இயற்கை பூச்சிவிரட்டியால் இனிக்கும் மா விவசாயம்!

  Рет қаралды 74,292

Save Soil - Cauvery Calling

Save Soil - Cauvery Calling

5 жыл бұрын

#3ஜீவேப்பங்கொட்டைகரைசல் #பூச்சிதாக்குதல்
#ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement
Click here to subscribe for Isha Agro Movement latest KZfaq Tamil videos:
kzfaq.info/love/tYf...
இரசாயன விவசாய முறையினால் தடுக்க முடியாத பூச்சி தாக்குதலையும், பிஞ்சு உதிர்வையும் கட்டுப்படுத்திய வேப்பங் கொட்டை 3g கரைசல்
நமது ஈஷா விவசாய இயக்கத்தின் தொலைபேசி எண்ணிற்கு மா சீசன் தொடங்கயிருப்பதால் மா விவசாயம் பற்றி தொடர்ச்சியான தொலைபேசி அழைப்பு நமக்கு வந்த வண்ணமே இருந்தது. அதில் பெரும்பாலான கேள்விகள் மாமரத்தில் பூ உதிர்தல், சாறு உறிஞ்சும் பூச்சி, தத்துப்பூச்சி, பிஞ்சு உதிர்தல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கேட்டு தொடர்பு கொண்டனர்.இந்தக் கேள்விக்கு தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சார்ந்த ஈஷா விவசாய இயக்க முன்னோடி விவசாயி திரு காமேஷ் அண்ணா அவர்களைத் தொடர்பு கொண்டோம் நாம் தொடர்பு கொண்ட நேரமும், நமது கேள்விக்கான தீர்வும் மிக சரியான பொருந்திப் போனது. தன்னுடைய நிலத்தில் மா காய்ப்பு பருவத்தில் தொடக்கத்தில் வரும் இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வாக இயற்கை முறையில் தன்னுடைய தோட்டத்தில் கடைபிடித்து வரும் வேப்பங்கொட்டை 3ஜி கரைசலை தற்போது தயாரித்து கொண்டிருப்பதாகவும், நாளை மறுநாள் அதனை தெளிப்பதாகவும், தாங்கள் நேரில் வந்தால் அதனை அனைத்து விவசாயிகளிடமும் பகிர வாய்பாக இருக்கும் என நமக்கு அழைப்பு கொடுத்தார்.
நமது குழுவும் ஒரு நாள் கழித்து அண்ணாவின் தோட்டத்திற்கு காலை 6 மணிக்கு சென்றோம். அண்ணா அவர்கள் நம்மை வரவேற்று தனது 60 ஏக்கர் மாந்தோப்பைச் சுற்றிக் காட்டிக்கொண்டே தற்போது தமது பகுதியில் மற்ற மா விவசாயிகள் செய்து வரும் விவசாயம் பற்றியும் தன்னுடைய இயற்கை முறை விவசாயம் பற்றியும் நமக்கு தகவல் கொடுத்துக் கொண்டே வந்தார். சிறிது நேர பண்ணை பார்வையிடலுக்கு பின் தனது தோட்ட பணியாளர்களை நமக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டு, இன்று தனது தோட்டத்தில் தெளிக்கப்படும் வேப்பங்கொட்டை 3g கரைசல் தயாரிப்பு பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் நம்மிடம் எடுத்துக் கூறினார்.மா விவசாயத்தில் மிகப்பெரிய பாதிப்பு பூ பிடிக்கும் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் தான்.