்பாற்றவில்லை தவறு தான் ஆனால் அதிபயங்கர சக்தி வாய்ந்த சிவபெருமான் ஏன் உடல் நலக் குறைவோடும் தன்னை வேகாத வெயிலில் காண வந்தானே இவனல்லவா சிறந்த பக்தன் இவனுக்கு இனிமேலாவது நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை கொடுப்போம் என்று ஏன் நினைக்கவில்லை? கொஞ்சம் பொறுமையாக மனசாட்சியோடு யோசிப்போம் மன்னன் மனைவிக்கு கூந்தலில் மணம் இருக்கிறதா இல்லையா என்பதற்கு ஓடோடி வந்த சிவபெருமான் ஏன் உடல்நலக் குறைவோடும் தன்னை காண வந்த பக்தனுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கவில்லை என்று நீங்களே ஒரு முறை சிந்தித்தால் எல்லாம் பொய் என்று உணர்வீர்கள் இதையெல்லாம் உணர்ந்த நம் அறிவார்ந்த முன்னோர்கள் தாயைச் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்றார்கள் இதை கடைப்பிடித்தாலே நம் குழந்தைகள் ஒழுக்கத்துடன் வளரும் வாழும்.
@ashokkumar-rv9tx
@ashokkumar-rv9tx 4 ай бұрын
Athu ena sutrula thalama seeraimaika ,,, venave venam manithan nadamadinaaley malai Aliya arambithu vidum
@kumarblore2003
@kumarblore2003 4 ай бұрын
மத்தியில் இந்துக்களை காக்க வந்த ஆட்சிதான், கடந்த 10 வருடங்களில் செய்திருக்கலாமே?
@TamilTamil-bj3ev
@TamilTamil-bj3ev 4 ай бұрын
ஏன்டா பைத்திய கார பயலே, நீ மலை எரிகிட்டே இரு, அம்பானி, அதானி, சொத்து செத்துகிட்டே போகட்டும், நீங்க வேல் குத்தி, பாத யாத்திரையா போங்க, அங்க ஒருத்தன் சிவராத்திரில ஒரு நைட் ல குத்தாட்டம் போட்டு கோடில போறல்றான், நீ மலை ஏறு சாமி,
@narayanasamypalaniyappan4092
@narayanasamypalaniyappan4092 4 ай бұрын
அரசை வெள்ளியங்கிரியில் அநுமதித்தால் வெகுவிரைவில் வெள்ளியங்கிரியை கூறுபோட்டு வித்துவிடுவான்கள்
@hariharanjayaraman3402
@hariharanjayaraman3402 4 ай бұрын
உடல் நலம் சரியில்லாதவர்கள் தெரிந்தே செய்தார்கள் என்றால் இவர்களின் பக்தியினை வணங்கதான் வேண்டும். 🙏
@umasai2529
@umasai2529 4 ай бұрын
பக்தியொடு செல்ல வேண்டும். எத்தனையோ மக்கள் மலை ஏறி, சிவனை தரிசனம் செய்து, நலமுடன் வருகிறார்கள். பக்தி இல்லாமல், உணவு அதிகமாக சாப்பிட்டு, உடலில் பிரச்சனை இருந்து போகக்கூடாது.. இத்தனை வருடங்கள் மக்கள் சிவனை வழிபட மலை ஏறினார்கள்.. இப்போது சுற்றுலா மாதிரி நினைக்கிறார்கள்.. மூச்சு திணறல் இருப்பவர்கள், BP, Sugar யாரும் மலை ஏறக்கூடாது..
@dhanapalm2606
@dhanapalm2606 4 ай бұрын
மன்னன் மனைவிக்கு கூந்தலில் மணம் இருக்கிறதா இல்லையா ( இது ரொம்ப முக்கியம் பாருங்கள்) என்பதற்கு ஓடோடி வந்த அதிபயங்கர சக்தி வாய்ந்த சிவபெருமான் ஏன் உடல்நலக் குறைவோடு வேகாத வெயிலில் தன்னைக் காண வந்த பக்தனுக்கு இனிமேலாவது நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையில் சந்தோஷத்துடன் வாழட்டும் என்று நேரில் ஓடோடி வர வேண்டாம் அவர் நினைத்தால் அகிலமே நடுங்கும் போது அவர் இவருக்கு ஏதாவது ஒரு வகையில் உதவியிருக்கலாமே? எல்லாம் பித்தலாட்ட கற்பனைக் கதைகள். எந்தக் கோவிலிலும் கடவுள் கிடையாது இது தான் உண்மை இதையெல்லாம் உணர்ந்து தான் நம் அறிவார்ந்த முன்னோர்கள் தாயைச் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை இதை கடைப்பிடித்தாலே நம் குழந்தைகள் ஒழுக்கத்துடன் வளரும் வாழும் வீடும் நாடும் ஒழுக்கத்துடன் முன்னேறும்.
