No video

177 ) நீயும் நானுமா கண்ணா

  Рет қаралды 22,289

Kannadhasan Productions by Annadurai Kannadhasan

Kannadhasan Productions by Annadurai Kannadhasan

Күн бұрын

ஒரு சமூக படத்தில் ஒரு பாடலில் ஒரு புராணக் கதையை எப்படி சொல்ல முடிந்தது? அதுவும் ஒரே வரியில்? அது தான் கண்ணதாசன்.

Пікірлер: 75
@stark2568
@stark2568 Жыл бұрын
கண்ணதாசனின் அற்புதமான வாழ்வியல், தத்துவபாடல்கள் எல்லாமே சிவாஜியின் படத்தில் தான் உள்ளது. எந்த ஒரு நிகழ்ச்சியிலும் சிவாஜியை, அவர் படம் மற்றும் பாடல் காட்சியை பேசாமல் கடந்து போக முடியாது. கண்ணதாசனுக்கு கவிதை எப்படி தானாக சுரப்பது/பிறப்பது போல், சிவாஜிக்கு நடிப்பும், தமிழும் தானாகவே வந்துவிடும். தமிழ் தாயின் இரு கண்கள் சிவாஜியும், கவிஞரும் தமிழ் தாய் பெற்ற தவ புதல்வர்கள். இருவரும் கலைத்தாயின் பரி பூரணஆசிபெற்றவர்கள். தங்கள் திறமை மீது நம்பிக்கை கொண்டவர்கள். சிவாஜி கவிஞரையோ, இசை அமைப்பாளரையோ எந்த விதத்திலும் நிர்பந்தம் செய்ததில்லை-சிவாஜி தன் திறமை மீது கொண்ட அதே நம்பிக்கையை கவிஞர் மீதும் இசை அமைப்பாளர் மீது கொண்டிருந்தார் - இவர்கள் இருவருக்கும் சுதந்திரமாக செயல்பட முடிந்ததால், காலத்தை வென்று இன்றும் கவிஞர் பாடல்கள் பேசப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியை -கவிஞரும்-கணேசனும் or சிவாஜியும்-கண்ணதாசனும் என்ற தலைப்பில் இவர்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றிய படைப்புகளை பேசி இருவரையும் பெருமைப்படுத்தலாம். கவிஞர் தமிழர்களின் வாழ்வியலை கவிதையில் சொன்னார் என்றால் சிவாஜி தமிழர்களின் வாழ்வியலை, கலாச்சாரத்தை பல தலைமுறை தமிழர்களுக்கு தன் நடிப்பால் தமிழால் திரையில் காவியமாக படைத்து சென்றார்!
@ramaniloganarhan
@ramaniloganarhan Жыл бұрын
நன்றாகச் சொன்னீர்
@venkataramanssv6994
@venkataramanssv6994 Жыл бұрын
கதை, ஒரு பிராமண குடும்பத்தைப் பற்றியது. ஆகவே, புராண கதைகளைச் குறிப்பிட்டது, கவிஞரின் கவனமான சிந்தனையாக இருந்திருக்கிறது. கவிஞருக்கு இணை கவிஞரே 🙏🙏🙏
@ts.nathan7786
@ts.nathan7786 Жыл бұрын
புரோகிதர்கள் எல்லோரும் பிராமணர்கள் அல்ல. ஒரு நாட்டில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பிராமணர்கள் இருப்பார்கள் என்று விவேகானந்தரும் சிவானந்தரும் கூறியுள்ளனர்.
@mlkumaran795
@mlkumaran795 Жыл бұрын
நிறைய தடவை இந்த பாடலை கேட்டு பிரமித்து போயுள்ளேன், எப்படி இரண்டு வரிகளில் மிகப்பெரிய புராணங்களை செதுக்கியுள்ளார் என்று❤ மிகப்பெரிய ஜீனியஸ்.
@sundarviswanathan6500
@sundarviswanathan6500 Жыл бұрын
ஒரு காவியப் பாடலுக்கு அற்புதமான விளக்கம் அளித்ததற்கு நன்றி 🙏💐
@venkitapathyn3679
@venkitapathyn3679 6 ай бұрын
கலைத்தாயின் தலைமகன் கவிஞர் புகழ் வாழ்க.