அவற்றிற்கு நான் இரசாயன விவசாயம் செய்த காலங்களில் தீர்வு தேடிய போது அதற்கான பொருள் செலவு மிகவும் அதிகமாக இருந்தது. அக்காலகட்டத்தில்தான் ஈஷா விவசாயத்தின் அறிமுகம் கிடைத்தது. பல்லடத்தில் 2015 ஆண்டு நடைபெற்ற சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாய பயிற்சியில் 9 நாள் கலந்து கொண்டு, பின் அதன்பிறகு படிப்படியாக எனது விவசாயத்தினை அம்முறைக்கு மாற்றியமைத்தேன். இந்த விவசாய முறையில் செலவு மிகக் குறைவாகவும், விளைச்சலின் அளவு அதிகமாகவும் நன்றாகவும் உள்ளது. மா பூ பூக்கும் பருவம் தொடங்கியதும் அதனை பாதிப்படை செய்வது தத்துப்பூச்சி, சாறு உறிஞ்சும் பூச்சி, சிறிய வண்ணத்துப்பூச்சி போன்றவையும் பூ கொட்டும் பிரச்சினையும் தான். இதற்கு இரசாயன விவசாய முறையில்
எனக்கு வருடத்திற்கு ஏக்கருக்கு 25000 வரை செலவாகும்.இரசாயன தெளிப்பிற்கு பின் விளைச்சல் குறைவாகவும், விளைந்த மாம்பழத்தினை சந்தைப்படுத்துவதிலும் பின்னடைவும் ஏற்படும்.
இதற்கான தீர்விற்கு நான் ஈஷா விவசாய இயக்கத்தை
அணுகியபோது அவர்கள் ஈஷா விவசாய இயக்க முன்னோடி விவசாயி தாரபுரம் திரு ஜெகதீஸ் அண்ணா அவர்களின் தொலைபேசி எண்ணை தந்தார்கள். நான்அவரை தொடர்பு கொண்டு போது மா விவசாயத்தில் பூ பூக்கும் பருவத்தில் ஏற்படும் பிரச்சனைக்கு வேப்பங்கொட்டை 3g கரைசல் கலவையை தயாரிக்கும் முறையைப் பற்றியும்,பயன்படுத்தும் முறை பற்றியும் விளக்கி கூறினார்.அதன்பின் அந்தக் கரைசலை எனது தோட்டத்தில் தயார் செய்து தெளித்ததில் பலன் பல மடங்கு தெரிந்தது. குறைந்த செலவில் இந்த பாதிப்புகளில் இருந்து மீள முடிந்தது.வருடத்திற்கு ஏக்கருக்கு 4500 ரூபாய் மட்டுமே செலவானது. இதுவே எனக்குப் பெரும் பொருளாதார சேமிப்பை ஏற்படுத்தியது.
இந்தக் கரைசலை கொடுத்தவுடன் தத்துப்பூச்சி, சாறு உறிஞ்சும் பூச்சிகள் உடனே கட்டுக்குள் வந்து விடுகிறது. இதனை தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் கழித்து அனைத்து பூச்சிகளும் முற்றிலும் அழிந்துவிடுகிறது. இந்த தெளிப்புக்கு பின் பூ கொட்டுவதைத் தடுக்கவும்,பிஞ்சு உதிர்வை தடுக்கவும் நான்கு நாட்கள் கழித்து ஜீவாமிர்தக் கரைசல், புளித்த மோர் கரைசல், தெளித்தால் பூ கொட்டுவதும்,பிஞ்சு உதிர்வதும் கட்டுப்பட்டு, மா காய்ப்பு நன்றாக இருக்கிறது. இந்த முறையில் அறுவடை செய்யப்படும் மாங்கனிகளை சந்தைப்படுத்து மிகவும் சுலபமாகவும், விலை கூடுதலாக நிர்ணயம் செய்யவும் முடிகிறது.
எனக்கும், தமிழக விவசாயிகளுக்கும் தகுந்த ஆலோசனைகளை வழங்கி விவசாயிகளின் வாழ்வு சிறக்க சேவை புரியும் ஈஷா விவசாய இயக்கத்திற்கு எனது நன்றிகள்.
விடைபெறும் போது இவரை போன்ற விவசாயிகளின் தீர்வுகள் தான் புதிய இயற்கை முறை விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கிறது எனவே அண்ணாவிற்கு நமது நன்றி களை கூறி விடைபெற்றோம்.
Phone: 8300093777
Like us on Facebook page:
/ ishaagromovement

