மீன் அமிலம் தயாரிப்பு முறை _ Fish Amino Acid preparation

  Рет қаралды 100,746

Save Soil - Cauvery Calling

Save Soil - Cauvery Calling

5 жыл бұрын

மீன் அமிலம் தயாரிப்பு மற்றும் பயன்படுத்தும் முறை
மீன் கழிவுகளை பயன்படுத்தித் தயாரிக்கப்படும் மீன் அமிலம் என்பது அமினோ அமிலங்களையும், நைட்ரஜன் சத்தையும் கொண்ட ஒரு சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கியாகும். மீனில் உள்ள புரதங்கள் நுண்ணுயிர்களால் செரிக்கப்பட்டு அமினோ அமிலங்களாக பிரிகின்றன. இந்த அமினோ அமிலங்களில் நைட்ரஜன் சத்து (தழைசத்து) நிறைந்துள்ளது. மீன் கழிவுகள் கிடைக்காத பட்சத்தில் முழு மீன்களையும் பயன்படுத்தலாம். எனினும் முழுமீனை விட மீன் கழிவுகளில் இருந்து தயாரிக்கும் மீன் அமிலம் சிறப்பாக உள்ளது.
தேவையான பொருட்கள்
1, மீன் கழிவுகள் அல்லது மீன் - 5 கிலோ
2, நாட்டு சர்க்கரை - 5 கிலோ
தேவையான உபகரணங்கள்
10 கிலோ கொள்ளளவுள்ள மூடியுடைய பிளாஸ்டிக் வாளி - 1
செய்முறை
பிளாஸ்டிக் வாளியில் 5 கிலோ அளவிற்கு மீன் கழிவு அல்லது மீன் எடுத்துக்கொண்டு அதனுடன் 5 கிலோ அளவிற்கு நாட்டு சர்க்கரையை சேர்த்து நன்றாக கலக்கியபின் காற்று புகாதவாறு மூடி நிழலில் வைக்கவும். 30 நாட்களுக்கு பின்பு மீன் கழிவுகள் நன்றாக சிதைந்து தேன் போன்ற ஒரு திரவமாக மாறியிருக்கும். இதுவே மீன் அமிலம் ஆகும்.
கவனிக்க வேண்டியவை
மீன் அமிலம் தயாரிக்கும் வாளியை கட்டாயமாக காற்று புகாதவாறு இறுக்கமாக மூடிவைக்கவும், தேவைப்பட்டால் மூடியின் மேல் ஒரு பாலித்தீன் சீட் போர்த்தி இறுக்கமாக கட்டவும். சூரிய ஒளி படாதவாறு நிழலில் பாதுகாத்து வைக்கவும். மீன் வாசனைக்கு நாய்கள் வரும் என்பதால், நாய்கள் வரமுடியாதவாறு பாதுகாப்பாக வைக்கவும்.
பயன்படுத்தும் முறை
10 லிட்டர் நீரில் 100 மி.லி மீன் அமிலம் கலந்து பயிர்களுக்கு தெளிக்க வேண்டும். 200 லிட்டர் நீரில் 2 லிட்டர் மீன் அமிலம் கலந்து பாசன நீரிலும் கலந்து விடலாம்.
பயன்கள்
மீன் அமிலம் 75 சதவீதம் வளர்ச்சி ஊக்கியாகவும், 25 சதவீதம் பூச்சி விரட்டியாகவும் செயல்படக் கூடியது.
மீன் அமிலம் தெளிக்கும் போது பயிர்கள் நன்கு பச்சைபிடித்து வளரும். வரப்பு மற்றும் வேலி ஓரங்களில் தெளித்தால் மயில், முயல் மற்றும் எலி தொந்தரவு தெளித்த ஐந்து நாட்கள் வரை இருக்காது, தேவைப்பட்டால் மீண்டும் தெளிக்கலாம்.
பயன்படுத்தும் காலம்
மீன் அமிலத்தை 3 ஆண்டுகள் வரை நிழலில் வைத்து பாதுகாத்து பயன்படுத்தலாம்.
செய்யக்கூடாதவை
மீன் அமிலம் கொடுக்கபட்ட அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும், அதற்கு மேல் பயன்படுத்தினால் பயிர்கள் வாடிவிடும்.

