No video

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்| பெருமாள் மார்பில் சிவன் | Tirunelveli Nellaiappar Koil

  Рет қаралды 2,964

ஆன்மீகத்துடன் நட்பு

ஆன்மீகத்துடன் நட்பு

Жыл бұрын

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்
காந்திமதி_அம்மன்_கோயில்
காந்திபீடம்
திருநெல்வேலி தமிழ்நாடு (35/51)
அம்பாள்: காந்திமதி அம்மன்
மூலவர்: நெல்லையப்பர்
தலவிருட்சம்: மூங்கில்
தீர்த்தம்: பொற்றாமரைக் குளம்
ஊர் : திருநெல்வேலி
மாவட்டம்: திருநெல்வேலி
மாநிலம்: தமிழ் நாடு
கோவிலமைப்பு
ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும்,மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது. அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப் பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப் பட்டுள்ளது. அம்பாள் சன்னதியில் ஆயிரம் கால் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி சிலை உள்ளது.கொடிமரத்தைச் சுற்றிவிட்டு உள்ளே சென்றால் மூலவர் சிலை உள்ளது. அதற்கு முன்பு மிகப்பெரிய ஆனைமுகன் சிலை உள்ளது.சுமார் 9 அடி இருக்கும்.மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல தக்ஷிணாமூர்த்தி,சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி,பைரவர் சன்னிதிகள் அமைந்துள்ளன. கோவிந்தப் பெருமாள்,சிவனுக்கு அருகிலேயே சயனித்திருப்பார்.
இது சைவ வைணவ ஓற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு. இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது.ஆரம்பத்திலேயே“ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்” உள்ளன.இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஸ்வரங்களின் ஒலி கேட்கும்.இந்தப் பிரகாரத்தில்தான் “தாமிர சபை” உள்ளது.63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்ட லக்ஷ்மி,சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன. மூன்றாவது பிரகாரம் மிகப் பெரியது.மிக அகலமானது. இப்பிரகாரத்திலிருந்து அம்மா மண்டபம் வழியாக அம்மன் சந்நிதி செல்வதற்கு வழி அமைக்கப்பட்டுள்ளது.இங்கு ஆஞ்சநேயர்,ஐயப்பன்,மஞ்சனத்தி அம்மன்,சரஸ்வதி,பிரம்மா ஆகியோர்க்கு தனிச் சந்நிதிகள் உண்டு. கோயிலின் உள்ளே மிகப் பெரிய உள் தெப்பம் ஒன்று உள்ளது.இதுபோல் கோயிலுக்கு வெளியே அரை கிலோமீட்டர் தூரத்தில் வெளித்தெப்பம் ஒன்றும் உள்ளது.
தலசிறப்பு
🌠32 தீர்த்தங்கள் கொண்டது இத்திருத்தலம்.
🌠இக்கோவில் தேர் தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர் என்ற பெருமைக்குரியது.
🌠ஸ்ரீ நெல்லையப்பர் காந்திமதி ஆலயம் தாமிர அம்பலமாகவும்,ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர அம்பலமாகவும் உள்ளன.
🌠சிவபெருமான் நடனமாடிய ஐந்து முக்கிய தலங்களில் நெல்லையப்பர் கோயில் திருத்தலமும் ஒன்று.
🌠ஒரு ஏழை விவசாயி இறைவனுக்கு படைக்க நெல்லை காய வைத்திருந்ததாகவும், அவன் பார்க்காத சமயம், மழை திடீரென பெய்ய, சிவன்(நெல்லையப்பர்),நெல் மேல் நீர் படாமல் காத்தார் எனவும்,அதனால் அவருக்கு நெல்லையப்பர்,என்றும், அந்த இடத்துக்கு திரு + நெல் + வேலி என்றும் பெயர்.
காந்திமதி அம்மன்
இத்தலத்தில் உள்ள அம்பாள் காந்திமதி அம்மை,வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். அம்மன் தலையில் வைரமணி முடி, இராக்குடியுடனும்,முகத்தில் புல்லாக்கு மூக்குத்தியுடனும்,நவமணி மாலை அணிந்தும்,காலில் மணிச் சிலம்பும்,வலக்கரம் உயர்த்திய நிலையிலும்,இடக்கரம் தாழ்த்திய நிலையிலும்,கிளியுடனும் காட்சி தரும் காந்திமதி அம்மனின் தோற்றம், கருணை வடிவம்.
