கேட்டது கிடைக்கும், நினைத்தது நடக்கும் சோமவார விரதம் 2023 கடைப்பிடிக்கும் முறை | Somavara Viratham

  Рет қаралды 305,815

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

8 ай бұрын

சிவபுராணம் தினமும் கேட்பதற்காக தமிழ் & ஆங்கில வரிகளுடன் | Sivapuranam in my voice with lyrics
• சிவபுராணம் தினமும் கேட...
மண்ணின்நல் லவண்ணம்
வாழலாம் வைகலும்
எண்ணின்நல் லகதிக்கி
யாதுமோர் குறைவிலைக்
கண்ணின்நல் லஃதுறுங்
கழுமல வளநகர்ப்
பெண்ணின்நல் லாளொடும்
பெருந்தகை யிருந்ததே. 1
போதையார் பொற்கிண்ணத்
தடிசில்பொல் லாதெனத்
தாதையார் முனிவுறத்
தானெனை யாண்டவன்
காதையார் குழையினன்
கழுமல வளநகர்ப்
பேதையா ளவளொடும்
பெருந்தகை யிருந்ததே. 2
தொண்டணை செய்தொழில்
துயரறுத் துய்யலாம்
வண்டணை கொன்றையான்
மதுமலர்ச் சடைமுடிக்
கண்டுணை நெற்றியான்
கழுமல வளநகர்ப்
பெண்டுணை யாகவோர்
பெருந்தகை யிருந்ததே. 3
அயர்வுளோம் என்றுநீ
அசைவொழி நெஞ்சமே
நியர்வளை முன்கையாள்
நேரிழை யவளொடுங்
கயல்வயல் குதிகொளுங்
கழுமல வளநகர்ப்
பெயர்பல துதிசெயப்
பெருந்தகை யிருந்ததே. 4
அடைவிலோம் என்றுநீ
அயர்வொழி நெஞ்சமே
விடையமர் கொடியினான்
விண்ணவர் தொழுதெழுங்
கடையுயர் மாடமார்
கழுமல வளநகர்ப்
பெடைநடை யவளொடும்
பெருந்தகை யிருந்ததே. 5
மற்றொரு பற்றிலை
நெஞ்சமே மறைபல
கற்றநல் வேதியர்
கழுமல வளநகர்ச்
சிற்றிடைப் பேரல்குல்
திருந்திழை யவளொடும்
பெற்றெனை யாளுடைப்
பெருந்தகை யிருந்ததே. 6
குறைவளை வதுமொழி
குறைவொழி நெஞ்சமே
நிறைவளை முன்கையாள்
நேரிழை யவளொடுங்
கறைவளர் பொழிலணி
கழுமல வளநகர்ப்
பிறைவளர் சடைமுடிப்
பெருந்தகை யிருந்ததே. 7
அரக்கனார் அருவரை
யெடுத்தவன் அலறிட
நெருக்கினார் விரலினால்
நீடியாழ் பாடவே
கருக்குவாள் அருள்செய்தான்
கழுமல வளநகர்ப்
பெருக்குநீ ரவளொடும்
பெருந்தகை யிருந்ததே. 8
நெடியவன் பிரமனும்
நினைப்பரி தாயவர்
அடியொடு முடியறி
யாவழல் உருவினன்
கடிகமழ் பொழிலணி
கழுமல வளநகர்ப்
பிடிநடை யவளொடும்
பெருந்தகை யிருந்ததே. 9
தாருறு தட்டுடைச்
சமணர்சாக் கியர்கள்தம்
ஆருறு சொற்களைந்
தடியிணை யடைந்துய்ம்மின்
காருறு பொழில்வளர்
கழுமல வளநகர்ப்
பேரறத் தாளொடும்
பெருந்தகை யிருந்ததே. 10
கருந்தடந் தேன்மல்கு
கழுமல வளநகர்ப்
பெருந்தடங் கொங்கையோ
டிருந்தஎம் பிரான்றனை
அருந்தமிழ் ஞானசம்
பந்தன செந்தமிழ்
விரும்புவா ரவர்கள்போய்