Пікірлер: 36
@user-zo3ql3ol5q
@user-zo3ql3ol5q Ай бұрын
நல்ல பதிவு நன்றி சகோ
@gopikrishnashanmugam8388
@gopikrishnashanmugam8388 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா. மிகவும் பயனுள்ள தகவல்...
@sangeethaselvaraj1949
@sangeethaselvaraj1949 3 жыл бұрын
Excellent Information. Thank you so much.
@gopikrishnashanmugam8388
@gopikrishnashanmugam8388 3 жыл бұрын
நன்றி
@antonjoseph5678
@antonjoseph5678 Жыл бұрын
🤝 thank you anna ..👍 🙋. Hi
@karuppaiyanswamy3911
@karuppaiyanswamy3911 2 жыл бұрын
Arumai
@SelvamSelvam-db8ql
@SelvamSelvam-db8ql 3 жыл бұрын
அண்ணே எங்க மரத்தில பூவெல்லாம் கருகி போயிடுச்சுன்னா என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் சின்ன சின்ன பூச்சிகள்
@sivakumarkumar3912
@sivakumarkumar3912 3 жыл бұрын
Super Anna.....
@selvraj3549
@selvraj3549 2 жыл бұрын
Pungan oil veppamoil mixed called ponneem mixture
@tambuskitchen4881
@tambuskitchen4881 3 ай бұрын
சார் வணக்கம் வீட்டில இரண்டு மரம் இருக்கு அதற்கு என்ன என்ன செய்வது காய் உள் கருப்பாக உள்ளது பழுக்காமல் அழுகிவிடுகிறது என்ன செய்வது
@subbiahmadurai7526
@subbiahmadurai7526 2 жыл бұрын
இந்த 3G கசாயத்தை 20 ஏக்கருக்கு பிளாஸ்டிக் டிரம்க்குப் பதில் சிமிண்ட் வாட்டர் டாங்தில் தயாரிக்கலாமா! உடன் பதில் தரவும்.
@gilbert4862
@gilbert4862 Жыл бұрын
கோமியம் இல்லாம வெறும் தண்ணி கலக்கலாமா? 🙋‍♂️
@gayatrirajesh7830
@gayatrirajesh7830 3 жыл бұрын
Can we this for house garden and terrace garden? In Chennai it’s difficult to get veepam kottai?What to do
@sangeethaselvaraj1949
@sangeethaselvaraj1949 3 жыл бұрын
You can buy veppam punnaku instead neem cake
@karmugilkumaravel340
@karmugilkumaravel340 3 жыл бұрын
இந்த 3ஜீவேப்பங்கொட்டைகரைசல் மரவள்ளியில் விழும் மாவு பூச்சியை (mealybugs) கட்டுப்படுத்துமாங்க?
@karuppaiyanswamy3911
@karuppaiyanswamy3911 2 жыл бұрын
Mmm
@dhamotharandhamotharan9671
@dhamotharandhamotharan9671 Жыл бұрын
எறும்பு அதிக அளவில் உள்ளது என்ன செய்வது பதில்
@selvraj3549
@selvraj3549 2 жыл бұрын
Please try with ponneem liquid available readily which is effective
@srsubramanisubramani255
@srsubramanisubramani255 Жыл бұрын
Where the ponneem liquid is available
@sridevi-rv2ct
@sridevi-rv2ct 2 жыл бұрын
Kurippu ennannane theriyale
@user-ti6ym9if5b
@user-ti6ym9if5b 6 ай бұрын
மாமரம் காய் காய்க்கவில்லை பிஞ்சு பூ வருது இல்ல அதுக்கு என்ன மருந்து
@murugesan-bc1by
@murugesan-bc1by Жыл бұрын
Mephonenamperplesh
@charlesjeyachandran4472
@charlesjeyachandran4472 3 жыл бұрын
அண்ணாச்சி தூத்துக்குடில ஈஷா மையம் இருக்குதா
@amsnaathan1496
@amsnaathan1496 3 жыл бұрын
ஈஷா பசுமைகரங்கள் இணையத்தில் தேடுங்கள் ,ஈஷா நர்சரியின் தகவல் கிடைக்கும் அவர்களிடம் வேண்டிய விவரங்களை பெற்றுக்கொள்ளலாம்
@Swathi..1306
@Swathi..1306 Жыл бұрын
Srivaikundam la ullathu
@thanjaiamal5282
@thanjaiamal5282 3 жыл бұрын
கதை அதிகம்.
@user-wi3sx9jb9v
@user-wi3sx9jb9v 2 жыл бұрын
I am cumbum i want to contact you I am interested in organic farming
@murugesan-bc1by
@murugesan-bc1by Жыл бұрын
Unka phone number
@SelvamSelvam-db8ql
@SelvamSelvam-db8ql 3 жыл бұрын
அண்ணே எங்க மரத்தில பூவெல்லாம் கருகி போயிடுச்சுன்னா என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் சின்ன சின்ன பூச்சிகள்
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4,3 МЛН
மா சாகுபடி - பிப்ரவரி பராமரிப்பு பூ உதிர்தல், பிஞ்சுகளை தக்கவைத்தல்
8:23
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 22 М.
இயற்கை களைகொல்லி
4:29
Kanishka Imports & Exports
Рет қаралды 47 М.
வேப்பங்கொட்டைக் கரைசல்_Neem seed extract
5:10
Save Soil - Cauvery Calling
Рет қаралды 84 М.
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4,3 МЛН