@arlakshmanan3687
@arlakshmanan3687 Жыл бұрын
இதில் ஆச்சரியம் அடைய ஒன்றும் இல்லை ஏன் என்றால் அவர் தெய்வீக கவிஞர் அவருக்கு வார்த்தைகள் சூழ்நிலை ஏற்ப ஓடிவரும் ❤
@vasansvg139
@vasansvg139 Жыл бұрын
தெய்வீக கவிஞர்..... தன்(னி)லை கவனம் செலுத்த தவறி வீணான நபர்களை முன்(னி)லை படுத்தி, அதே நபர்களால் படாதபாடுபட்டார்....
@gopeekrish6002
@gopeekrish6002 Жыл бұрын
WHAT A GREAT MAN….. NO WORDS TO DESCRIBE ❤
@TheVsreeram
@TheVsreeram Жыл бұрын
Kannadasan is the real godfather of young people.. ❤❤
@stark2568
@stark2568 Жыл бұрын
கண்ணதாசன் தோளில், சிவாஜி தன் இரு கரங்களையும் போட்டு நின்று பேசும் படம் - ஒரு அற்புதமான காட்சி -பார்த்து கொண்டே இருக்கலாம் போல் உள்ளது! தமிழ் உள்ளவரை சிவாஜியும் -கண்ணதாசனும் பேசப்படுவர்ர்கள் போற்றப்படுவார்கள்! இருவரும் தமிழ் குடியை சார்ந்தவர்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி!
@ShanthiShanthi-bq8jl
@ShanthiShanthi-bq8jl 8 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@subramaniamsubramaniam1916
@subramaniamsubramaniam1916 Жыл бұрын
Excellent Kannadasan is genius...
@tchandrasinivassane527
@tchandrasinivassane527 Жыл бұрын
கோயில் எனபதும் ஆலயமே, குடும்பம் என்பதும் ஆலயமே இந்த பாடலை பற்று விளக்குங்கள்🙏
@kandhaYasho
@kandhaYasho 7 ай бұрын
மெத்தப்படித்தவனல்ல நான் எட்டாம்வகுப்பையும் எட்டாதவன்.மூன்றடி மண்கேட்டான் வாமணன்உலகிலே.... அதற்கு தாங்கள்சொன்ன உவமைதான்சரியாக இருக்கும்... கவிஞர் அவர்களுக்கு என் சிரம் தாழ்த்திய வணக்கங்கள் கோடி..
@miamohamed
@miamohamed Ай бұрын
கவியரசு கண்ணதாசன் போன்ற கவிஞரால் மாத்திரமே உச்ச அளவிலும் பாமர அளவிலும் சிந்திக்க முடியும்.
@arumugamannamalai
@arumugamannamalai Жыл бұрын
படத்தின் கதையை அந்த படத்தில் வரும்ஏதாவது ஒரு பாடல் மூலம் சொல்லிவிடும் கவித் திறன் கொண்ட மாபெரும் புலமை பெற்றவர் நம் கவியரசர். ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல. இந்த வகையில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் :அம்மம்மா தம்பி என்று நம்பி உன்னை வளர்த்தேன்..... இதிலும் ராமாயணம் காவியத்தை கையாளுவார் நம் கவிஞர். அனைத்து புராணங்களையும், இதிகாசங்களையும், அறநெறி நூல்களையும் படித்து அதை மனதில் நிறுத்தி, கதையின் சூழலுக்கு ஏற்ப அதன் சாரத்தை பயன் படுத்தி பாடல் எழுதும் புலமை பெற்றவர் கவியரசர் அவர்கள்.இன்னும் வாழ்ந்து இருந்தால் இது போன்ற எத்தனையோ பாடல் அமுதம் கிடைத்து இருக்கும். கவிஞரின் மறைவு தமிழுக்கும் நமக்கும் பேரிழப்பு.