விண்ணுல காள்வரே. 11
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 526
@lakshmanans1681
@lakshmanans1681 8 ай бұрын
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
@thanjaitamil7172
@thanjaitamil7172 8 ай бұрын
அம்மா வணக்கம். நேற்று விரதம் இருந்து யூடிப்ல நேரலயா திருச்செந்தூர் கோவிலை பார்த்து.. அசுரன் தலை விழுந்ததும் தலைகுளித்து.. சாமிக்கும் அபிஷேக ஆராதனை செய்து சாமி கும்பிட்டோம்.. நேரலயில் உங்க குரல் அப்படி ஒரே கம்பீரமாக ஒலித்தது.சஸ்டிவிரதம் எடுத்துபிறந்த குழந்தையல்லவா தாங்கள். உங்க குரல் அப்படி ஒரு தெளிவு... ❤❤
@malathiaanandan8180
@malathiaanandan8180 8 ай бұрын
மேடம் வணக்கம் நீங்கள் கூறியபடி திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தை டிவியில் பார்த்தேன் தீபாராதனை காட்டினேன் பிறகு குளித்துவிட்டு மீண்டும் சாமி கும்பிட்டேன் முருகனருள் பரிபூரணமாக கிடைக்கட்டும் தங்களுக்கு நன்றி
@revathysubramanian467
@revathysubramanian467 8 ай бұрын
Amma 🙏
@tkmvillageattracity5598
@tkmvillageattracity5598 8 ай бұрын
9999999
@venkateshsethupathi
@venkateshsethupathi 8 ай бұрын
Endha channel la amma live kuduthanga
@shivaamaran7814
@shivaamaran7814 8 ай бұрын
10:40
@JayaLakshmi-kc5hi
@JayaLakshmi-kc5hi 8 ай бұрын
உங்க குரலுக்கு நாங்கள் அடிமை.... திருச்செந்தூரில் நீங்கள் பேசியது அப்படி ஒரு கம்பீரம் 🙏🏻🙏🏻🙏🏻
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 8 ай бұрын
எந்த ராசியில். எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 😢 கடவுள் இல்லை எண்ட்று சொல்லுவார் 😢😮😢😮 கல்லி பால் கந்நன் கருனை யா
@bhavaninagarajan1516
@bhavaninagarajan1516 8 ай бұрын
வணக்கம் அம்மா, என்னுடைய அம்மா போன வாரம் முழுவதும் திருச்செந்தூர் திருக்கோயில் உங்களுடைய சொற்பொழிவு எல்லாமே மிகவும் அருமையாக இருந்தது என்று சொன்னார்கள், எங்களுக்கு தான் பார்க்கவோ, கேட்கவோ முடியவில்லை, அதை ஒரு தனி பதிவாக தர வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்....
@LeeLee-ih3bi
@LeeLee-ih3bi 8 ай бұрын
சகோதரி நீங்கள் கடவுள் கொடுத்த பொக்கிஷம் எனக்கு. உங்களோட ஒவ்வொரு பதிவுமுமே எனக்கு முழுமையான திருப்தியை தருகிறது. நன்றி தாயே.