@Barani-yu6mk
@Barani-yu6mk 4 ай бұрын
அடேய் முட்டாள் கடவுள் யாருக்கு எப்போது என்ன வேண்டும் என்று அவனுக்கு தெரியும் உன்னுடைய உடம்பு சரியில்லை என்றால் ஏன் மழை ஏறுகிற நீ ஒரு ஆண் பிள்ளை என்றால் மற்ற மதத்தில் நடக்க கூடியவற்றை பேச தைரியம் இருக்கிறதா திராணி இருக்கிறதா போய் மொத்தம் என் சுன்னிய ஊம்பு அண்டமும் சிவம் அகிலமும் சிவன்
@VeluDmdk-ec5zi
@VeluDmdk-ec5zi 4 ай бұрын
நான் 11முறை சதுரகிரி மலை ஏறியுள்ளேன் அதுவும் வருஷநாடு வழி என்று சொல்லக்கூடிய தேனி மாவட்டம் உப்புத்துறை மாளிகையம்பாறை வழியாக 40கிமீ கரடுமுரடான மலை பாதையில் ஏறி .. விருதுநகர் மாவட்டம் தாணிப்பாறை வழியாக ஒரே நெட்டாக 17கிமீ இறங்குவேன் .. வெள்ளியங்கிரி மலை விரைவில் போக போகிறேன்
@Elango_Dharapuram
@Elango_Dharapuram 4 ай бұрын
வருஷநாட்டு பாதை 12க கிமீ...தாணிப்பாறை 7 கிமீ.... தவறான தகவல் வேண்டாம் சகோதரா.....
@rengasamythiru1757
@rengasamythiru1757 4 ай бұрын
நான் 14 முறை சென்றுள்ளேன்,கடந்த ஆண்டு பொதிகை மலை சென்று வந்தேன், உடம்பு சரியில்லை என்பதால் இந்த வருடம் செல்ல வில்லை.வருச நாடு வழி நல்ல பாதை நான் ஒரு தடவை விருதுநகர் வழியாக இறங்கினேன் அதன் பிறகு அந்தபாதை எனக்கு பிடிக்கவில்லை அதனால் எங்க ஊரு சின்னமனூர் வழியாகவே செல்கிறேன்
@UtubePattarai
@UtubePattarai 4 ай бұрын
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் 2013 முதல் முறையாக வெள்ளியங்கிரி சென்றேன் அதிகபட்சம் என்னுடன் 10 நபர்களும் மொத்தமாக அந்த மலையில் 100 நபர்களை மட்டுமே கான முடியும் ...அதுபோக மலை உச்சியில் ஒரு கடை முதல் மலையில் ஒரு கடை இடையில் ஒரு கடை இருக்கும்...சிவராத்திரி தவிர்த்து அந்த பகுதியை பெரிய நடமாட்டம் கூட இருக்காது.... இன்று அப்படி இல்லை... எத்தனை ஆயிரம் பேர் அங்கு செல்கிறாராகள் அவர்களை யார் வளி காட்டுகிறார்கள்... முதலில் எதற்கு செல்கிறோம் ஆன்மீகமா...மலை ஏற்றமா எதுவாக இருந்தாலும் முடியவில்லை என்றால் இங்கு தலை வெட்ட போவதில்லை... அடுத்த வருடமோ அடுத்த மாதமோ..உடல் நிலை சீரான பிறகு செல்லலாம்... அந்த மலைவேறு வேறு நிலை செல்லும் பொழுது வேறு வேறு கால நிலையில் இருக்கும்..முதல் மலை அதிக உக்கிரமும் அடுத்து மலையில் இருந்து கடும் குளிரும் இருக்கும் அதை நம் உடல் ஏற்கும் பட்சத்தில் முயற்சிகலாம்...அதை விடுத்து மயற்சிப்பது தவறு... மழை பெய்தால் ஒதுங்க கூட இடம் கிடையாது... வெள்ளியங்கிரி செல்லும் முன் நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள்...குறைத்த அளவு உணவு எடுத்து கொள்ளுங்கள்... முடிந்தால் ஏறுங்கள்... இல்லையேல் அடுத்த வருடம் ஏரலாம்.. யாரோ வெளியிடும் புகை படத்தையும் காணொளியும் வைத்து முடிவு செய்வதை தவிர்க்கவும்.... ஓம் நமசிவயா...🤘 மலை மேல் பிளாஸ்டிக் தவிர்ப்போம்..இயற்கை காப்போம்...😍
@muruganadimaivelanvelan693
@muruganadimaivelanvelan693 4 ай бұрын
தாங்கள் சொல்வது உண்மை
@IamPrincy007
@IamPrincy007 4 ай бұрын
நான் ஆறு முறை வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்துவிட்டு வந்திருக்கிறேன். சித்ரா பௌர்ணமி விடியலில் தரிசிப்போம். அதற்கு முன்னதாக ஒரு மாதம் முன்னேரே, அசைவம், மது, புகை, பெண் மற்றும் சினிமாவை விட்டு விலகி இருக்க வேண்டும். காலையில் மிதமான ஓட்ட பயிற்சியோ, நடைப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். காலில் செருப்பு அணிவதை தவிர்க்க வேண்டும். இதனை முறையாக பின்பற்றினாலே போதும். எப்படி ஐயப்பன் கோவிலுக்கு மாலையிட்டு போகிறோம். இதில் மாலையணியாமல் விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். ஓம் நமசிவாய
@Manojkumar-ex7uj
@Manojkumar-ex7uj 4 ай бұрын
Om Nama Shivayaa....
@thanigaivelkrishnan3804
@thanigaivelkrishnan3804 4 ай бұрын
100000 பேர் நலமுடன் திரும்பியது பற்றி போடலாமே!
@sakthi_jewels_Tvl_Impon
@sakthi_jewels_Tvl_Impon 4 ай бұрын
Athu epdi podunvanga anna ivangatha periyar pillaingalache 😢😂😂😂
@krishnakumarramachandran9304
@krishnakumarramachandran9304 4 ай бұрын
Matra madham kasu kuduka matanga
@user-nm8tm5ix1s
@user-nm8tm5ix1s 4 ай бұрын
​@@sakthi_jewels_Tvl_Impon வாழ்க பெரியார் 🎉🎉🎉🎉
@arunasharma795
@arunasharma795 4 ай бұрын
Pathiramaaga thirumbuvathu news illai.
