Thengumarahada village ஒரு பார்வை|இங்க பாதி வீட்டுல ஆட்களே இல்லை🤔|part - 2

  Рет қаралды 24,905

Kovai Outdoors

Kovai Outdoors

10 ай бұрын

Thengumarahada village part -1🔗👇
• தமிழ்நாட்டின் தனி தீவு...
தெங்குமரஹடா கிராமத்தினரை இடமாற்றம் செய்ய தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் நிதி ஒதுக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பவானிசாகர் டவுன் பஞ்சாயத்து பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தை தற்காலிகமாக வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்ட எல்லையில் தெங்குமரஹடா கிராமம் உள்ளது. மாயாற்றின் கரையில் அடர்ந்த தீவாக அமைந்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களை கடந்து இக்கிராமம் செல்ல வேண்டும். மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலம் வழியாக பவானிசாகர் வந்து அங்கிருந்து 25 கி.மீ. அடர்வனத்தில் சென்று தெங்குமரஹடா அடைய வேண்டும். கோத்தகிரி, மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் காலை, மாலை என 2 அரசு பஸ்கள் இக்கிராமத்துக்கு இயக்கப்படுகிறது. மாயாற்றின் கரையில் பஸ் நிறுத்தப்பட்டு பரிசிலில் ஆற்றை கடந்து இக்கிராமம் செல்ல வேண்டும். தெங்குமரஹடா கூட்டுறவு சங்கத்துக்கு 1948-ம் ஆண்டு 100 ஏக்கர் நிலம் வழங்கி அங்குள்ளவர்கள் விவசாயம் செய்தனர். பின் வனத்துறை நிலம் 500 ஏக்கர் குத்தகைக்கு வழங்கியது. இப்பகுதியில் புலி, யானை, சிறுத்தை, கரடி, மான் உட்பட ஏராளமான விலங்குகள் வசிக்கின்றன. சமீபத்தில் நடந்த கணக்கெடுப்பில் இங்கு 33 புலிகள் இருப்பதாக அறிவித்தனர். மனித, விலங்குகள் மோதல் கருதி, இம்மக்களை வனத்தில் இருந்து வெளியேற்றி வேறு பகுதியில் குடியேற்ற அரசு முடிவு செய்தது. இதற்காக நீதிமன்ற உத்தரவை, வனத்துறை பெற்றது. கடந்த 2011-ம் ஆண்டு கோவை மண்டல வனப்பாதுகாவலர் இம்மக்களுக்கு வழங்கிய நிலத்தை திரும்ப பெறுவதாக பரிந்துரைத்தது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சப்-கலெக்டர் ஆய்வுப்படி 497 குடும்பத்தினர் அங்குள்ளதாகவும் அவர்களை வெளியேற்ற கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் கலந்தாய்வு கூட்டமும் நடத்தியது. இதில் ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்ட கலெக்டர்கள், சத்தியமங்கலம் மற்றும் முதுமலை புலிகள் சரணாலய கள இயக்குனர்கள் பங்கேற்றனர். போதிய இழப்பீடு வழங்கினால் கிராமத்தை விட்டு வெளியேறுவதாக குறிப்பிட்ட மக்கள் தெரிவித்தனர். இதன்படி இக்கிராமத்தில் வசிக்கும் 497 குடும்பத்துக்கும் தலா ரூ.15 லட்சம் என ரூ.74.55 கோடி ரூபாய் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவில் தெரிவித்தது. சில மாதங்களாக இப்பிரச்சனை கிடப்பில் போனது. இந்நிலையில் தெங்குமரஹடா கிராமத்தினரை இடமாற்றம் செய்ய தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் நிதி ஒதுக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிதியை கிராம மக்களுக்கு 2 மாதங்களில் வழங்கி அடுத்த ஒரு மாதத்துக்குள் அவர்களை வேறு இடத்துக்கு மாற்றம் செய்து அக்டோபர் 10-ந்தேதிக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது. கடந்த 10 ஆண்டாக தீவிரம் காட்டிய பிரச்சனையில் காலக்கெடு நிர்ணயித்ததால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து அக்கிராம கமிட்டியினர் கூறியதாவது:- எங்கள் மூதாதையர் காலம் முதல் இங்கு வசித்து விவசாயம் செய்கிறோம். 