@nandhinis6789
@nandhinis6789 8 ай бұрын
அம்மா வணக்கம், நேற்று தங்களை திருச்செந்தூரில் நேரில் கண்டேன்.வீடியோவில் காண்பதை விட நேரில் மிகவும் அழகாக உள்ளீர்கள்❤❤
@DeepakPillai-gu5my
@DeepakPillai-gu5my 8 ай бұрын
18varudam seyikiren Amma somavirutham 14varudam kalithu Magan pirandhan Avan vayathu5akuthu om namachivaya
@ParameshThiruvel-sh2ej
@ParameshThiruvel-sh2ej 8 ай бұрын
அம்மா நான் திருச்செந்தூரில் இருந்தேன் உங்கள் குரலை மட்டும் தான் கேட்க முடிந்தது.. உங்களை பார்க்க முடியல❤
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 8 ай бұрын
எந்த ராசியில். எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 😢 கடவுள் இல்லை எண்ட்று சொல்லுவார் 😢😮😢😮 கல்லி பால் கந்நன் கருனை யா
@sorubaskitchen
@sorubaskitchen 8 ай бұрын
சஷ்டி விரதம் இனிதாக பூர்த்தியடைந்தது சகோதரி உங்களுக்கு மிக்க நன்றி 🙏🏻
@jpmithra1341
@jpmithra1341 8 ай бұрын
மதிய வணக்கம் குருமாதா.... மிக்க நன்றி குருமாதா
@user-dy5bl9cy1l
@user-dy5bl9cy1l 8 ай бұрын
அம்மா உங்களுக்கு ரொம்ப நன்றி என் மனம் நிறைந்த து
@ranikavi4907
@ranikavi4907 8 ай бұрын
நன்றி அம்மா.சிவசிவ....
@dhivya.kdhivya5032
@dhivya.kdhivya5032 8 ай бұрын
குருவிற்கு காலை வணக்கம் ❤❤❤❤❤
@lalithamani8928
@lalithamani8928 8 ай бұрын
நன்றிஅம்மா
@kamalamani4652
@kamalamani4652 8 ай бұрын
Super Amma thanks 🙏
@malinir.8710
@malinir.8710 8 ай бұрын
அருமை மிக்க நன்றிங்க 🙏🌹🌹
@gomathilakshmi6943
@gomathilakshmi6943 8 ай бұрын
உங்கள் பூஜை முறைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் முறையாக உள்ளது மனதுக்கு மிகவும் அமைதி ஏற்படுகிறது மிகவும் நன்றி
@poojapoorni1543
@poojapoorni1543 8 ай бұрын
Amma Nanri Nanri amma. Entha pathivu kututhathuku mikka magizchi Nanri Nanri ❤
@anandhinakshathra4703
@anandhinakshathra4703 8 ай бұрын
நன்றிகள் பல உங்களுக்கு ❤
@kuppayeethangavel4988
@kuppayeethangavel4988 8 ай бұрын
அம்மா Nandri Amma🙏🙏
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 8 ай бұрын
அம்மா அடியேன் தினமும் சிவன் கோவிலில் பள்ளியறை பூஜையில் திருமுறைகள் பாடி கலந்து கொள்கிறேன் அம்மா ❤ மனதுக்கு நிறைவாக இருக்கிறது அம்மா ❤
@karpagaselvi3963
@karpagaselvi3963 8 ай бұрын
Mikka nandri Amma 🙏 om namasivaya 🙏 Vaalga valamudan ❤️
@pattathaaripasanga825
@pattathaaripasanga825 8 ай бұрын
Amma neththu ungala paathen romba santhosham......... ✨
@nithyarajesh3003
@nithyarajesh3003 8 ай бұрын
Nadri amma ❤
@GkaladeviKalaammu
@GkaladeviKalaammu 8 ай бұрын