@sathyakumar4333
@sathyakumar4333 Жыл бұрын
The great kannadasan ayya 🙏
@srsekar2486
@srsekar2486 Жыл бұрын
ஆறை நூறாக்குவதும்; நூறையும் ஒரு விஷயத்திற்காக வேறாக்குவதும் கவித்துவத்தின் சிறப்பு; அதில் கவிஞர் தமிழ்க் கவி உலகின் வேரானவர்
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
Kannadasan iyya Greatest poet in world history
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 Жыл бұрын
அறிவு சார்ந்த விளக்கம் தந்தீர்கள் நன்றி ஐயா
@Ponnammalsubramaniam
@Ponnammalsubramaniam Жыл бұрын
அருமையான பாடலுக்கு அருமையான விளக்கம் 🙏
@balasubramaniangopalakrish4212
@balasubramaniangopalakrish4212 11 ай бұрын
இரண்டு புராண நிகழ்வுகளின் முக்கியத்துவத்தை தனது பாடலின் மூலம் கவியரசர் வெளிப்படுத்திய தை தனது ஆற்றலின் மூலம் திறம்பட வெளிப்படுத்தியுள்ளார் அவரது புதல்வர். பாராட்டுக்கள் 👏👏👏👏
@rajankumarapaperumal8061
@rajankumarapaperumal8061 Жыл бұрын
சவாலே சமாளி படத்தில் என்னைத் தொடாதே பாடலில் திருநீலகண்டரின் மனைவி சொன்னது என்று பொருத்தமாகச் சொல்லியது ஞாபகம் வருகிறது.
@chandrasekarann4383
@chandrasekarann4383 Жыл бұрын
Kaviarsu speciality is bringing purana characters in cinema songs which makes upgrade situation 🎵songs
@dhanrajramalingam5870
@dhanrajramalingam5870 Жыл бұрын
மிக அருமையான விளக்கம். மிக்க நன்றி ஐயா. கர்ணன் திரைப்படத்தில் பகவத்கீதையை 5 நிமிடத்தில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் பாடலாக அமைத்ததை பற்றியும் சொல்லுங்கள் ஐயா.
@kalidossp1230
@kalidossp1230 Жыл бұрын
காவிய கவிஞரின் காவிய வரிகள். தலைமுறைகள் தாண்டி நிற்கும். 🙏🙏🙏
@vijayakumarv8038
@vijayakumarv8038 Жыл бұрын
அருமையான விளக்கம்👏💐
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 Жыл бұрын
அருமையான விளக்கம். இது போன்ற சுவாரஸ்யமான தகவல்கள் தரும்படி வேண்டுகிறேன்.
@ramaniloganarhan
@ramaniloganarhan Жыл бұрын
What parallels he has drawn to suit situations Kannadasan is unparalleled
@palanisamyramasamy7950
@palanisamyramasamy7950 Жыл бұрын
அங்கே நடந்தது இங்கே நடக்கிறது என்பதை எளிமையாக பாமரனும் பரிந்து கொள்ளும் படி செய்திருக்கிறார் அந்த மாபெரும் கவிஞர்!