அம்மன் கோயிலில் அமைந்துள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஐப்பசி மாதம் காந்திமதி அம்மன் திருக்கல்யாணம் நடந்தேறியதும்,மூன்று நாட்கள் ஊஞ்சல் விழா நடைபெறுவது வழக்கம்.இந்த நாள்களில் தேவாரம், திருவாசகம்,நான் மறைகள் ஓதுவதும், சமய சொற்பொழிவுகளும் நடைபெறும்.திருக்கல்யாண மண்டபம் ஆயிரங்கால் மண்டபம் என்ற பெயருடன் சிறப்பாக அமைந்துள்ளது. அம்பாள் சன்னதியில் உள்ள ஆயிரம் கால் மண்டபமும் அதில் நடைபெறும் சுவாமி அம்பாள் திருகல்யாணமும் கண்கொள்ளாக் காட்சியாகும்.
பிராத்தனை
கல்விக்கு அதிபதியான புதன் குபேரன் திசையான வடக்கு நோக்கி திரும்பி இருப்பதன் மூலம், படித்தவர்கள் இவரை வணங்கினால் செல்வாக்கு மிக்க வேலை அமையும்.
ஜாதகத்தில் புதன் தோஷம் உள்ளவர்கள் புதன் தோஷம் நீங்க இத்தல இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.
அமைவிடம்
மதுரையில் இருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் 153 கி.மீ தொலைவில் திருநெல்வேலி அமைந்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து 83 கி.மீ தொலைவில் திருநெல்வேலி அமைந்துள்ளது. சென்னையில் இருந்து 603 கி.மீ தொலைவில் திருநெல்வேலி அமைந்துள்ளது.
மதுரை, தென்காசி, தூத்துக்குடி, நாகர்கோவில், செங்கோட்டை, சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம் மற்றும் ஈரோடு போன்ற இடங்களில் இருந்து திருநெல்வேலி வர பேருந்து வசதி உள்ளது.
திருச்சி, சென்னை, ஈரோடு, சேலம், மதுரை, கன்னியாகுமரி, புதுச்சேரி, திப்ரூகர், திருவனந்தபுரம், நாகர்கோவில், தம்பரம், மும்பை, புதுடெல்லி, கச்சிகுடா வழி நாமக்கல் மற்றும் ஈரோடு மற்றும் தாதர் வழி நாமக்கல், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நாமக்கல், திருச்சி வழி பெங்களூரில் இருந்து நாமக்கல் வழியாக திருநெல்வேலி வர ரயில் வசதி உள்ளது.
if you want to support us via UPI id
k.navaneethan83@ybl
Join this channel to get access to perks:
/ @mathina
- தமிழ்

Пікірлер: 5
@mathina
@mathina Жыл бұрын
நமது தாய் நலமுடன் இருக்க வழிபட வேண்டிய தலம் குடவாசல் கோணேஸ்வரர் கோயில் kzfaq.info/get/bejne/nctya5x4rKevqWg.html
@kalaivanis9122
@kalaivanis9122 Жыл бұрын
எங்கள் ஊர் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் அருமையான வர்ணனை
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Жыл бұрын
🙏🌹🙏🌺 🌹திருநீலகண்டம்🌻🌺 🌸ஆரூரா... தியாகேசா🌺🍎💦அன்னைக்கா அண்ணலே போற்றி 💦 🌷🌺 அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி🔱🙏💐🥥🙏
@Kudavasal-Nandhini6
@Kudavasal-Nandhini6 Жыл бұрын
🙏🙏🙏
@saranyasuresh5105
@saranyasuresh5105 Жыл бұрын
Thanks bro inthai video neeingaa upload panathui naingaa inumi 3 days la inthai temple porumai inthai video padivu podathui nandri 🙏
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 20 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 12 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 48 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 35 МЛН
The Art Of Musical Inscription In Nellaiappar Temple | Swarnamalya
12:07
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 20 МЛН