நான் இரண்டு வருடங்களாக வாரந்தோறும் திங்கட்கிழமை அசைவ உணவுகள் சாப்பிடுவது இல்லை சிவப சிவபெருமான் என் வேண்டுதலை நிறைவேற்றியதற்காக நான் இதை கடை பிடிக்கின்றேன், ஆனால் சஷ்டி அன்று விரதம் இருந்தேன் தலைவலி வந்தால் மூன்று வேளையும் உணவு எடுத்துக் கொண்டு சாப்பிட்டு சிவபெருமானை சோமவார திங்கட்கிழமைகளில் வழிபடலாம் என்று நினைக்கிறேன் 🙏 அன்பர்களே சிவபெருமானை வழிபடுங்கள் கண்டிப்பாக நாம் வேண்டியது அவசியம் நிறைவேறும் ❤
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 8 ай бұрын
நாங்கள் தினமும் சிவபெருமானை வணங்குகிறோம் ❤ ஈசன் அடிமை❤
@GkaladeviKalaammu
@GkaladeviKalaammu 8 ай бұрын
@@dishitaranidishitarani4376 🙏💕
@thendralthendral8813
@thendralthendral8813 8 ай бұрын
Romba Nandi amma
@muthupriya3143
@muthupriya3143 8 ай бұрын
நன்றி அம்மா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@visaga_hindiclass4647
@visaga_hindiclass4647 8 ай бұрын
❤ Thanks Amma
@sathyavivehanandan2053
@sathyavivehanandan2053 8 ай бұрын
Super Amma🎉🎉🎉
@manigmaddy9296
@manigmaddy9296 8 ай бұрын
🙏🌷விநாயகர் அப்பா ஓம் நமசிவாய நமஹா 🌷🙏
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 8 ай бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@LakshmiKalasri-nd8et
@LakshmiKalasri-nd8et 8 ай бұрын
ஓம் சரவணபவ 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏 வணக்கம் குருமாதா🙏🙏 அருமையானபதிவு பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி குருமாதா🙏🙏
@LeeLee-ih3bi
@LeeLee-ih3bi 8 ай бұрын
அம்மா நீங்க நூறு ஆண்டுக்கும் மேல் சௌ பாக்கியங்கள் லோடு வாழனும். தங்கள் சேவைக்கு மிகவும் நன்றி சகோதரி.
@Meenasangavi6
@Meenasangavi6 8 ай бұрын
Clear explanation Amma Nandri
@Periyasamy-zu6dc
@Periyasamy-zu6dc 8 ай бұрын
Nanri Amma🙏🙏🙏
@venkatesansingapore8313
@venkatesansingapore8313 8 ай бұрын
Nanri amma
@parameshparameshwari6312
@parameshparameshwari6312 8 ай бұрын
நன்றி அக்கா
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 8 ай бұрын
ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஆஞ்சநேயர் ஓம் சக்தி ஓம் முருகா ஓம் நமசிவாய
@user-hv5ol5im2k
@user-hv5ol5im2k 8 ай бұрын
❤❤❤ thanks amma
@manimohan7243
@manimohan7243 8 ай бұрын
Amma super ammma
@thenmozhi889
@thenmozhi889 8 ай бұрын
Mikka nanri amma
@idhayammaladhi8186
@idhayammaladhi8186 8 ай бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@raviwinsoft
@raviwinsoft 8 ай бұрын
Nandri.🙏
@aadhivimalaaadhivimala4324
@aadhivimalaaadhivimala4324 8 ай бұрын
காலை வணக்கம் அம்மா மிக்க நன்றிங்க அம்மா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹
@porkodi6892
@porkodi6892 8 ай бұрын
நன்றி வணக்கம் அம்மா
@indhumathi7799
@indhumathi7799 8 ай бұрын
Periyandavar engal kupadeivam avarai patri pathividungal amma ....Om Namarshivaya .....