@sumathithirukumar7943
@sumathithirukumar7943 4 ай бұрын
Positive vibes 🎉
@sundargeetha6276
@sundargeetha6276 4 ай бұрын
விரதம் இருந்து ஒழுக்கமாக போயிட்டு வாங்க 🙏🏽🙇🏻‍♀️😍 வெள்ளியங்கிரி ஆண்டவனுக்கு அரோகரா ... சுற்றுலா தளம் நினைச்சுட்டு போகாதீங்க 😂😂
@Rowthiram_555
@Rowthiram_555 4 ай бұрын
American yerurapo news potapo sugamaa irunthuchooo😂😂😂
@Rowthiram_555
@Rowthiram_555 4 ай бұрын
And sivanukku arogara pota motha aal nee than 😂😂😂😂
@sundargeetha6276
@sundargeetha6276 4 ай бұрын
@@Rowthiram_555 கோயமுத்தூரில் அப்படிதான் சொல்வோம் ங்க தம்பி அண்ணாமலையானுக்கு அரோகரா வெள்ளியங்கிரி ஆண்டவனுக்கு அரோகரா நீங்க கேட்டது இல்லையாங்க தம்பி. மாலை போட்டு 48 நாள் விரதம் இருந்து போவாங்க எங்க ஊர்ல...
@sundargeetha6276
@sundargeetha6276 4 ай бұрын
ஆமாங்க தம்பி 👍🏻🙏🏽🔱
@revathi6877
@revathi6877 4 ай бұрын
நாங்களும் அரோகரானு தான் சொல்வோம்....தமிழ்நாட்டுல நிறையா ஊர் மக்கள் எல்லா தெய்வத்துக்கும் அரோகரானு தான் சொல்லுவாங்க ....உங்களுக்கு ஒரு விஷயம் தெரியலனா மத்தவங்கல கேலி பண்ணாதீங்க
@mramasamy8625
@mramasamy8625 4 ай бұрын
நான் ஏழு வருடம் தொடர்ந்து சென்று வந்து‌ உள்ளேன் ஏழு மலையும் போக வர 14 கிமீ வரலாம் முதல் மலையும்‌ஆறாவது ஏழாவது மலையும் ஏறுவதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும் அதனால் குண்டாக இருப்பவர்கள் பிரஷர் சுகர் இருப்பவர்கள் அடிவாரத்தில் சாமி கும்பிட்டு விட்டு வருவது தான் நல்லது உடன்‌வந்தவர்களை மலைஏறிவர கூறிவிடலாம்
@SivaSiva-mm7mg
@SivaSiva-mm7mg 4 ай бұрын
ஆண்டு தோறும் மகா சிவ ராத்திரி அன்று என் தந்தை 30 வருடங்களாக செல்கிறார் நான் 15 வருடமா வெள்ளியங்கிரி மலை செல்கிறேன் நாங்கள் மாலை அணிந்து பய பக்தியுடன் செல்கிறோம் இந்த ஆண்டும் சென்றோம் இத்துணை ஆண்டுகள் சென்றதில் நாங்கள் கண்ட நிகழ்வுகள் மிகுந்த வேதனை அளிக்கும் செயல் மலையில் நடக்கிறது கொஞ்சம் கூட பக்தி இன்றி வருகிறார்கள் மேலும் இந்த மலைக்கும் சபரி மலைக்கு என்ன முறையோ அதே தான் இங்கும் அடிவாரத்தில் பலகையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது வயது வந்த பெண்கள் போக கூடாது ஆனால் நாங்கள் இந்த ஆண்டு சென்ற போது எல்லா வயதுடைய பெண்களும் செல்கிறார்கள் மேலும் தமிழக அரசு குடி நீருக்கு ஒவ்வொரு மலையிலும் ஏற்பாடு செய்ய வேண்டும் மற்றும் மெடிகல் கேம்ப் அமைக்க வேண்டும்
@sundargeetha6276
@sundargeetha6276 4 ай бұрын
பெண்களும் ஏறுனாங்களா 🙄🤦‍♀️😳🥺 ஈஸ்வரா...பரமேஸ்வரா...காலக்கொடுமை.. நீங்க சொல்வது சரிதான்..எங்க வீட்டுக்காரர் இந்த வருடம் சபரிமலை போயிட்டு வந்தாங்க. நிறைய பெண்கள் வயது வந்த பெண்கள், பாலூட்டும் பெண்கள், கன்னிப் பெண்கள் அதிகமாக மழையில் காணப்பட்டனர் என்று வருத்தமாக கூறினார். .
@VIT151
@VIT151 4 ай бұрын
Daii unaku vera veli illya da poomar punda ivlo type panura veeti punda
@nagarajank8925
@nagarajank8925 4 ай бұрын
100% correct
@sandyraj6365
@sandyraj6365 4 ай бұрын
It’s Shiva’s temple right What is wrong? Why women should not go?
