உன்னுள்ளே நான் இருக்க உனக்கு ஏன் பயம்…?

  Рет қаралды 624

உயிரைக் காப்போம் உலகைக் காப்போம்

உயிரைக் காப்போம் உலகைக் காப்போம்

24 күн бұрын

அபிராமி (ஈஸ்வர) பட்டரும்… அந்தாதியும்
அபிராமி அந்தாதி பாட்டு பாடலின் கருத்து புரிந்து இசையோடு பாடிடுவாய் கருத்துடனே பாட்டிசைப்பாய்.
“இடைச்சக்கரத்தினுள்ளே நான் இருப்பேன்…!” என்ற பாட்டைக் கேட்டிருப்பாய். ஜெப நிலையில் ஜெபித்ததெல்லாம் உன் சக்கரத்தில் உள்ளது.
1.எல்லாக் கோவில்களிலும் உலோகத்தினாலான சக்கரம் உண்டு.
2.அச்சக்கரம் கடவுளின் சிலைக்குப் பின் புறமாவது முன்புறமாவது இருக்கும்… அல்லது கடவுளின் பாதத்தில் இருக்கும்.
சிலையின் கல் உருவத்தைப் பற்றி முதலிலேயே சொல்லிவிட்டேன்.
சிலையின் பாதத்தின் கீழே உள்ள சக்கரத்தில் சித்தனால் ஜெபித்த ஜெபமெல்லாம் அந்த உலோகத் தகடான சக்கரத்தில் பதிந்துள்ளது. அதைப் பாதத்தில் வைத்த பிறகு தான் சிலையை வைப்பார்கள்.
தெய்வத்தின் எதிரில் நின்று
1.நீ ஜெபிக்கும் ஒவ்வொரு நிலையும் அந்த உலோகத்தில் பதிகின்றது
2.நீ ஒலிக்கும் ஒலியெல்லாம் சக்கரத்தில் பதிகின்றது.
3.ஒலிக்கும் குரல் சக்கரத்திலே பதியும் பொழுது அந்தச் சித்தனால் ஒலித்த ஒலியும் உன் ஒலியும் கலக்கின்றது
4.அப்படிக் கலக்கின்ற போது அந்தச் சித்தனே வெளிவந்து உன்னுள்ளே புகுகின்றான்.
பழனியில் உள்ள முருகர் சிலையே உலோகம் தான். சிறு தகட்டில் ஜெபித்த ஜெபமே அவன்…! அவ்வுருவம் முழுவதும் போகனால் ஜெபித்த நிலை.
முருகனுக்கு மட்டும் எப்படி இவ்வளவு சக்தி வந்தது…? அந்த முருகனின் உள் அர்த்தம் புரிந்ததா…?
சக்கரம் வைத்து பூஜை செய்வதன் பொருள்… நீ இந்த இடத்தில் அமர்ந்து கொண்டு எந்தச் சொல் சொல்கிறாயோ எந்த நிலையில் மூச்சை இழுக்கின்றாயோ “அச்சொல் எல்லாம்… மூச்செல்லாம் என்னுள் வந்து ஐக்கியம் ஆகிறது…”
அந்தாதியைப் படித்துச் சொன்னால் அதை நான் ஏற்பேன்.
1.நான் இயற்றிய அந்தாதியை நீ படித்தால் என் மனம் குளிர்ந்திடும்.
2.என் மனம் குளிர்ந்த நிலையில் உனக்கு அருள்வேன் எல்லாமே…!
சக்கரம் வைத்தால் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும் என்கிறார்கள் எந்தச் சுத்தத்தை நான் கேட்டேன்…? “மனச் சுத்தம் இருந்தால்” என்னுள்ளே வந்திடலாம்.
போகன் நிலையைப் பார்த்தாயா…? சக்கரத்தின் தன்மையே முருகராக வடிவெடுத்துள்ளார். வடிவெடுத்த நிலையிலேயே காலமெல்லாம் அருள்கின்றார்.
நீ “முருகா…” என்று ஒலிக்கும் உணர்வுகள் அவருக்குள் பதிவாகின்றது. உன் மனதிலிருந்து செல்லும் ஒவ்வொரு சொல்லையும் அவர் பதிவு செய்து… உனக்கு அவர் அருளும் சொல் பலவாக வருகின்றது.
1.அந்த முருகன் சிலை இந்த உலகையே ஆட்டுவிக்கும் சிலை.
2.இவ்வுலகில் எந்த இடத்திலும் அச்சத்தின் சொரூபம் இல்லை.
3.அச்சக்தியின் ரூபம் எல்லாவற்றையும் உணர்ந்து அங்கு செல்பவனும் யாரும் இல்லை.
இவ்வளவு காலமும் நீங்கள் பழனிக்கு சென்றீர்கள்…! இந்த நிலை புரிந்ததா…?
1.குறைகளுடன் கோவிலுக்குச் செல்லாதீர்கள்
2.மன நிறைவுடன் சென்று உன் மனதை அவனிடம் தா… அவன் அருள்வான் எல்லாமே…!
அந்த முருகனின் சிலையின் தத்துவத்தைப் புரிந்து சிலர் தன் தொழிலுக்காகப் பயன்படுத்திக் கொள்ளுகின்றார்கள்
ஆனால் அதை பெற்ற மனிதனுக்கும் அந்தத் தத்துவம் தெரியாது. நல் உணர்வாக அவன் பயன்படுத்தி இருந்தால் அவன் நிலையும் உயர்ந்திருக்கும்.
முருகர் சிலையில் உள்ள தத்துவமே சாமி (ஞானகுரு) எழுதியுள்ள சக்கரத்தில் உள்ளது… அச்சிலையில்.