@shreemyil3968
@shreemyil3968 8 ай бұрын
Nandri ammaa❤
@anbukkarasikandasamy7326
@anbukkarasikandasamy7326 8 ай бұрын
Nandri Amma
@vimalaviswanathan6875
@vimalaviswanathan6875 8 ай бұрын
வணக்கம் அம்மா எங்கள் ஊரில் திருக்கல்யாணம் முடிந்து விரதம் முடித்து விட்டோம் திருச்செந்தூரில் நேற்று தங்களின் குரல் மெய் சிலிர்க்க வைத்தது அம்மா நாளை சோமவார விரதம் மேற்கொள்ள உள்ளோம் சார்தாம் யாத்ரா அடுத்தடுத்து விரதம் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது அம்மா தங்களின் மாணவி விமலா நன்றி வணக்கம்
@gurusamykrishnan8231
@gurusamykrishnan8231 8 ай бұрын
அம்மா நன்றி 🙏🙏🙏
@marimuthu175
@marimuthu175 8 ай бұрын
Good morning amma.netru unkalai thiruchenthurla neril pathathu rompa happy ya irunthathu
@rubynadevidevi6269
@rubynadevidevi6269 8 ай бұрын
நன்றி மேடம் ❤
@ubiubiabi2718
@ubiubiabi2718 8 ай бұрын
அருமையான பதிவு அம்மா
@kishoremano2196
@kishoremano2196 8 ай бұрын
நன்றி அம்மா
@shivanithoughts
@shivanithoughts 8 ай бұрын
Thiruchendur la 6 naalum unga sorpolivu arumai.neril parthathu nandraga irunthathu..athuvum soora samhara andru ungal pechu arumai ...andraikku peitha malai indrum peithu kondu irukkirathu....vinnai muttum sound arogara ......vinnai mutti malai taraiyai thotuvitathu ...nandri amma
@premabhuvana6499
@premabhuvana6499 8 ай бұрын
மிக்க நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏
@mukeshnglvloger2067
@mukeshnglvloger2067 8 ай бұрын
திருச்செந்தூரில் தங்களை காணும் வாய்பை இறைவன் அருளினார் 🙏
@myhouse5689
@myhouse5689 8 ай бұрын
Thank u amma ❤
@velsurya6548
@velsurya6548 8 ай бұрын
Romba nandri amma🙏💐💐💐
@user-ib8gl6dr3k
@user-ib8gl6dr3k 8 ай бұрын
அம்மா. Thanks ma. நான் சஷ்டி விரதம் நல்ல விதமாக. முடிந்து. தங்கள் வழி காட்டியது நன்றி. அம்மா
@user-py7po6qo9g
@user-py7po6qo9g 4 ай бұрын
Super super super super super super super super super super super super super ❤
@nilaartist3122
@nilaartist3122 8 ай бұрын
Rmba nanri amma🙏
@jeyak6045
@jeyak6045 8 ай бұрын
Nandri amma
@user-jd3pc9uy5v
@user-jd3pc9uy5v 8 ай бұрын
Super super
@jansiranivijaya7282
@jansiranivijaya7282 8 ай бұрын
நன்றி சகோதரி 🙏🙏🙏❤️🌹
@raghus6424
@raghus6424 8 ай бұрын
நன்றி அம்மா ❤❤❤
@ananthsivakami5369
@ananthsivakami5369 8 ай бұрын
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@bhuvibhuvi9258
@bhuvibhuvi9258 8 ай бұрын
Nantry Amma 🙏
@Periyasamy-zu6dc
@Periyasamy-zu6dc 8 ай бұрын
NanriAmma
@ambikaravi8058
@ambikaravi8058 8 ай бұрын
Vanakkam amma
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 8 ай бұрын
Om namah shivaya Om murugaa vetrivel murugaa Arumai Remba nanri Amma
@murugans2299
@murugans2299 8 ай бұрын
Thanks Akka 🙏🙏🙏🙏
@vmpssivasaranya5491
@vmpssivasaranya5491 8 ай бұрын
🙏Om Vailli devayani muruga potri 🙏
@user-oh9tw8rq5b
@user-oh9tw8rq5b 8 ай бұрын
Thank. You
@shenbagavalli5582
@shenbagavalli5582 8 ай бұрын
அம்மா வணக்கம் நான் உங்கள் மாணவி என் மகனும் மருகளும் சஷ்டி விரதத்தை தங்கள் வழிகாட்டிய முறையில் சிறப்பாக இன்று முடித்தார்கள் நன்றி மற்றும் நான் திருசெந்தூ க்கு போக முடிய வில்லை என்ற மனக்குறை நீங்கியது நீங்கள் தினமும் கோயிலை பற்றி கூறியதும் சூரசம்ஹாரத்தையும் என் குருவின் மூலமாகவே பார்த்ததை மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன் நன்றி நன்றி...
@TamilChelvi-kk8mf
@TamilChelvi-kk8mf 8 ай бұрын
Amma thank you .