@sundargeetha6276
@sundargeetha6276 4 ай бұрын
@@sandyraj6365 அவ்வளவு கரடு முரடான ஏற்ற இறக்கமான பாதைய சொல்லி இருக்காங்க இல்லங்க கண்டிப்பா நம்ம லேடீஸ் ஏறக்கூடாது நம்மளுடைய உடல் ரீதியா நம்ம அவ்வளவு வலுவா இல்லைங்க
@jothilakshmi4203
@jothilakshmi4203 4 ай бұрын
மலை மீது செல்ல செல்ல ஆக்ஸிஜன் லெவல் குறைவதாலும் அதிகபடியான சக்தி தேவைபடுவதாலும் இப்படி நிகஷ்கிறது நான் சபரிமலை இருமுடிகட்டி சென்றபோது இப்படிதான் மூச்சு தினறல் ஏற்பட்டு முகாமில் ஆங்காங்கே ஆக்ஸிஜன் வைத்து கொண்டும் சூடான மூலிகை நீர் குடித்து கொண்டும் சென்றேன் மலை இறங்கும் போது பிரச்சனை இல்லை சபரி மலை போன்று ஆங்காங்கு மருத்துவ முகாம் வைத்திருந்தால் அசம்பாவிதங்கள் தவிற்திருக்கலாம்
@manishankart3962
@manishankart3962 4 ай бұрын
3 முறை போயிருக்கிறேன். பிப்ரவரி மாதம் இந்த வருடம் போனேன் ...முதலில் 6 வது மலையில் அந்த குளிர்ந்த நீரில் நீராடிவிட்டு அப்படியே தொடரதிர்கள் அந்த குளிர்ச்சியே உங்களை கொன்று விடும் ..உங்களை நன்றாக உளர்திவிடு செல்லுங்கள்.. ஓம் நமசிவாய நமக ❤
@ravithulasi2589
@ravithulasi2589 4 ай бұрын
சபரிமலையில் கூடத்தான் நிறைய பேர் இறக்கிறார்கள்...ஏதோ வெள்ளியங்கிரியில் மட்டும் நடப்பது போல..செய்தி போடுகிறார்கள்...
@rajendrasozhan7854
@rajendrasozhan7854 4 ай бұрын
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் குறைந்து விட்டால் அதனால் செய்தியை ட்ரெண்ட் ஆக்குகிறார் கள் சேட்டன் கள்
@dhanapalm2606
@dhanapalm2606 4 ай бұрын
உடல்நலக் குறைவோடும் தன்னை காண வருகிறானே இவனல்லவா சிறந்த பக்தன் இவனுக்கு இனிமேலாவது உடல் உபாதைகள் நீங்கி வாழ்வில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கையை கொடுப்போம் என்று ஏன் சக்தி வாய்ந்த சிவபெருமான் நினைக்கவில்லை. எல்லாம் கற்பனை கதைகள் நம்மை ஆளுகிறது. இதையெல்லாம் உணர்ந்து தான் நம் அறிவார்ந்த முன்னோர்கள் தாயைச் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை இதை கடைப்பிடித்தாலே நம் குழந்தைகள் ஒழுக்கத்துடன் வளரும் வாழும் இது தான் உண்மை. சினிமா கதைகள் எப்படி பல சினிமா பைத்தியங்களை பொய்யான கதைகள் மூலம் அதன் வாயசைக்கும் பொய்யான கதாநாயகன்கள் அடிமையாக்கி இன்று வரை ஒரு வெறியோடு முட்டாளாக்கி வருகிறதோ அதேபோல் பழைய பொய்யான கதைகள் இன்று வரை நம்மை மூடநம்பிக்கையில் வைத்திருக்கிறது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்
@cinemamix2662
@cinemamix2662 4 ай бұрын
சென்ற வருடம் நான் சென்றபோது மலைகள் தீப்பற்றியது அதில் இரண்டு பேர் மூச்சுத் திணறி மரணம் அடை அடைந்தனர் பலர் ஐந்தாம் மலையிலிருந்து கீழே திரும்பினர்.... அதற்கு அடுத்த வாரம் என் நண்பன் சென்றபோது அடர்த்தியான மழையால் அவதிப்பட்டு இருவர் சறுக்கி விழுந்து பலி என் நண்பன் மற்றும் இருவர் மட்டுமே ஏழாம் மலை ஏறினர் அவன் கூட போன ஏழு பேர் ஆறாவது மலையிலிருந்து மேலே ஏற முடியாமல் கீழே இறங்கினர்😢
@cooltalks3619
@cooltalks3619 4 ай бұрын
Govt must arrange water, and medical camp for each hills Please
@jcbvel1278
@jcbvel1278 4 ай бұрын
எல்லாம் அவன் செயல் ' ஓம் நமச்சிவாய. .!🙏
@mariajohn1978
@mariajohn1978 4 ай бұрын
தப்பெல்லாம் நீங்க செஞ்சிட்டு ஆண்டவன் மேல ஏண்டா பழிய போடுறீங்க ...???? ஆண்டவன் யாரையும் கூப்பிட்டு வச்சு கொலை பண்ண மாட்டான்... அதேபோல இந்த உலக வாழ்க்கை முழுவதுமாக அனுபவிக்க தான் நம்மை படைத்து இங்கே அனுப்பி இருக்கிறான் .... இந்தப் போலி பக்தியாளர்கள் தான் செய்யும் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்
@dhanushkaran8313
@dhanushkaran8313 4 ай бұрын
ஓம் நமச்சிவாய
@dronemangt857
@dronemangt857 4 ай бұрын
மக்களே, அது ஒன்றும் சுற்றுலா ஸ்தலம் அல்ல ஆன்மீக ஸ்தலம்,
@venkateshg.r400
@venkateshg.r400 4 ай бұрын
டேய் இறைவன் உங்கள் உள்ளத்தில் வைங்கடா உங்க குடும்பம் மனைவி பிள்ளைகள் நல்ல பார்த்துக்குங்கோ பெற்ற தாய் தந்தையை வணங்குங்கோ இறைவன் உங்க கூட இருப்பான்
@dhanapalm2606
@dhanapalm2606 4 ай бұрын
சூப்பர் நண்பரே இதெல்லாம் பழங்கால பொய்யான கற்பனை கதைகளை இன்னமும் நம்பி வெறிபிடித்து அலையும் மூடர்களை திருத்தவே முடியாது. தங்கள் ஒவ்வொரு வரியும் ஆழமான தெளிந்த கருத்துகளைக் கொண்டது.