@vbjoshijoshi8663
@vbjoshijoshi8663 Жыл бұрын
Excellent true
@srinivasansrini5210
@srinivasansrini5210 Жыл бұрын
அண்ணா! தங்கள் தகப்பனார், பலமுறை காஞ்சிபுரம் உலகளந்த பெருமாளைக் கண்களால் விழுங்கிய வண்ணம் தரிசனம் செய்திருக்கிறார். ஆழ்வார்களுள் முதலாழ்வார்களாகிய மூவரும் உலகளந்த பெருமாளிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள்; நாலாயிரம் பாசுரங்களின் ஊற்றுக்கண் திருக்கோவலூர் உலகளந்த பெருமாளின் சந்நிதியில் இருக்கிறது. மகாபலியின் பாட்டனான பிரகலாதன்," நீ ராஜ்யத்தை இழப்பாயாக!" என்று மகாபலியைச் சபித்திருந்தான்; பிரகலாதன் சொன்னது பலிக்க வேண்டும் என்பதில் வாமனனும் குறியாக இருந்தான்; அதையும், மங்கலமாக நிறைவேற்றி வைத்தான்.மகாபலியும் இராவணாதிகளைப் போல மூர்க்கனல்லன்; அவன் மேல் வாமனனுக்கும் கனிந்த அன்பு என்றும் உண்டு. (அதேபோல்,சின்ன சிவாஜிக்கும் பெரியப்பாவின் மேல் மாறாத தனி அன்பு உண்டு).இவையாவும் பராசர பட்டர், பெரியவாச்சான் பிள்ளை , நம்பிள்ளை போன்ற ஸ்ரீவைஷ்ணவ பூர்வாசார்யர்கள் முதலான மஹான்கள் தங்கள் வியாக்கியானங்களில் விளக்கிய இரகசியங்கள்; நம் கவியரசரும் இந்த அர்த்தங்களை இதயபூர்வமாக உணர்ந்திருக்கிறார்; அவர், வெறுமனே இந்த வியாக்கியானங்களைப் படித்து விட்டு, விட்டு விடவில்லை; சாதாரண மக்கள் முதல் பக்தியில் சிறந்து விளங்கிய மகான்கள் வரை அனைவரிடமும் இவற்றை இயல்பான முறையில் பகிர்ந்து கொண்டிருக்கிறாரே![ ஆழ்வார்களும் ஆசார்யர்களும் கண்ணதாசனும் - என்னும் தலைப்பில், அண்ணா, நீங்களே மிகப்பெரிய அளவில் புத்தகம் ஒன்றை எழுதலாமே? ]; மிகவும் நன்றியண்ணா!
@sambandamsreeneevasan8190
@sambandamsreeneevasan8190 Жыл бұрын
நல்லதலைப்பு முனைவர்பட்டத்திற்கு
@pdamarnath3942
@pdamarnath3942 Жыл бұрын
Your understanding is perfectly correct.
@paramasivamashokan1974
@paramasivamashokan1974 Жыл бұрын
அருமை நன்றி ஐயா
@GeethaRaghavan-wm4zo
@GeethaRaghavan-wm4zo Жыл бұрын
Sir, Rightly said. In the beginning of the song small Sivaji would be kicking big Sivaji 's heart.
@anu4814
@anu4814 Жыл бұрын
Sir….pls make a video about KARNAN climax song….even today I get tears whenever I listen to it
@parthasarathysrinivasan4254
@parthasarathysrinivasan4254 Жыл бұрын
நீங்கள் கூறியுள்ள கருத்து சரியே. அற்புதமான விளக்கம். இந்தப் பாடல் தொடங்கும் முன் உள்ள பகுதியை அரை நிமிடம் பாருங்கள். மகன் சிவாஜி சிறுவயது. சற்று உயரமான இடத்தில் அவரைத் தூக்கி வைத்துக் கொஞ்சிக் கொண்டிருப்பார் பெரிய சிவாஜி. சின்ன சிவாஜி விளையாட்டாக அவரது நெஞ்சிலே காலால் உதைத்தபடி இருப்பார். பெரியவர் அந்த அடிகளைச் சிரித்துக் கொண்டே அனுபவிப்பார். திடீரெனச் சிறுவன் பெரிய மனிதனாகி உதைப்பான். அதன் வலி தாங்காமல் 'கண்ணா' என்று உரத்துச் சப்தமிடுவார். அதுதான் பாடலின் தொடக்கத்தில் வரும் " கண்ணா' - வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன்
@natarajansuresh6148
@natarajansuresh6148 Жыл бұрын
ஆமாம். இந்த படம் ஓரு காவியம். மூத்த வழக்கறிஞர் கோவிந்த் ஸ்வாமிநாதன் அவர்களின் நடை மற்றும் பாவனைகளை உள்வாங்கி நடிகர் திலகம் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
@balasubramaniansethurathin9263
@balasubramaniansethurathin9263 Жыл бұрын
ஐயா! இதுபோல் கவிஞர் "சூரியகாந்தி" படத்தில் "பரமசிவன் கழுத்திலிருந்து" பாடலில் "வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்" என்று எழுதியிருப்பார். மேலோட்டமாகப் பார்த்தால் இது சாதாரணமாக அனைவருக்குமே தெரியும். இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால் அடுத்தவரியில் " அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்?" என்ற வரிகளை எழுதியிருப்பார்! அதுதான் கவிஞரின் தனித்தன்மை! கற்பனை வளம்!