@pushpaayyappan5507
@pushpaayyappan5507 8 ай бұрын
Kaalai vanakkam amma 🙏🙏🙏🙏
@darvincyleonardo4006
@darvincyleonardo4006 Ай бұрын
நன்றி! அம்மா 🙏
@archananagaraj6874
@archananagaraj6874 8 ай бұрын
Thank you amma ❤❤
@revathysundramoorthy3811
@revathysundramoorthy3811 8 ай бұрын
Nandri Madam🙏
@dharanikumar5740
@dharanikumar5740 8 ай бұрын
Romba nandri amma..ungal pathivugalai ketu thaan sashti viratam irunthen! Melum nala pathivugalai pathivu seithu anaivarukum uthavi seiyum ungalai vanangugiren
@user-vy4cb3bk2r
@user-vy4cb3bk2r 8 ай бұрын
Om sakthi parvathi
@KavidhaBalu
@KavidhaBalu 8 ай бұрын
Nantri Amma 🙏🙏🙏
@kalaipriyan.R.S
@kalaipriyan.R.S 8 ай бұрын
Amma nalla video thanks amma
@kalaiyarasikanagaraj3645
@kalaiyarasikanagaraj3645 8 ай бұрын
Nantri.amma
@user-vy4cb3bk2r
@user-vy4cb3bk2r 8 ай бұрын
Om namah shivaya
@swarnalatha5351
@swarnalatha5351 8 ай бұрын
Today for my son job interview is there pleas give blessing to him.amma your words are so precious for me om nama shivaya om muruga potri nandri amma❤
@SARASWATHIK-hz2ty
@SARASWATHIK-hz2ty 8 ай бұрын
குரு வணக்கம் அம்மா 🙏🏻
@hemapriya8606
@hemapriya8606 8 ай бұрын
Amma unga chanel pathu dha na Ella samiyum kumbiduven super Amma ❤
@user-ey4tn4si7h
@user-ey4tn4si7h 8 ай бұрын
Om murugan thunai
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 Ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிகவும்உபயோகமான தகவல் அம்மா ! மிக மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
@praveenramu1767
@praveenramu1767 8 ай бұрын
Thank you amma🙏
@jayaraja2007
@jayaraja2007 8 ай бұрын
வணக்கம் குருமாதா 🙏💐
@pancavarnamraman965
@pancavarnamraman965 8 ай бұрын
Thank you Amma 🙏🙏🙏
@venusgold7336
@venusgold7336 8 ай бұрын
சோம வார விரதம் கடைபிப்பிடி க்கிரேன் அம்மா
@poojapoorni1543
@poojapoorni1543 8 ай бұрын
Amma niigal solliyatha Pola Murugar vazipadu panninen amma .Santhosam magizchi amma ❤
@thulasimalu8366
@thulasimalu8366 8 ай бұрын
Amma neenga rmbha super ah explain panndringa amma .....❤
@Ezhilarasii
@Ezhilarasii 8 ай бұрын
Vanakam Amma! Migaperiya manavethanail irukiren.. antha sivanthan ippathivai paarka vaithar ena ninaikiren. Ippathivai thanthatharku mikka nantri nga Amma! Sivanin magale!
@SivaPriya-jr9fg
@SivaPriya-jr9fg 8 ай бұрын
Nandriamma
@manjulakrishnamurthy4467
@manjulakrishnamurthy4467 8 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 8 ай бұрын
எந்த ராசியில். எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 😢 கடவுள் இல்லை எண்ட்று சொல்லுவார் 😢🎉😢
@rathajayalakshmi6332
@rathajayalakshmi6332 8 ай бұрын
Amma ungal pechai kettale video pathivugal kadaipidithale karma karayuthu. irai arul valaruthu guruvaga neengal thonri yulleergal.ungalal naanum mahizhvaha vazhkiren. Ungal Pani melum valarattum yellorum payan adaiyattum.neengal vazhga valamudan
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 24 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 65 МЛН