@ahilandeswarypalaniyandy7193
@ahilandeswarypalaniyandy7193 4 ай бұрын
Manam oru kovil
@kalai30586
@kalai30586 4 ай бұрын
🎉❤ நீங்க நம்மாளு 🙌
@sivasamy2324
@sivasamy2324 4 ай бұрын
முதலில் பக்தியுடன் செல்ல வேண்டும். உடல்நிலை குறித்து ஐய்யம் உள்ளவர்கள் தவிர்ப்பது நலம்.
@dhanapalm2606
@dhanapalm2606 4 ай бұрын
உடல்நலக் குறைவு இருந்தும் சிவனைக் காண வேண்டும் என்று தானே போயிருப்பார் இப்படி விவரமா குறை காணும் மனிதரே கொஞ்சம் மனசாட்சியோடும் பொறுமையோடும் இப்படி யோசித்துப் பாருங்கள் உண்மை புரியும் ஒரு மன்னன் மனைவிக்கு கூந்தலில் மணம் இருக்கிறதா இல்லையா ( இது ரொம்ப முக்கியம் பாருங்கள்) என்பதற்கு ஓடோடி வந்த அதிபயங்கர சக்தி வாய்ந்த சிவபெருமான் ஏன் உடல்நலக் குறைவோடு வேகாத வெயிலில் தன்னைக் காண வந்திருக்கிறான் அவன் நல்லவனோ கெட்டவனோ இனிமேலாவது நல்ல ஆரோக்கியத்தோடு குடும்பத்தில் சந்தோஷமாக வாழட்டும் இந்த ஏழை பக்தன் என்று ஓடோடி வரவில்லை நல்ல வேடிக்கை இதெல்லாம் புருடா கதைகள். இதையெல்லாம் உணர்ந்து தான் நம் அறிவார்ந்த முன்னோர்கள் தாயைச் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை இதை கடைப்பிடித்தாலே நம் குழந்தைகள் ஒழுக்கத்துடன் வளரும் வாழும் வீடும் நாடும் முன்னேறும்.
@muthusamy8555
@muthusamy8555 4 ай бұрын
சிவத்திற்கு பிறப்பும் இறப்பும் சமம் பிறப்பையும் இறப்பையும் தள்ளிவைக்த அல்லது காப்பாற்ற அவசியம் இல்லை கூடாது சுயநலனுக்காக மலை ஏறக்கூடாது மோட்ச பிராப்தி கிடைத்தால் வரவேற்கும் மனதைரியம் வேண்டும்
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 4 ай бұрын
​@@dhanapalm2606உண்மை.நன்றி.
@SangeethaSenthil-oh6lh
@SangeethaSenthil-oh6lh 4 ай бұрын
இது துரதிஷ்டம் இல்லை அதிர்ஷ்டம் இவர்கள் பாக்கியசாலிகள்
@tamilsithermahimaivenkat5430
@tamilsithermahimaivenkat5430 4 ай бұрын
எந்த மலையும் ஏறாமல் 1000/ பேர் இருக்கிற இடத்தில் 7 பேர் சராசரி இறக்கிறார்கள் இங்கு இந்த நிகழ்வு இயற்க்கைதான்
@jothilakshmi8881
@jothilakshmi8881 4 ай бұрын
எந்த ஒரு கோவிலுக்கும் ,🙏அந்த தெய்வம் அனுமதி இல்லாம நாம போக முடியாது.. இது உண்மை...
@gopalagopala1303
@gopalagopala1303 4 ай бұрын
ஆன்மீக சுற்றுலா என்று பெயர் சூட்டி, பக்தி மார்க்கம் மடை மாற்றம் செய்ய வேண்டாம் என்று அனைவரையும் வேண்டுகிறேன்
@prakashom7989
@prakashom7989 4 ай бұрын
நகர வாழ்க்கை வாழ்ந்து வாகனங்களில் மட்டுமே அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் ஆண்கள் உடல் உழைப்பு உடற்பயிற்சி இல்லாமல் இருப்பவர்கள் திடீரென இது போன்ற கடினமான மலைக்கு செல்லவதை தவிர்க்க வேண்டும் இல்லையெனில் பயணிக்கும் முன்பு இருந்தே பயிற்சிகள் செய்து உடலை தயார் செய்வது நல்லது
@Vijay-ig5ck
@Vijay-ig5ck 4 ай бұрын
வெள்ளியங்கிரி மலையை பற்றி எதோ தவறா மக்கள் மத்தியில் சித்தரிக்கிற மாதிரி இருக்கு நான் கிட்டதட்ட 30 மணிநேரத்துக்கு மேலாக வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி மலையேறி சாமி தரிசனம் பண்ணவன் என் வயது 31 வெள்ளியங்கிரி செய்தி எல்லாம் ஏதோ உள்நோக்கத்தோடு வெளியிடுகிறார்கள்
@muthugopal9524
@muthugopal9524 4 ай бұрын
Verygood
@kathirpriyaharsha4053
@kathirpriyaharsha4053 4 ай бұрын
சிவாய நம
@n.arumugam7379
@n.arumugam7379 4 ай бұрын
💧Water batel ealaam ipo kaasu paakaranuka pokum valeil thaineer eatukakuutatha?