3, 4-வது தலைமுறையாக உள்ளோம். இங்கு எங்களுக்கு பட்டா உட்பட எந்த வசதியும் இல்லை. இருந்தும் போதிய இழப்பீடு வழங்கி ஈரோடு மாவட்ட பவானிசாகர் அணை பகுதியில் ஒரு குடும்பத்துக்கு குறைந்த பட்சம் 5 சென்ட் நிலம் வழங்கி வீடு கட்டித்தர வேண்டும். அப்பகுதியை தனி பஞ்சாயத்தாக அறிவித்து விவசாயம் செய்ய வாய்ப்பு தர வேண்டும். அதேநேரம் தெங்கு மரஹடா கிராமம் உள்ள பகுதியில் கல்லாம் பாளையம், கல்லாம் பாளையம் கீழூர், அல்லிமாயார், புதுக்காடு என 4 கிராமங்களும், அங்கு பல 100 பழங்குடியினர் வசிக்கின்றனர். அவர்களது நிலை என்ன என்பதை அரசும், வனத்துறையும் தெளிவுபடுத்த வேண்டும். இங்கு வசிப்போரில் பலருக்கு இக்கிராமத்தில் இருந்து வெளியேற விருப்பமும் இல்லை. அவர்களது கருத்தையும் அரசு கேட்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் கூறும்போது, இப்பகுதியில் வனவளத்தை அதிகரிக்க இக்கிராமத்தை அப்புறப்படுத்த வேண்டி உள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி அவர்களுக்கு இழப்பீடும், மாற்று இடமும் வழங்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள இக்கிராமத்தை அகற்றி ஈரோடு மாவட்டத்தில் மறுகுடியமர்வு செய்வதில் நிர்வாக ரீதியாக பிரச்சனை உள்ளது. இருப்பினும் பவானிசாகர் டவுன் பஞ்சாயத்து பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தை தற்காலிகமாக இவர்களுக்கு வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்விடத்தை ஒதுக்குவது பற்றி மாவட்ட நிர்வாகமும், அரசும் விரைவில் அறிவிக்கும் என்றனர்.
#westernghats #tribalvillage #nilgiris #Thengumarahada #sathyamangalamtigerreserve #tribal #bikeride #dangerous #elephantzone #mudhumalai #tigerreserve #tribalhouse
This video is about an Thengumarahada village located in Nilgiris district,entering into this village through Sathyamangalam tiger reserve forest.. outside visitors and tourists strictly prohibited to this village.Few Tribal villages around this Thengumarahada village and forests..
Thengumarahada stay, Thengumarahada village, Thengumarahada forest, Thengumarahada bus timings, Thengumarahada Temple, Thengumarahada distance, Thengumarahada village Tamil, Thengumarahada bus travel, Thengumarahada river crossing, Thengumarahada elephant, Thengumarahada village bus, Thengumarahada animals, Thengumarahada forest animals, Thengumarahada tiger, Thengumarahada news, Thengumarahada road trip, Thengumarahada school, Thengumarahada permission, Thengumarahada Jeep Safari, Thengumarahada route, Thengumarahada animal crossings, Thengumarahada hospital, Thengumarahada agriculture, Thengumarahada people's, Thengumarahada, Villages near Thengumarahada..
Subscribe and support our channel 🙏

Пікірлер: 93
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 10 ай бұрын
இது நாடா அல்லது காடா இந்த பூமியில் எல்லோருக்கும் வாழ்வதற்கு உரிமை உண்டு ஆனால் இந்த பாரத கண்டத்தில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்திற்கும் நீலகிரி மாவட்டத்திற்கும் நெல்லையில் உள்ள காட்டுப்பகுதிக்கு இடையில் அமைந்திருக்கும் பூர்வீக கிராமம் தெங்கு மராட்டா என்ற அழகிய கிராமம் ஏராளமான காட்டு விலங்குகள் உள்ள கோத்தகிரி மலை அடிவாரத்தில் உள்ள கிராமம் தான் தெங்குமராட்டா இதில் வாழ்வதற்கு மனிதருக்கு இடம் இல்லையா இதற்கு உத்தரவு விடுவது யார் மக்களிடம் ஓட்டு வாங்கி ஆட்சியில் அமர்ந்து அதிகாரம் செலுத்துவதன் மூலம் மக்களை வெளியேற சொல்வதற்கு இவர்கள் யார் காரணம் விலங்குகளுக்கு பாதிப்பு உண்டாகும் என்று கூறுவது மக்கள் விரோத நடவடிக்கை விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கலாம் இதை செய்தால் நன்றாக இருக்கும் நீலகிரி ஜில்லாவின் இதைவிட ஆபத்தான பகுதிகளில் மக்கள் வசிக்கிறார்கள் தெங்குமராட்டா கிராமத்து காப்பாற்ற வேண்டும் இதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
❤️
@vijayachandrahasan4520
@vijayachandrahasan4520 3 ай бұрын
Namum ange poy vasikkalampola irukku. Gramam romba sutthama,azhaga irukku. Thanks for showing this place.