@nachasubbu
@nachasubbu Жыл бұрын
மற்ற கவிஞர்கள் 80 வயதில் சாதிக்க வேண்டியதை எங்கள் கவியரசர் 54 வயதான போதே சாதித்து காட்டி விட்டார்.
@thiruchelvamnalathamby2592
@thiruchelvamnalathamby2592 2 ай бұрын
❤️❤️❤️🙏🏽🙏🏽🙏🏽
@raghunathankoundinyasubbar9975
@raghunathankoundinyasubbar9975 Жыл бұрын
FROM HMV RAGHU or PhD level vilakkam 16 adi panda VAENGAI
@shaulnizar8454
@shaulnizar8454 Жыл бұрын
An Awesome presentation
@velchamy6212
@velchamy6212 Жыл бұрын
மாபலி பற்றிய சரணத்தில் " மாறும் அவதாரமே.." என்பார். அதாவது , அதுபோல இங்கு நடக்காது. நான் வழக்கில் வெற்றி பெறுவேன் என்பதற்காக. ஆனால் வழக்கில் தோற்பார்.
@krishnamacharsr526
@krishnamacharsr526 Жыл бұрын
Top takker enjoy your post
@babyravi7956
@babyravi7956 Жыл бұрын
கவிஞர் தமிழ்ப்புலி அல்லவா!!!!!!அவர் தமிழை காற்று வேகத்தில் கற்பார்.அடுத்த பாடலோடு சூறாவளி வேகத்தில் நீங்கள் வர வேண்டும்.
@malathyshanmugam313
@malathyshanmugam313 Жыл бұрын
கண்ணதாசன் அவர்களுக்கு முன்பிருந்த கவிஞர்கள் பாடல்கள் கேட்டு ரசித்து மகிழும் எவரும் அவற்றில் உள்ள இலக்கிய நயம், உயர்ந்த சிந்தனைக்காக கேட்பர்.பிற கவிஞர்கள் கவியரசுக்கு பின் வந்தவர்கள் பாடல்களை கருவிகள் இசை (instrumental music)ஆக கேட்டு ரசித்தாலும் போதும்.பாடலுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.இந்த வித்தியாசம் காரணமாகவே கவியரசு மற்றும் அவரது முந்தைய கவிஞர்கள் பாடல்கள் காலத்தால் அழியாதவையாக நிலைத்துள்ளன.கண்ணதாசன் மற்றும் அவருக்கு முன்பிருந்த என்று வாசிக்கவும்
@udhayakumar5192
@udhayakumar5192 Жыл бұрын
That's kd sir we miss
@nirmalat.s.7566
@nirmalat.s.7566 Жыл бұрын
Gowravargal.....alla......kowravargal enru sollavendum...
@jayaseelan3766
@jayaseelan3766 Жыл бұрын
👏👏👏👏👏
@narayananc6839
@narayananc6839 Жыл бұрын
Sariyana karanam annathurai sir
@selvapathydhasaratharam7862
@selvapathydhasaratharam7862 Жыл бұрын
ஐயா ஒரு சின்ன யோசனை முடிந்தால் செயல் படுத்துங்கள். கவியரசரின் பல பாடல்கள் சினிமா பாடல்கள் என்றில்லாமல் மிக உயர்ந்த நிலையில் உள்ளது.அதைமட்டும் வரிசைப்படுத்தி சினிமா பாடல்கள் என்று தலைப்பிடாமல் புத்தகமாக வெளியிட்டால் வருங்கால மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.உதாரணத்திற்கு சில 1.ஒன்றே ஒன்று உலகம் ஒன்று, 2.கடவுள் ஒருநாள் உலகை காண 3.இறைவன் வருவான் 4.பூமியில் இருப்பதும் வானத்தில் 5..செல்வங்களே தெய்வங்கள் வாழும் இல்லங்களே இதுபோல் பொதுவான பாடல்கள் நிறைய உள்ளது. முயற்சி செய்யுங்கள். நன்றி
@sridharan8571
@sridharan8571 Жыл бұрын
Nobody commented on music and song
@kmangalam6369
@kmangalam6369 Жыл бұрын
என்னால் முடிந்தால் என் உயிரை எடுத்து கொண்டு கண்ணதாசன் உயிரை காப்பாற்று என்று அந்த க்ருஷ்ணரிடம் கேட்டூருப்பேன் நாவில் ஸரஸ்வதி வாஸம் செய்கிறார் பின் க்ருஷ்ண‌கானம் வேண்டும் .