@vickyjeeva3861
@vickyjeeva3861 4 ай бұрын
ஓம் நம சிவாய 🙏
@esvarnp6259
@esvarnp6259 4 ай бұрын
ஓம் நமசிவாய
@jothilakshmi8881
@jothilakshmi8881 4 ай бұрын
விரதம் இருந்து பயத்தோடு சிவன் சாமி நினைத்துகொண்டு மலை ஏரினா ல் நல்லது...🙏 தெய்வ பக்தி வேண்டும்......❤
@santhiarumugam46
@santhiarumugam46 4 ай бұрын
யாருகும், நல்ல ஆரோக்யமான உணவே இல்லை, மலை காலம் காலமாக ஒரே mathirithan eruku naam nam உணவில் seriyllai naalai nam kulanthaikal eppadi erupparkalo 😢 pizza burger white chiken, கொழுப்பு nirantha பொருளுக்கு thadai poda vendum😢,
@villagesidecooking
@villagesidecooking 4 ай бұрын
நான் சென்று வந்து விட்டேன்.
@vivekrajan3484
@vivekrajan3484 4 ай бұрын
March 12 ஆம் தேதி ஏறினேன்.. 7 மணி நேரத்தில் முடித்து வீடு திரும்பினேன்... மலை எருபவர்களுக்கு கண்டிப்பாக உடல் ஆரோக்கியம் அவசியம்... 50 நாள் யோகா பயிற்சி செய்து ஏறுங்கள்... ஓம் நமசிவாய..🔱🔱🔱
@suresh83friends
@suresh83friends 4 ай бұрын
விரதம் இருந்து செல்வது உத்தமம். வெரும் சுற்றுலா தலம் அல்ல அது. Om Namah shivaya 🙏🙏🙏.
@sathish3252
@sathish3252 4 ай бұрын
It's not an easy to climb
@rajapriya7317
@rajapriya7317 3 ай бұрын
❤❤ om nama sivaya❤❤❤❤
@user-vo3tf3fi4m
@user-vo3tf3fi4m 4 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🙏🕉️🔱🙏🕉️🔱🙏🕉️🔱🙏🔱🕉️🙏🕉️🔱💞🌺
@rangarajan9862
@rangarajan9862 4 ай бұрын
ஹரி ஓம் நமசிவாய நமஹ 🙏🏻
@gopiv608
@gopiv608 4 ай бұрын
மன்னிக்க வேண்டும். ஒரு சிலர் வருடத்தில் (ஒரு மாதம் அசைவம் சாப்பிடமாட்டார்கள்)ஆனால். மாதம் ஆரம்பிக்கும் முன் நாள்.15.நாட்களுக்கு.சாப்பிடவேண்டிய. அசைவம் சாப்பிடுவார்கள். ஏய்ன். விரதம் இருப்பவர்கள் 3. நாள் அசைவம் சாப்பிடக்கூடாது.4.வது நாள் விரதம் ஆரம்பிக்க வேண்டும்.this ok.(விரதம் முக்கியம். அதை விட குடும்பமும் முக்கியம்).....
@ratheeshgeetha2197
@ratheeshgeetha2197 4 ай бұрын
ஓம் தகஒ போற்றி
@sethuramalingam8809
@sethuramalingam8809 4 ай бұрын
ஓம்நமசிவாய
@t_senthil_murugan
@t_senthil_murugan 4 ай бұрын
ஓம் சிவாய நமக 🙏
@subramanichinnusamy1757
@subramanichinnusamy1757 4 ай бұрын
முக்தி கிடைத்தது
@bnature4433
@bnature4433 4 ай бұрын
போகனும்னு ஆசைப்பட்டால் மலைக்கி மேல ஏறாம மலைக்கி கீழயே நிண்டு சுத்திப்பார்த்துட்டு வந்துறனும்.
@indumathy7021
@indumathy7021 4 ай бұрын
😮
@kalai30586
@kalai30586 4 ай бұрын
😂
@gowthamvijay7024
@gowthamvijay7024 4 ай бұрын
பகல் டைம் ல மலை ஏற வேண்டாம் வெயிலின் தாக்கம் அதிகம்.. இரவு பயணம் செல்வது நல்லது... நான் நேற்று தான் போய் வந்தேன்
@kumararun5990
@kumararun5990 4 ай бұрын
நானும் கோயம்புத்தூர் தான் இரவு நேரத்தில் மலை ஏற வெளிச்சம் இருக்குமா ப்ரோ
@sudharsankm8481
@sudharsankm8481 4 ай бұрын
Kootam irunthucha bro...
@kodaari_kumbal
@kodaari_kumbal 4 ай бұрын
No oxygen in morning time
@kodaari_kumbal
@kodaari_kumbal 4 ай бұрын
Best time morning 6 for starting
@IamPrincy007
@IamPrincy007 4 ай бұрын
​@@kumararun5990டார்ச் லைட் அவசியம். சித்ரா பௌர்ணமிக்கு முன், பின் மூன்று நாட்கள் நிலா வெளிச்சத்தில் சூப்பராக இருக்கும்
@TnpscExamTamil
@TnpscExamTamil 4 ай бұрын
ஓம் நமசிவாய 🕉🙏
@SRSR-ci2fw
@SRSR-ci2fw 4 ай бұрын
After covid this kind of incident happening 😢
@Balan-ve8uu
@Balan-ve8uu 4 ай бұрын
3500 அடி அல்ல 6000 அடி உயரம் கொண்டது வெள்ளியங்கிரிமலை ஆகும். இதை கீழே அடிவாரத்தில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் தலபுராணத்தில் காணலாம்.