@kovaioutdoors
@kovaioutdoors 3 ай бұрын
❤️👍
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 5 күн бұрын
தெங்குமராட்டா பக்கத்தில் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் கல்லம்பாளையம் என்ற கிராமம் இருக்கிறது நூற்றுக்கணக்கான வீடுகள் இருக்கின்றன இவர்கள் ஆதிவாசிகள் ஏன் இவர்களை வெளியேற்ற வில்லை முடியாது
@mohamedbadhusha688
@mohamedbadhusha688 10 ай бұрын
We could see "Thengumarahada" clearly from "Kodanad" view point. Such an isolated village.
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
Aamanga brother
@g.r.mahendran.mahendran2098
@g.r.mahendran.mahendran2098 9 ай бұрын
Great great video nice to see and your effort
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
Thanks 👍
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 10 ай бұрын
இந்த ஆட்களை எதற்காக வசிக்கும் இடத்தில் இருந்து விரட்ட வேண்டும் இதை செய்வது யார் மனிதர்கள் இவர்கள் அரசியல்வாதிகள் மக்களால் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இதை எதிர்த்து மக்கள் போராட வேண்டும் மக்கள் வசிக்கும் இடம் தனியாக இருக்கிறது அந்த இடத்தில் எந்த மிருகங்களும் வருவதில்லை இதைவிட காடுகளுடன் இந்தியாவில் காடுகள் வட இந்தியாவில் ஏராளமாக இருக்கின்றன
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
Check my description...
@manojprabhakar4983
@manojprabhakar4983 10 ай бұрын
Thanks you satisfy our expectations hope a lots to come. Fan of you
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
Thanks brother 😊
@sayedalipasha7807
@sayedalipasha7807 10 ай бұрын
Very Very super information thanks brother
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
🤝
@mohamedeleyas3894
@mohamedeleyas3894 10 ай бұрын
Super ji
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
🙌
@kondappan_Traveler
@kondappan_Traveler 10 ай бұрын
Vera level na❤😊
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
Thanks...
@vhillsrider6151
@vhillsrider6151 2 ай бұрын
அண்ணா. அங்கிருந்து சிறியூர் மசினகுடி செல்லும் வழி. பாரஸ்ட் காரருக்கு மட்டும்
@chokalingam5960
@chokalingam5960 10 ай бұрын
Niceplace.
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
Thanks
@dnrtraveler
@dnrtraveler 10 ай бұрын
Sama🎉 anna
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
😍
@rajakkanisellamuthu68
@rajakkanisellamuthu68 10 ай бұрын
வாழ்த்துகள் நண்பா
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
😍😍அண்ணா
@jeevithajeevi7044
@jeevithajeevi7044 10 ай бұрын
Nice place super anna
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
Thank you so much 🙂
@vivekanan9049
@vivekanan9049 Ай бұрын
❤❤❤
@SRIRAM-gd1kh
@SRIRAM-gd1kh 10 ай бұрын
Very nice video
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
Thanks
@user-hw1gi1hj4p
@user-hw1gi1hj4p 10 ай бұрын
Woah
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
🙏
@sankarseenivasan8177
@sankarseenivasan8177 4 ай бұрын
இந்த ஊரில் நான் இருந்தேன் 👌👌👌
@kovaioutdoors
@kovaioutdoors 4 ай бұрын
❤️❤️❤️🥰🥰🥰
@GunavathiSubermunian
@GunavathiSubermunian 6 ай бұрын
Great job bro.
@kovaioutdoors
@kovaioutdoors 6 ай бұрын
Thanks for the visit
@shivadotcom2023
@shivadotcom2023 10 ай бұрын
Vera level experience nanba. Next idha vida vera maari panniirla❤💛💛
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
Sure வாத்தியாரே
@shivadotcom2023
@shivadotcom2023 10 ай бұрын
@@kovaioutdoors 💛💛💛
@boopathivivasayi3150
@boopathivivasayi3150 10 ай бұрын
வாத்தியார் இருக்க பயம் 😄இல்லை
@shivadotcom2023
@shivadotcom2023 10 ай бұрын
@@boopathivivasayi3150 💛💛💛💛
@sivaganeshanm7499
@sivaganeshanm7499 10 ай бұрын
Super
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
Thanks
@sakthikitchen879
@sakthikitchen879 10 ай бұрын
ஆள் நடமாட்டமே இல்லை. ஆனால் ஓட்டல் இருக்கிறது விவசாயம் நடக்கிறது. இது மாதிரி நிறைய ஊர் இருக்கிறது. வீட்டைக் கட்டி போட்டுட்டு வெளிநாடு போயிறாங்க இல்ல வெளியூர்ல போய் வசிக்கிறாங்க. அடுத்து அல்லிராணி கோட்டையை காண்பிக்கப் போறீங்க அப்படித்தானே.