Пікірлер: 34
@MohamedAli-uk9ty
@MohamedAli-uk9ty 3 жыл бұрын
👏👏👏
@rajaarockia1248
@rajaarockia1248 Жыл бұрын
முருங்கைக்கு எவ்வாறு பயன்படுத்த வேண்டும்
@SaravanaKumar-ns3xe
@SaravanaKumar-ns3xe 2 жыл бұрын
How to use for தென்னை
@elangokc2523
@elangokc2523 3 жыл бұрын
Maanavaripayeruku kodukkalama
@ArunKumar-rw1gt
@ArunKumar-rw1gt 2 жыл бұрын
yaravathu try pannikalam
@SathishKumar-rc4ny
@SathishKumar-rc4ny 3 жыл бұрын
Nel vayaluku thanila mix panni vidalama?
@venigopika3549
@venigopika3549 3 жыл бұрын
Marupadiyum Ethana naalukku modi vaikkanum
@lksinternational3358
@lksinternational3358 2 жыл бұрын
Excellent
@adaikkanannalakshmi2788
@adaikkanannalakshmi2788 2 жыл бұрын
டிம்பர் மரங்களுக்கு பயன்படுத்தலாமா
@sjmultigamers123
@sjmultigamers123 3 жыл бұрын
Oru thennai marathuku evlo meen amilam kudukanum evlo idaivekiyil kudukanum..pls reply sir.
@ohmgod5366
@ohmgod5366 3 жыл бұрын
10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி கலந்து கொடுக்கலாம்
@rajagopalarumugam8755
@rajagopalarumugam8755 Жыл бұрын
நீர் பாய்ச்சும் போது கலந்து( எந்த அளவில்) பாய்ச்சலினால் ?
@kumanaboopathi7655
@kumanaboopathi7655 3 жыл бұрын
Vengaayaththukku thelikka laammaa
@viswanathank3015
@viswanathank3015 4 жыл бұрын
Sir oru doubt, during this 30 days when we keep this to mature, should we stir the mix every day, please clarify
@rajivrathinavelu5894
@rajivrathinavelu5894 Жыл бұрын
No. Should not dot.
@pkpalanisamy5076
@pkpalanisamy5076 3 жыл бұрын
தென்னை வாழைக்கும் பயன்படுத்தலாமா பயன்படுத்தும்முறை செல்லுங்க நன்றி
@NalamPenu
@NalamPenu Жыл бұрын
Ella sedikum use panlam
@sivasamy7202
@sivasamy7202 2 жыл бұрын
மீன் அமிலம் கிடைக்குமிடம்
@arulmozhig7993
@arulmozhig7993 Жыл бұрын
Vetrilai ( bettal leaf) spray panna alau eavalau? eathanai naal idaiveli?
@prabhakarans3199
@prabhakarans3199 Жыл бұрын
Bro நீங்க vetrillaiku adithu partheenghala
@prabhakarans3199
@prabhakarans3199 Жыл бұрын
நானும் வெற்றிலை பயிர் செய்கிறேன்
@sk.samidurai6074
@sk.samidurai6074 3 жыл бұрын
அண்ணா மீன் அமிலம் 30 நாள்கள் கழித்து தயாரித்திருக்கும் போது அதில் fish wastage வருமா இல்லை எல்லாம் நொதித்து இருக்குமா... 5 kg fish and equal sugar க்கு how many litres fish amino acid we will get
@ohmgod5366
@ohmgod5366 3 жыл бұрын
5 லிட்டர்
@logusirumugai5118
@logusirumugai5118 2 жыл бұрын
5 liter
@kothandamkothandam5645
@kothandamkothandam5645 2 жыл бұрын
Om😆🔰
@rpvinoth3564
@rpvinoth3564 3 жыл бұрын
இந்த வாடைக்கு எலி வரும்னு சொல்லுறீங்க. நெல் பயிரில் இதை தெளித்தால் எலி வெட்டு அதிகம் ஆகாதா.?
@ohmgod5366
@ohmgod5366 3 жыл бұрын
எலியே வரது
@rpvinoth3564
@rpvinoth3564 3 жыл бұрын
@@ohmgod5366 😵 நீங்கள் டிரை பண்ணிங்களா.?
@ARUNKUMAR-se8mc
@ARUNKUMAR-se8mc 2 жыл бұрын
@@rpvinoth3564 after preparation no rat incoming..
@rathisakthi
@rathisakthi 3 жыл бұрын
Thumbs down signal பதிந்திருக்கும் அந்த நபர்கள் யாராக இருந்தாலும் மெண்ட்டல்கள் தானே 🤔
@jagans3022
@jagans3022 3 жыл бұрын
Don't try this it shouldn't work
@rathisakthi
@rathisakthi 3 жыл бұрын
தம்பீ, இதை எங்கே எப்படி உபயோகித்துப் பார்த்தீர்கள்? இதை யார் தயாரித்தது! நாங்கள் பல்வேறு பயிர்களுக்கு கொடுத்து வருகிறோம். யூரியா வை விட பல மடங்கு சக்தி வாய்ந்தது. அதிகமாகக் கொடுத்தால் பயிர் காய்ந்துவிடும். இன்னொரு முறை முறையாக தயாரித்து முறையாக உபயோகித்து பதில் எழுதவும். நன்றி.
@Karthikeyan-cy7kf
@Karthikeyan-cy7kf 3 жыл бұрын
@@rathisakthi bro itha onion ku kodukkalam ah?? Entha time la kodukkalam....na fertilizers pottu irukke...ithu work agum ah bro sollunga
@ohmgod5366
@ohmgod5366 3 жыл бұрын
@@Karthikeyan-cy7kf உப்பு போட்டு இருந்தால் பத்து நாள் கழித்து கொடுக்கலாம் பயன்படுத்தி விட்டீர்கள் என்றால் உங்ளுக்கே தெரிந்து விடும் உரமா இல்லை இயற்கை விவசாயமா என்று
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 38 МЛН
UREA= மீன் அமிலம் "இயற்கை யூரியா"
7:14
Kanishka Imports & Exports
Рет қаралды 19 М.