@stark2568
@stark2568 Жыл бұрын
சிவாஜி - கண்ணதாசனை பொறுத்தவரை - தன் தொழிலை செய்யும் போது - அவர்கள் அதை செய்வதாக எனக்கு தோன்றவில்லை - அவர்களுக்கு காட்சியை சொல்லும் போதே அவர்களுக்குள் ஏதோ அவர்களை ஆக்கிரமித்து கொள்கிறது - அதன் விளைவு தான் அவர்களின் அற்புதமான கவிதையும்-நடிப்பும். இவர்கள் இருவரும் நன்றாக-அதிகம் படித்தவர்கள் இல்லை, அந்த காலத்தில் உலகத்தை பற்றி முழுவதுமாக அறிந்தவர்கள் இல்லை. இருந்தும் தங்கள் தாங்கள் தொழில் கொடிகட்டி பறந்தார்கள் - காலத்தை வென்று நிற்கும் அவர்களின் படைப்பு ஆச்சரியம்! சிவாஜி-கண்ணதாசன் இருவரும் முறையான தமிழ் பயின்றவர்கள் இல்லை, இலக்கண இலக்கியம் பண்டிதர்களை போல் பயிற்சி பெற்றவர்கள் இல்லை - இருந்தும் எப்படி கண்ணதாசனால் எப்படி இலக்கண இலக்கிய வரம்புக்குள் பிழை இல்லாமல் நினைத்தமாத்திரத்தில் எங்கோ என்றைக்கோ படித்த கரடுமுரடான செந்தமிழ் பாடல்களை பாமரனுகும் புரியும்படி எளிமை படுத்தி பாடல்கள் எழுத முடிந்தது? நடிக்க வந்தவர் எப்படி கவிஞர் ஆனார்? சிவாஜியால் எப்படி பல பக்க வசனங்களை அச்சரம் பிசகாமல்,உச்சரிப்பு பிழை இல்லாமல் ஏற்ற இரக்கத்தோடும் தொடர்ச்சியாக பேசி நடிக்கவும் செய்தார்? ஜெமினி வாசனாலும், AVM செட்டியாராலும் reject செய்யப்பட்ட சிவாஜி எப்படி எல்லா வேடத்துக்கு பொருந்தி போனார்? ரிஜெக்ட் செய்தவர்களே சிவாஜி கால்ஷீட்க்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது! ஆசிய-ஆப்பிரிக்கா நாடுகள், அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் சிவாஜியை பெருமை படுத்தியது. சிவாஜியும்-கண்ணதாசனும் தமிழ் தாயால், கலை தாயால் பரிபூரணமாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்! இருவரும் தமிழர்களின் பாக்கியம்! இவர்கள் தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த அளவுக்கு இவர்களை நம் அரசாங்கங்கள் கவுரவிக்கவில்லை என்பது சோகம்!
@rajapandianraja-by1zf
@rajapandianraja-by1zf Жыл бұрын
Shivajiyum kannadhasanum kalaithaatin thavapputhalvarkal Tamil thaayin 2 kankal.