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
அல்லிரானி கோட்டை இல்லைங்க மா.....யானை வீடியோ நாளைக்கு வரும்....
@watchtower4239
@watchtower4239 10 ай бұрын
This 'forest range' once known for 'veerappan's gang' hideout !
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
👍
@elephantloverkalai4179
@elephantloverkalai4179 10 ай бұрын
முதுமலை யானைகள்🐘 முகாம் பற்றி ஒரு பதிவிடுங்கள் அன்ணா 💐💐💐💯
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
Channel la irukku brother ....potruken...thanks
@ramasubramanian7558
@ramasubramanian7558 10 ай бұрын
Great vedeo bro Neengal oru reverai cross panni ponel ellaya antha rever name enna bro Appuram antha village mango tree wonderful ennum closeup la kamichu erukkalam bro nandri vanakkam
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
Moyar river sir .
@prasannakumaran6437
@prasannakumaran6437 10 ай бұрын
സൂപ്പര്‍ 🎉🎉
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
❤️
@vhillsrider6151
@vhillsrider6151 2 ай бұрын
அண்ணா வணக்கம். இங்க பழைய ஓட்டு வீடு சிதில அடைஞ்சு அப்படியே இருக்கும் அன்னக்கிளி படம் எடுத்து வீடு
@p.r.rajakumar9673
@p.r.rajakumar9673 10 ай бұрын
இளையராஜா அறிமுகமான அன்னக்கிளி படம் எடுக்கப்பட்ட இடம் தெங்குமரஹடா
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
ஆமாங்க...
@vickyrv012
@vickyrv012 10 ай бұрын
Vijayakanth ayya'oda "Nenjil thunivirundhaal" movie thengumarahada'la dhan shoot pannanga ❤❤ full movie'um✨
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
😍
@boopathivivasayi3150
@boopathivivasayi3150 10 ай бұрын
Rakul அண்ணா potu kattaiya 🥰🥰
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
🤣
@P_RC_P_J
@P_RC_P_J 3 ай бұрын
மண்ணுக்கு வாசனை கிடையாது....
@vickyrv012
@vickyrv012 10 ай бұрын
Bro actually ethanaala people's veliya poraanga enna reason news'la wild animals irrkura naala dhan veliya ponaangannu solranga unmaiya bro
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
Bro actual reason enakum teriyala.... description la malai malar article copy paste panniruken...read panni paarunga....court order,so namma ethum anga poitu makkal kitta ketu atha video publish panna koodathu ... description la iruka details read pannunga,idea kedaikkum.... thanks
@vickyrv012
@vickyrv012 10 ай бұрын
​@@kovaioutdoorsokk bro👍
@MathiN-fw4wk
@MathiN-fw4wk 2 ай бұрын
Indha oorai kali pana soli order potavanin kudumbam nasamaka pokavendum
@SivaKumar-eb9uo
@SivaKumar-eb9uo 10 ай бұрын
Pandalurla oru idam irukku porengala
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
Sollunga sago polam... Instagram la MSG pannunga ..
@SivaKumar-eb9uo
@SivaKumar-eb9uo 10 ай бұрын
Anna enakku instragrmla ellam poga theriyathu
@simplysiva2397
@simplysiva2397 10 ай бұрын
​@@SivaKumar-eb9uoidem peru
@SoloSince
@SoloSince 10 ай бұрын
Animals edhadhu varuma
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
வர்லாம்
@rakkamuthus8546
@rakkamuthus8546 10 ай бұрын
Where is elephant?
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
காட்டுக்குள்
@selvaraj-vo1kn
@selvaraj-vo1kn 10 ай бұрын
என்னங்கடா வீடியோ காணபிச்சிங்க ஒரு இழவும் இல்லை
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
நீங்கள் எதிர்பார்க்கும் சேனல் இது இல்லை...அது நள்ளிரவில் ராஜ் டிவி யில் ஒளி பரப்புவார்கள்
@Viswa_Guru
@Viswa_Guru 10 ай бұрын
Pagal la silent ahh vum,,, nyt la violent ahh vum irukkum pola 😳😳😳😳😳😳😳😳
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
🫣
@Monkeytale-jx5eb
@Monkeytale-jx5eb 10 ай бұрын
Indha azhagana Gramatha Gaali panna solli government order pottanga bro... Adhan ellame gaali ah iruku !! Paavam😢😢.. Animals vaazhanum nu Gaali pannitanga...
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
Aama bro
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 38 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 26 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 119 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 38 МЛН