@phandu7288
@phandu7288 4 ай бұрын
நல்லது தான்
@UmavijayUmavijay
@UmavijayUmavijay 4 ай бұрын
நான் முருகன் இருக் 4:14 கும் மலை ஒன்றில் 40படிகளில் ஏறினேன் கழுத்தின் இருபுறமும்.😮😮😮😮 பயங்கர வலி ஆனால் மறுநாள் kmcயில் அட்மிட் அடைப்பு90% ஸ்டன்ட் வைத்து ஆபரேஷன். முருகன் அருள் நலமுடன் உள்ளேன் ஹார்ட் ப்ராப்ளம் இருப்பவர்கள் மலை என்ன மாடிகூட ஏறக்கூடாது ஏறமாட்டார்கள்
@kalai30586
@kalai30586 4 ай бұрын
😢😌
@paru1228
@paru1228 4 ай бұрын
Oxygen saturation kammi agum height poga poga so heart patients ,stroke patients , aged persons, respiratory complaints iruka patients la poga kudathu
@kingmakeranandh5603
@kingmakeranandh5603 4 ай бұрын
Om namah shivaya🙏🙏🙏
@dhanamshivanya2381
@dhanamshivanya2381 4 ай бұрын
சிவ மோட்சம் இப்படியும் கிடைக்கும்போல
@viswanathank.viswanathan3166
@viswanathank.viswanathan3166 4 ай бұрын
Only fit and healthy people should go to velliamgiri hill temple.. Translate to tamil
@ponnusamytp3847
@ponnusamytp3847 4 ай бұрын
Avoid plastic love nature nature love's u
@arvindkumar-uy4ft
@arvindkumar-uy4ft 4 ай бұрын
😳
@Yoba492
@Yoba492 4 ай бұрын
2020 .... 4 varushathuku munaadiyellam intha prachanai illaiye 🙄🙄🙄🤔🤔🤔🤔🤔...????
@jothikannan7512
@jothikannan7512 4 ай бұрын
தப்பூசி.
@sharanprasathj412
@sharanprasathj412 4 ай бұрын
பாவாடை நீயுஸ் அன்ட் ஆட்சி ..
@cooltalks3619
@cooltalks3619 4 ай бұрын
Nanga sunday tha ponum en friend athala oruthar body pathanga , please wear slippers or atleast carry socks , dont climb the 7th hill from 11 pm to 4pm , sand is like dessert sand, foot full ah damage agum , please carry more luggage, please
@kumarblore2003
@kumarblore2003 4 ай бұрын
Good info.
@AhmedAli-my9oc
@AhmedAli-my9oc 4 ай бұрын
😢😢😢😢
@jenajeyaraj6324
@jenajeyaraj6324 4 ай бұрын
ஜீவன் தரும் கடவுளை தேடி செல்லுங்கள் அப்போது தான் உயிரும் மிஞ்சும் உண்மையான சொர்க்கமும் கிடைக்கும்
@pulikutty3999
@pulikutty3999 4 ай бұрын
ஒவ்வொரு வருடைய நம்பிக்கையை உடைக்க நினைக்காதே. வெள்ளைக்காரன் வரும் வரை அனைவரும் இந்த மாதிரி வழிபாடு களைத்தான் செய்தனர். இது வரலாறு.
@IamPrincy007
@IamPrincy007 4 ай бұрын
டேய் பாவாடை மூடிக்கிட்டு போய் அந்த மூனு ஆணிகளை புடுங்கு போ வந்துட்டான் 😡😡😡
@karthikn8662
@karthikn8662 4 ай бұрын
Ithai muthan muthalil yar eppadi kandupidithar gal
@ManiManikandan-nt5ek
@ManiManikandan-nt5ek 4 ай бұрын
அந்த ஏழாவது மலை மீது தீராத நோய்களைத் தீர்க்கும் மூலிகை சித்த வைத்தியம் பார்க்கும் வைத்தியர்கள் இருந்தார்கள் அவர்கள் சித்தர்களிடம் பயிற்சி பெற்றவர்கள் அவர்களைப் பார்க்க உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் நாட்டு மருந்து வாங்க செல்வது வழக்கம் அதுவே இப்பொழுது மலையேறும் பயணமாக மாறிவிட்டது🙏
@alifeoftravel4956
@alifeoftravel4956 4 ай бұрын
Sivayanama
@KarthiKarthi-ey5pm
@KarthiKarthi-ey5pm 4 ай бұрын
Siva siva🙏🙏🙏🙏🙏🙏
@NavinKumar-iu2yh
@NavinKumar-iu2yh 4 ай бұрын
After COVID vaccination hearing more heart attack news 😢
@bubblekutty3869
@bubblekutty3869 4 ай бұрын
Kadavulna ennane thareyama anga porom
@satheesrajasokan5127
@satheesrajasokan5127 4 ай бұрын
The government should place some medical assistance camp in hill during the period
@HddhsgmvbxfXbjfgamf
@HddhsgmvbxfXbjfgamf 4 ай бұрын
இவர்கள் அனைவரும் செர்க்காம் செர்வர்கள்
@user-zk4im2ll4o
@user-zk4im2ll4o 4 ай бұрын
Neengha poi pathutu vanthengalla Sir sivayanamaohm
@VijiRaghu-mq4ue
@VijiRaghu-mq4ue 4 ай бұрын
You mean soorgam !
@kumarblore2003
@kumarblore2003 4 ай бұрын
இந்த பதிவை தப்பு என்று எழுதியிருப்பது,மிகவும் ஆச்சரியமாக உள்ளது ஆன்மீகம் எங்கே செல்கிறது என்பது புரிய வில்லை. தவறுகள் நடக்கும் போது, அது மக்களுக்கு தெரிந்தால்தான் அடுத்து செல்பவர்கள் முன் எச்சரிக்கை யுடன் செல்வார்கள்.
@VijiRaghu-mq4ue
@VijiRaghu-mq4ue 4 ай бұрын
Jaggi idai mattum vittu vaithullaaraa ?