@sundararajan
@sundararajan Жыл бұрын
பாபு படத்தில் உள்ள வருதப்ப வருதப்ப பாடலை நீங்கள் விளக்கினால் நன்றாக இருக்கும். இப்பாடலை எவ்வளவு முறை கேட்டாலும் புதுப்புது அர்த்தங்கள் கிடைக்கிறது
@venkatachalammarappan9017
@venkatachalammarappan9017 Жыл бұрын
அந்த பாடல் கவிஞர் திரு வாலி அய்யா எழுதியுள்ளார்
@rajah123
@rajah123 Жыл бұрын
tks durai for sharing the making of gauruvam songs. if possible share the making of ninaithaleh inikum movie songs making
@subramanyam6942
@subramanyam6942 Жыл бұрын
No clarity. 😊😊
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 Жыл бұрын
இந்தப் பாடலில் உங்கள் விளக்கம் சரியானது தான். இதேபோல் அவள் ஒரு தொடர் கதை படத்தில் வரும் ஒரு பாடலில் கோடு போட்டு நிற்கச் சொன்னான் சீதை அங்கு இல்லையே சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே...... இராமாயணத்தை இரண்டு வரியில் சொல்லி இருப்பார். அந்தக் கலை அவருக்கு மட்டுமே உரித்தான ஒன்று.
@kasturisundar8594
@kasturisundar8594 Жыл бұрын
இனி யார் தருவார் இந்த அறியாசனம்? நன்றி 🙏
@velchamy6212
@velchamy6212 Жыл бұрын
அரியாசனம். (சிம்மாசனம்.)அரி =சிங்கம்.
@kasturisundar8594
@kasturisundar8594 Жыл бұрын
என்னுடய அறியாமை. மன்னியுங்கள். நன்றி🙏
@swaminathank2727
@swaminathank2727 11 ай бұрын
Dhronarukku yerpattathu pasam illai. Ekalaivan oru tribal. Arjuna oru shathriyan. Dhronar parppanan. Intha parppanan antha tribal vilvithaiyil siranthu vilanga koodathu enrum uyar sathi shathriyan than vilvithaiyil sirakka vendum enru enni kattai viralai ketkirar. Antha muttalum tharugiran. Ithu than inru rss brahmanargal congress brahmanargal ellorum sernthu neethi manrangalai thavarana satchigal mattum thanthu thinithu vitta NEET. NEET enbathu coaching class gal kollaiadikka vantha sathi.
@sssjanar551
@sssjanar551 6 ай бұрын
கவிஞர் எழுத்துக்கு உயிர் ஓவியம் கொடுத்தார். TMS ஐயா குரல் ஓவியம் கொடுத்தார். இசையமைப்பாளர் சங்கீதத்திற்கு ஓவியம் கொடுத்தார் .நடிகர் திலகம் நடிப்பு ஓவியம் கொடுத்தார்.ஒரு பாட்டுக்கு வெற்றி பெற இவ்வளவு நபர்கள் உழைக்க வேண்டியது உள்ளது.
@dhava06
@dhava06 Жыл бұрын
ராஜபார்ட் ரங்கதுறை படத்தில் வரும் அம்மம்மா தம்பி என்று நம்பி பாடல் பற்றியும் சொல்லுங்க நீங்க சொன்னது போல ராமாயண மஹாபாரத கதைகளை கொண்டு வந்து கையாண்ட விதம் பற்றி
@vaazhga
@vaazhga Жыл бұрын
தவறு
@gunasekaransunther4970
@gunasekaransunther4970 Жыл бұрын
வணக்கம் ஐயா. புலிக்கு பிறந்தது பூனையாகுமா தங்களின் கணிப்பு உண்மையே.❤❤❤
153 ) சினிமா படம் எடுக்க ஆசைப்பட்ட அறிஞர் அண்ணா
18:56
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН
157) காலையில் பாட்டு எழுதி மதியம் படப்பிடிப்பு
16:05
VIDEO - 26 -KANNADASAN - கண்ணதாசன்  பற்றி இயக்குனர்  விசு
19:34
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 111 М.
186 ) பாட்டெழுத திணறினாரா கண்ணதாசன்?
12:52
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 13 М.
184 ) பாடலில் இத்தனை விதங்களா?
13:59
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 51 М.