ஐவர் மலையில் உள்ள நிலைக்கும்… உன் ஜெப நிலைக்கும்… “உன் வீட்டில் உள்ள சக்கரத்திற்கும்” உள்ள தொடர்பு தெரிந்ததா…?
1.சக்கரத்திற்கு எதிரில் நீ அமர்ந்து என்ன ஜெபம் ஜெபிக்கின்றாயோ
2.அந்த ஜெபத்தின் அருளை நீ பெறுவாய்…! என்ற பொருளும் இதுவே.
ஐவர் மலையில் உள்ள நல்ல நிலையைப் பெற்றிட உன் ஜெப நிலையைக் கூட்டிக் கொள். சக்கரத்தின் முன் உணவு படைக்கச் சொன்னதன் நிலையில் நீ ஜெபிக்கும் பொழுது சக்கரத்திலிருந்து சித்தர் வெளிப்படுகின்றார்.
அதற்காகத்தான் ஆகாரம்…! ஆகாரம் அவர் புசித்துச் செல்வதற்கல்ல ஆகாரத்தின் சுவையை அவர் எடுத்து மறு சுவையை உனக்கருள்வார்.
கடவுள் என்ன கேட்டாரா…? என்று சொல்லும் வீண் வாக்குவாதம் எல்லாம் வேண்டாம். நீ வைக்கும் ஒரு துளி பாலையும் அவர் ஏற்கின்றார்.
ஏன் சக்கரத்தில் தான் கடவுள் வருவாரா…? படத்திலும் வேறு இடத்திலும் வரமாட்டாரா…! என்று நினைக்கலாம்.
முதலிலேயே உங்களுக்கு எல்லா நிலையும் புரிந்து இருக்கும்
1.கடவுள் என்பவர் எங்கே எப்படி இருக்கின்றார்…? எந்த நிலையில் உள்ளார்…? என்னும் நிலை எல்லாம் பல தடவை சொல்லிவிட்டேன்.
2.எல்லா இடத்திலும் இருக்கும் கடவுளை ஒருநிலைப்படுத்தவே இச்சக்கரம்.
3.கடவுளுக்கு அல்ல அந்த நிலை.
4.உன் மனதை ஒருநிலைப்படுத்தத்தான் சக்கரம்.
பாட்டை பாடச் சொன்ன உண்மையும் இப்போது புரிந்ததா…?
அபிராமி அந்தாதி பாடும் பொழுது அவருடைய சந்தோஷம் நிலைகொள்ளாமல் இருக்கின்றது சந்தோஷ நிலை பெற்றிடவே உங்களை எல்லாம் பாடச் சொல்வது… புரிந்து பாடுவாயாக…!
ஒலியை ஒளியாக்கு…! பழனிக்குச் சென்றால் காலை உதய பூஜைக்குச் சென்று அமர்ந்து நீ ஜெபித்தால்… அந்த நிலையில் உனக்கு ஐவர் மலையின் விளக்கங்களை உன் உதயத்திற்குத் தருகின்றேன்.
அதிலிருந்து எல்லாம் உனக்கு தெரியும்… அவசரம் வேண்டாம் பெரும் பதட்டம் வேண்டாம்…! உன் ஜெப நிலையைக் கூட்டிக் கொள் என்பதின் ரகசியம் எல்லாம் இதுதான்.
சக்கரத்தின் தன்மையைச் சொல்வதும் இதற்காகத் தான்… முருகரைப் பற்றி விளக்கங்கள் சொன்னதும் இதற்காகத் தான்… விளக்கம் மட்டுமல்ல ரகசியமும் தான்.
முருகன் சிலையில் உள்ள தன்மை…. உண்மை புரிந்ததா…?
காட்சி:- முருகா முருகா சத்தம் கேட்கிறது… இங்கும் உள்ளேன் அங்கும் உள்ளேன் எங்கும் உள்ளேன் பாட்டு கைதட்டியபடி…! உட்கார்ந்து அந்த நோட்டை (குருநாதர் சொல்வதை எழுதிக் கொண்டிருக்கும்) எடுத்து படித்துக் கொண்டிருத்தல்.
உன் எழுத்தே உனக்குப் புரியவில்லை… உன் தலையெழுத்தை எழுதியவனைக் கேட்கின்றாயோ…? உன் நிலையை மாற்றிடவே இந்தப் பாடங்கள்.
1.நாளை முதல் இன்னும் துரிதமாகச் சொல்வேன்… என்னுடன் ஓடி வர நீயும் முயற்சி செய்.
2.முடியாது என்ற நிலை உனக்கு வேண்டாம் “முடித்திடுவேன்” என்று சொல்லைப் பகர்ந்திடப்பா.
என் தலையிலும் குட்டி விட்டார் என்று எண்ணாதே “உன்னுள்ளே நான் இருக்க உனக்கு ஏன் பயம்?

Пікірлер
உன்னுள் இருக்கும் என்னை நீ காண்… “புரிந்ததா…?”
20:29
உயிரைக் காப்போம் உலகைக் காப்போம்
Рет қаралды 414
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 164 МЛН
கஷ்டங்கள் வந்தாலும் என் அருள் உன்னுடனே... என்னுடனே நீ இருப்பாயாக...!
11:27
ஒளி பிறந்திட “ஒலியை முதலில் கற்றிடு…”
11:08
உயிரைக் காப்போம் உலகைக் காப்போம்
Рет қаралды 252
மாப்பிள்ளைக் கல்
29:53
Tamil Vaanoli
Рет қаралды 1,2 М.
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 164 МЛН