@nilansdad9011
@nilansdad9011 4 ай бұрын
I climb 7 th hill with out water 🥴 But shiva saves me 🛐
@subramanian4321
@subramanian4321 4 ай бұрын
தண்ணீர் தாகம் எடுக்கும். தண்ணீரை கைவசம் வைத்துக் கொள்ளவேண்டும்! குறைந்த குருதி அழுத்தம் மேலே செல்லச்செல்ல மிகவும் குறையும். இறங்கும் போது அழுத்தம் அதிகரித்து தாங்க முடியாத தலைவலியில் தவிக்க நேரிடும்!
@ManavalanManavalan-eq9mf
@ManavalanManavalan-eq9mf 4 ай бұрын
எதுக்கு போகனும் வீட்டில் கும்பிட்டு வந்தால் போதாது
@kalai30586
@kalai30586 4 ай бұрын
🎉😂
@cMuthukumar-jr1cv
@cMuthukumar-jr1cv 4 ай бұрын
🙏🙏🙏
@RS-lu8nj
@RS-lu8nj 4 ай бұрын
இதயத்தில் குறைபாடு உள்ளவர்கள்
@thiaygu1
@thiaygu1 4 ай бұрын
I dont think the trekking here is that difficult. The problem is too much crowd which causes delay, also lack of water is also problem.
@vetrivelsimbu4833
@vetrivelsimbu4833 4 ай бұрын
முண்று பேர் இருந்தவர் சிவன் காலடியில் இடம் கிடைத்தது
@devimanikam4268
@devimanikam4268 4 ай бұрын
Nan oru pen 2 murai malai yeri irangi vitten amma 3 a m murai adutha varudam sella vendum yeppodhum iraivan kodave irupar
@satheeshkannan2087
@satheeshkannan2087 4 ай бұрын
என் அப்பன் ஈசனே சிந்தையில் நிறுத்தி அவரின் நினைவோடு மலை ஏறிச் சென்றால் அவரே ❤ தரிசிக்கலாம்..... அவர்களுக்கு மோட்சம் கிடைக்கும்.....
@umabalaji3120
@umabalaji3120 4 ай бұрын
முழு உடல் பரிசோதனை பெற்றவர்களை அனுமதிப்பதே சிறந்தது. முந்தைய காலம் போல தற்போது இல்லை. உடற்பயிற்சியே இல்லாத போது இத்தகைய மலையேற்றத்தை தவிர்ப்பது நல்லது. கோபுர தரிசனம் பாப விமோசனம் என இந்துமதம் குறிப்பிடுகிறது.
@gnanapackiam483
@gnanapackiam483 4 ай бұрын
ஏன் அந்தபாதை எல்லாம் நல்லா ரோடுகள் போட்டு டெவலப் பண்ண வேண்டிய தானே
@pavithravellingiri
@pavithravellingiri 4 ай бұрын
Yean? Aduthu real estate kaaranga vandhu plot pottu vikkava? Its just for people who are fit, anyone with health issues is not eligible to take up this treaking
@Bipin_ARTS
@Bipin_ARTS 4 ай бұрын
Because of ladies who climb vellingiri
@balajivv9402
@balajivv9402 4 ай бұрын
Hi
@amuthashanthi-is1xc
@amuthashanthi-is1xc 4 ай бұрын
Om 🙏
@shreeranga3850
@shreeranga3850 3 ай бұрын
கோவில் epo closing
@shreeranga3850
@shreeranga3850 3 ай бұрын
Sollunga friends closing date
@sandyraj6365
@sandyraj6365 4 ай бұрын
Why can’t the govt do a proper road to this temple? Atleast proper steps…
@Krishnukisan
@Krishnukisan 4 ай бұрын
En thambi 5 days ku munadithan poittu vandhan..... Om namashivaya
@vinmur-px6qx
@vinmur-px6qx 3 ай бұрын
All go at your own speed, dont follow your friends speed,
@saravananthangamani8737
@saravananthangamani8737 4 ай бұрын
Yellaam sivamayam.
@sudhakarn4751
@sudhakarn4751 4 ай бұрын
Karthika❤❤❤
@sivajs777jaya5
@sivajs777jaya5 4 ай бұрын
எது போறிங்க?
@ahilandeswarypalaniyandy7193
@ahilandeswarypalaniyandy7193 4 ай бұрын
Bakthargal adikkadi povadhu therigiradhu arasu makkalukku etra nanmaigal seiyalam
@partheebanshanmugani
@partheebanshanmugani 4 ай бұрын
தயவுசெய்து இந்த மாதிரி மலைகள் ஏறி கடவுளை காண்வதை விட தெருவில் இருக்கும் மனிதர்களுக்கு உணவு கொடுங்கள்
@kalai30586
@kalai30586 4 ай бұрын
💯🙏
@sravikumar7862
@sravikumar7862 4 ай бұрын
வரலாறு தெரிந்து நீயூஸ் எழுதுங்க
@kowsalyajayakumar98
@kowsalyajayakumar98 4 ай бұрын
Yarda ningala...mutrum thurantha munivara da ningala.. adventure panure nu alpaisu la poitu irukeenga..kena kiruku thanama panureenga da..nam irukum idamellam kadavul irukaru..vellingiri malai la matum tha illa...😢
@murugankothandapani772
@murugankothandapani772 4 ай бұрын
இவர்கள் புண்ணியம் செய்தவர்கள் ஓம் நமசிவாயம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@tamilselvam135
@tamilselvam135 4 ай бұрын
Corona?
@vallin3379
@vallin3379 4 ай бұрын
Sivanai adaithuvitargal ethula kastabada vendam
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,2 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 91 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
History of Dubai in Tamil | How Dubai Become So Rich
16:23
Niruban Talks
Рет қаралды 274 М.
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,2 МЛН